சரி அவர விடு சுவாதி எதுக்கு உன் ஆபிஸ்க்கு வந்தா அத முத சொல்லு என்று வள்ளி ஆர்வமாக கேட்டாள் .
உண்மை விசயத்தை சொன்னால் வள்ளி ஆடி போயிடுவாள் .அதோடு சுவாதியை அபார்சன் பண்ண சொன்ன விஷயம் தெரிந்தால் எங்கிட்டும் வள்ளி கடுப்பில் பேசமால் கூட போயிடுவாள் என புரிந்து கொண்டு
ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு என் கம்பெனில ஏதும் வெகன்சி இருக்கான்னு கேட்டு வந்தா அதுவும் ஒரு தடவதான் வந்தா அவளவுதான் அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்ல என்றான் .
நிஜம் சொல்றியா இல்ல பொய் சொல்றியா என்றாள் வள்ளி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் என கேட்டான் விக்கி .இல்ல உன் முகரைய பாத்தா ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே என சந்தேகத்தோடு கேட்டாள் .
அதாலம் ஒன்னும் இல்லையே என்று விக்கி சமாளித்தான் .ஆனால் வள்ளி விடமால் சந்தேகத்தோடு இல்லையே என்று அவள் பேச ஆரம்பிக்கும் போது அவளுக்கு வாந்தி வந்து வேகமாக பாத் ரூம் போயி வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அதை பார்த்த விக்கி என்னடா எதுவும் கெட்டு போனாத சாப்பிடாலா இப்படி வாந்தி எடுக்குறா என மணியிடம் கேட்டான் .டேய் லூசு அது கர்ப்ப வாந்திடா மாசமா இருக்கப்ப பொண்ணுக இப்படிதான் வாந்தி எடுப்பாளுக என்றான் .
ஒ அப்படியா எனக்கு இந்த கர்ப்பம் ,குழந்தை ,கண்றாவி இத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுடா என்று விக்கி சொன்னான்.
விக்கி அவனுக்கு கர்ப்பம் குழந்தை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் வேளையில் அவன் குழந்தையை அவனுக்கே தெரியமால் சுமந்து கொண்டு கர்ப்பமாக உள்ள சுவாதி ஹோஸ்டலில் அதே கர்ப்ப வாந்தியை எடுத்து கொண்டு இருந்தாள்.
சுவாதி கருவை கலைக்கமால் ஹோஸ்டல் வந்து யாருக்கும் தெரியமால் ஒரு வாரம் சமாளித்து விட்டாள் .அதே போல் தன் வேலை பார்த்த பாம்பே தமிழ் ஏப் எமில் இருந்தும் ஒரு இரண்டு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் .
ஹோஸ்டலில் சுவாதியின் ரூம் மெண்டான அஞ்சலி அக்காவும் அவங்க வீட்டுகாரறரையும் குழந்தைகளையும் பார்க்க டெல்லி போனதால் இவள் மட்டும்தான் அந்த ரூமில் இருந்தாள் .அதுவும் அவளுக்கு சாதகமாகவே இருந்தது
அதனால் அவள்மட்டும் தனியாக இருந்ததால் அவள் நினைத்த நேரம் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
ஆனால் அன்று அஞ்சலி அக்கா ஊரில் இருந்து வரவும் இவள் சரியாக அந்நேரம் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அவள் வாந்தி எடுப்பதை பார்த்த அஞ்சலி என்னடி நேத்து ஏதும் பார்ட்டி போயி நிறைய குடிச்சுட்டியா என கேட்டார்கள் .
அஞ்சலி அக்காவிடம் வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே வாங்கக்கா நீங்க எப்பக்கா வந்திங்க என சுவாதி கேட்டாள் .
நான் வரரது இருக்கட்டும் நீ எந்த பார்ட்டில போயிட்டு கண்டதையும் குடிச்சுட்டு வந்து இப்படி ஹங் ஓவர் ஆகி கிடக்க என கேட்டார்கள் . அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சுவாதிக்கு தெரியவில்லை . ஆனால் உண்மையை மட்டும் அவர்களிடம் சொல்லமால் மறைக்க நினைத்தாள் .
அதலாம் பார்டி போயி எதுவும் குடிக்கலாக்கா நேத்து ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னு நம்ம பாய் கடைல போயி பிரியாணி வாங்கி சாப்புட்டேன் அது உடம்புக்கு ஒத்துக்கல போல என்று பொய் சொன்னாள் .
உனக்கு ஏண்டி இந்த ஆசை அப்படியே பிரியாணி சாப்படனும்னு உனக்கு ஆச இருந்துச்சுனா லீவ் நாள்ல சாப்புட்ருக்க வேண்டியதுதானே .ஏன் இப்படி வீக் டேஸ்ல சாப்புட்டு வேலையவும் கெடுத்துகிற உன் உடம்பையும்கெடுத்துகிற என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சுவாதிக்கு மீண்டும் குமட்டல் ஏற்பட அவசரமாக பாத் ரூம் போனாள் .