First Of All டாக்டர் இவ ஏன் மிசசும் இல்ல நான் இவளோட மிஷ்டரும் இல்ல என்று அவன் சொல்லவும் அதை கேட்டு டாக்டர் What என்று அதிர்ச்சியாக கேட்க்க
ஆமா அதான் உண்மை இவ என் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்ட் இவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு நைட் தெரியாம செக்ஸ் நடந்து போச்சு அதுல இந்த மாதிரி இவளுக்கு ஆகிடுச்சு .
எனக்கோ இல்ல இவளுக்கோ இந்த குழந்தை தேவை இல்ல சோ எந்த அறிவுரையும் சொல்லாம இவளுக்கு அபார்சென் மட்டும் பண்றீங்களா என்று அவன் சொல்லவும்
அதை கேட்டு டாக்டர் பெண்மணி கோபமாகி நர்ஸ் நர்ஸ் என்று கோபத்தோடு கத்தினார் .இந்த மாதிரி கல்ச்சர் மறந்த ஆளுகள எல்லாம் விடாதே ன்னு நான் எத்தன தடவ உன்கிட்ட சொல்லிருக்கேன் முதல்ல இவங்கள இங்க இருந்து வெளியே கூப்பிட்டு போ இடியட்ஸ் என்று கத்தினார் .
அதை கேட்டு விக்கியும் கோபப்பட்டான் ஒ நாங்க கல்ச்சர் மறந்த ஆளுக இன்னைக்கு நாட்டுல முக்கால்வாசி பேர் கல்ச்சர் மறந்து இப்படித்தான் இருக்காங்கே அத்தன பேருக்கும் இந்த மாதிரி முடியாதுன்னு சொன்னிங்கனா உங்க ஆஸ்பத்ரியும் சம்பாதிக்காது நீங்களும் சம்பாதிக்க மாட்டேன்கே என்று விக்கி பதிலுக்கு கத்தி கூச்சலிட்டான் .
ஆனால் அவனை பதில் பேச விடமால் கம்பவுண்டர் அவனை வெளியே இழுத்து சென்றார் .
அந்த பொண்ணையும் போ சொல்லுமா என்று டாக்டர் தலையில் கை வைத்தவாறு சொல்ல
நர்ஸ் சுவாதியிடம் சொல்ல சுவாதி அவளாகவே வெளியே போனாள் .
பின்னர் வெளியே கத்தி கொண்டு இருந்த விக்கியை சமாதானப்படுத்தி காருக்கு கூப்பிட்டு போனாள் .
ஏன் விக்கி இப்படி கோபம் படுற நீ கொஞ்சம் பொறுமையா இருந்த அவங்க கிட்ட நான் பேசி இன்னேரம் செஞ்சுருக்கலாம் .
இந்த கிழடி கிட்ட எல்லாம் எவளவு பேசுனாலும் ஸ்கூல் டிச்சர் மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் பாடம் நடத்திகிட்டு தான் இருக்கும் .ஒன்னும் பண்ணாது , என்றான்.
அவங்க வயசனாவங்க அப்படித்தான் பேசுவாங்க நீ அதுக்குன்னு அவங்க கிட்ட உடனே கோபப் பட்டு பேசுவியா என்றாள் .
என்ன வயசனாவங்க ஒழுங்கா சொன்னா சொல்றத மட்டும் செய்ய வேண்டியது தானே அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கு என்றான் .
நீ சொல்ற வேலைய சொன்னவுடனே கேக்கறதுக்கு அது என்ன உன் ஆபிஸ் பியுன்னு நினைச்சியா அவங்க டாக்டர் அப்படித்தான் பேசுவாங்க நீதான் பொறுமைய இருந்துருக்கணும் .
என்னையே நீ பொறுமையா இருக்க சொல்றியா நீ மட்டும் அன்னைக்கு பொறுமையா இருந்துருந்தா இன்னைக்கு இவளவு தூரம் வந்துருக்காதுடி என்று அவளிடிம் கோபப்பட்டான்
இங்க பாரு விக்கி சும்மா சும்மா நடந்ததே பத்தி பேசிகிட்டு இருக்காத அதால ஒரு பிரயோசனமும் இல்ல இனி என்ன பண்ணாலாம்னு பொறுமையா யோசிப்போம் என்றாள்
இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு சீக்கிரம் நீ போயி அபார்சென் பன்னு அதான் நமக்கு நல்லது என்றான் .
அதான் அவங்க பண்ணமாட்டேன்னு சொல்லி அனுபிச்சு வச்சுட்டாங்களே விக்கி என்றாள் .
மும்பைல இது ஒன்னு மட்டும்தான் ஆஸ்பத்ரியா வா வேற எதுக்கு ஆச்சும் போவோம் என்று அவளை வேறு ஒரு ஆஸ்பத்ரிக்கு கூப்பிட்டு சென்றான் .
ஆனால் எல்லா ஆஸ்பத்ரியிலும் அவர்கள் கணவன் மனைவிக்கான சான்று கேட்டார்கள் . எந்த ஆஸ்பத்ரியிலும் யாரும் அவர்களுக்கு அபார்சென் பண்ண ஒத்துக்கவில்லை .
இறுதியாக ஒரு ஆஸ்பத்ரியில் விக்கி ஒரு ஆண் மருத்தவரிடம் பேசி அவரை சமாதனப்படுத்தி அபார்சென் பண்ண ஒத்துக்க வைத்தான் ஆனால் அன்று நேரமாகி விட்டதால் அடுத்த நாள் வர சொல்லி இருந்தார்கள் .
பாத்தியா கடைசியா ஒரு ஆம்பள டாக்டர் தான் ஒத்துகிட்டார் .அதான் ஒரு ஆணோட பீலிங் இன்னொரு ஆணுக்குதான் தெரியும் என்று சுவாதியிடம் சொல்லி சிரித்தான் .