உன்ன விட்டு எங்கும் போக மாட்டேன் 122

கண்ணாடி அருகே சென்றவன். தனது முகத்தினை பார்த்து செய்யத் மனதிடம். எனக்காக உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். செய்யத் உன்ன மறக்க மாட்டேன். உன் வாழ்க்கையில் இனி ஒரு நிமிடம் நான் வரமாட்டேன். நீ யும் ரோசனும் நல்ல படி வாழனும் என்று சொல்லி அவனின் உடலை விட்டு விலகினான். செய்யத் கழுத்தில் இருந்த அந்த வெள்ளி டைமண்ட் செய்யின் அந்து கீழே விழுந்தது. அதன் பின்பு ரோசன் செய்யத் திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு ஒர் ஆன் குழந்தை பிறந்தது.

5 வருடத்திற்கு பிறகு ரோசன் செய்யத் மகனின் பிறந்த நாள் வீட்டில் கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினர். அப்போது பாத்திமா ஒர் சேரில் அமந்து அனைவரையும் பார்த்தாள். ஒர் நிமிடம் அவள் மீரானை நினைத்தாள். ஒர் கை டப்பென்று அவள் தோளில் விழுந்தது. டக்கென்று திரும்பினால் ஒர் 5 வயது சிறுவன் [Image: 1f466.svg] அவளை பார்த்து சிரித்தான். அவள் கையை பிடித்து பாத்திமா சிரித்து விட்டு ஒய் குட்டி பையா யார் நிங்க என்ற போது மீராள் அங்கே வந்து அந்த சிறுவனை தூக்கினாள்.

சாரிங்க எதும் சேட்டை செய்தானா. பாத்திமா இல்லை என்று தலை ஆட்டி உங்க பையனா ஆமாங்க. பெயர் என்ன என்றதும் மீரான் மீரான் கனி என்று அந்த சிறுவனை தூக்கிச் சென்றாள். மீராள். அந்த சிறுவன் பாத்திமாவை பார்த்துக் கொண்டே சிரித்தான்.

அவளுக்கு அப்போது அந்த குரல் கேட்டது உன்ன விட்டு எங்கும் போக மாட்டேன் பத்து குட்டி எதோ ருபத்துல உன்ன பார்த்துட்டே இருப்பேன். பாத்திமா கண் கலங்கினாள்.

(முற்றும்)