அதான் சுவாதி என்றான் .சரி எடுத்து பேசுடா என்றாள் வள்ளி .நான் பேசமாட்டேன் என்று போனை எடுக்காமல் இருந்தான் .அது அடித்து கொண்டே இருந்தது. டேய் போன எடுறா எத ஆச்சும் சிரியஸா இருக்க போகுது என்றாள் வள்ளி .அவன் நான் எடுக்கவே மாட்டேன் என்றான் .
நீ சொன்ன கேக்க மாட்ட என்று அடித்து கொண்டு இருந்த போனை வள்ளி எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள் .
ஹலோ விக்னேஷ் விக்கி இருக்கியா என்று மறுமுனையில் சுவாதி பேசினாள் .இவன் பதில் எதுவும் சொல்லமால் ம்ம் என்றும் மட்டும் சொன்னான் .
விக்கி ப்ளிஸ் எனக்காக grs ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரியா ப்ளிஸ் கொஞ்சம் சிரியஸ் ப்ளிஸ் எனக்காக இந்த ஒரு வட்டம் மட்டும் ஹெல்ப் பண்ணு என்றாள் .
இவன் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் .பின் வள்ளியிடம் ஹாஸ்பிட்டல் இருக்கேன் ஏதோ சிரியஸ்ன்னு சொல்றா என்றான் .
சீக்கிரம் போயி பாருடா என்றாள் . வள்ளி .அவன் சரி என்று சொல்லிவிட்டு காரை எடுத்து கொண்டு சுவாதி சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான் .