என் காதலி Part 3 124

கதவை புட்டி விட்டு வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கி கொண்டே வெளியே வந்தாள் .என்னடி ரொம்ப உடம்புக்கு முடியாட்டி வா ஹோஸ்பிட்டால் வேணும்னா போவோமா என கேட்டார்கள்.இல்லை வேணாம்க்கா என்று சொல்லி சமாளித்தாள் .

அதன் பின் ஒரு மூன்று நாட்கள் பூட் பாய்சன் ஆனது போல அஞ்சலி அக்காவிடம் சுவாதி நடித்தாள் . அஞ்சலி அக்காவும் வார நாட்கள் ஆனதால் வேலைக்கு போய் விடுவார்கள் . அதனால் ஓரளவு அவர்களுக்கு தெரியமால் மறைத்தாள் .

அன்று சனிகிழமை வந்தது அஞ்சலி அக்காவுக்கும் லீவ் என்பதால் ரூமில் அவளோடு இருந்தார்கள் .அன்றும் அவளுக்கு வழக்கம் போல வாந்தி வருவது போல இருந்தது .ஆனால் வாந்தி எடுத்தால் அஞ்சலி அக்கா கண்டுபுடித்து விடுவார்கள் என்று முடிந்த வரை அடக்கி கொண்டு இருந்தாள் .

சரி சுவாதி ரெண்டு வாரம் நான் ஊருக்கு போனதாலும் நீ உடம்புக்கு முடியாம இருந்ததாலும் நம்ம ரெண்டு பேரும் எதுவும் சரியா பேச முடியல . அதனால இன்னைக்கு ரெண்டு பேரும் எதாச்சும் ஷாப்பிங் மால் போயி ரெண்டு பேறும் ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே ஹிர்த்திக் ரோசன் நடிச்ச புது படம் ஒன்னு இந்த வாரம் இறங்கிருக்குன்னு ஆபிஸ்ல சொன்னாளுக நம்ம தியேட்டர் போயி நல்லா ஹிர்த்திக் ரோசன படம் பாத்துகிட்டே சைட் அடிப்போம் என்றார்கள் சிரித்து கொண்டே .

சுவாதிக்கு தெரியும் அவளால் வெளியே போனால் வாந்தி எடுக்கமால் இருக்க முடியாது என்று அதனால் நீங்க மட்டும் போயிட்டு வாங்கக்கா நான் வரல என்றாள் . ஏண்டி உங்க ஊர் சூர்யா ஆர்யாவ மட்டும்தான் சைட் அடிப்பியா எங்க ஊர் ஹிர்த்திக் ரோசனலாம் பாக்க மாட்டயா என்று கிண்டல் அடித்தார்கள் .

அதலாம் இல்லக்கா எனக்கு உடம்புக்கு முடி என்று சொல்வதற்கு முன் அவளால் வாந்தியை அடக்க முடியாமல் வாயை தன் கைகளால் பொத்தி கொண்டு வேகமாக பாத் ரூம் போனாள் .போயி நல்லா வாந்தி எடுத்து முடித்து விட்டு வெளியே மூச்சு வாங்கி கொண்டே தன் வாயில் உள்ள வாந்தி துளி களை துடைத்து கொண்டு வந்தாள் .

அவள் வந்தவுடன் அஞ்சலி அக்கா அவளை முறைத்து பார்த்தவாறே நின்று கொண்டு ஓகே யார் இதுக்கு காரணம் என்று கேட்க சுவாதி தீடிக்கிட்டு நின்றாள்

என்னாக்கா சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலாக்கா என்று மீண்டும் பொய் சொல்லி மறைக்க பார்த்தாள் .

அதை கேட்டு சிறிது நேரம் எதுவும் பேசமால் அமைதியாக அஞ்சலி அவளை முறைத்து பார்த்துவிட்டு என்னயே என்ன நினைச்ச வந்ததுல இருந்து நான் மூனு நாளும் வேலைக்கு போயிட்டு வந்து தூங்கி கிட்டு மட்டும் இருக்கேன்னு நினைச்சியா

இல்ல நீ சொன்னத நான் அப்பிடியே நம்பிட்டேன்னு நினைச்சியா நானும் ரெண்டு குழந்தைக பெத்தவதான் எனக்கும் தெரியும் நீ எடுக்கறது பித்த வாந்தி இல்ல கர்ப்ப வாந்தின்னு சோ ஒழுங்கா சொல்லு யாரோட இது நடந்துச்சு என அஞ்சலி கோபமாக கேட்க

சுவாதி அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லமால் அமைதியாக இருந்தாள்

தொடரும்