இடைப்பட்ட காலங்களில் அவள் நடவடிக்கை ராஜாவை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. அவர்களுக்குள் உடலுறவும், பெரிதாக பேச்சும் மட்டும்தான் இல்லை.
ஆனால், இயல்பான ஒரு மனைவி செய்யும் எல்லா வேலைகளையும் அவள் செய்தாள். அவனுக்காக சமைத்தாள், அவன் அதிக வேலையிலிருக்கும் போது அவனுக்காக பாலோ, காஃபியோ கொடுத்தாள். வெளியே சொல்லும் போது, எங்கு செல்கிறாள், எப்பொழுது வருவாள் என எல்லாம் தெரிவித்தாள், மிக மிக அவசியமாக ஏதாவது தேவையிருப்பின், அவனை உடன் வரும்படிக் கேட்டாள்! இதையெல்லாம், அவள் முன்பு கூடச் செய்ததில்லை!
எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதாவது மைதிலி ராஜாவைத் தேடி வந்தால், அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு அறைக்கோ, அல்லது வெளியேவோ சென்று விடுவாள்!
அவளது செயல்களால் குழம்பிய ராஜாவே, வேண்டுமென்றே அவளைக் காயப்படுத்தச் சொன்னான்.
என்ன, திருந்துன மாதிரி நடிக்கிறியா? இதுக்கெல்லாம் நான் மயங்கிட மாட்டேன்!
அவள் அடிபட்டாற்போல் அவனைப் பார்த்தாள். பின் சொன்னாள். என்னைக் காயப்படுத்தனும்னு நினைச்சு, நீங்க உங்க தகுதியை குறைச்சுக்கனுமா என்ன? நீங்க ராஜாவாவே இருங்களேன்!
ராஜாவே வாயடைத்துப் போயிருந்தான். மைதிலியிடம் கூட சொல்லியிருந்தான்! அவளை, இன்னும் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று!
ப்ரியாவிடம் எப்போதும் ஒரு திமிர் இருக்கும், அது அவளுக்கு கொஞ்சம் கம்பீரத்தைக் கொடுக்கும். அவளுக்கு விருப்பமில்லாதவற்றை அவளால் நினைத்தாலொழிய, யாராலும் செய்யவைக்க முடியாது!
அவளுடைய இந்தக் குணங்கள் சற்றே முறைபடுத்தப்பட்டிருந்தால், அவளுடைய வளர்ப்பு இன்னும் ஒழுங்காக இருந்திருந்தால், அவளுக்கு இது தனி கம்பீரத்தையும், அழகையும் கொடுத்து, அவளையும், அவள் வாழ்வையும் இன்னும் அழகுபடுத்தியிருக்கும். மாறாக தேவையற்ற பிடிவாதமும், அகங்காரமும், அவளையும், அவளது வாழ்க்கையையும் முழுக்கச் சிதைத்து விட்டது!
ப்ரேமுக்கு சில தேவைகளிருந்தது. முக்கியமாகப் பணம்! சமூகத்தின் முன் கொஞ்சம் நல்லவன் வேஷம், பணத்திற்க்காக நல்ல மருமகன் வேஷம், அலுவலகத்தில் வல்லவன் வேஷம் என்று பல முகங்களும், தேவைகளும் இருந்தது.
ப்ரியாவிற்கு அப்படி எதுவும் பெரிதாக இல்லை. ராஜாவிடம் இருந்த பணமோ, அவனது ஆண்மையோ அவளை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை. அளவுக்கு மீறிய பிடிவாதம், அவனது அன்பைக் கூட உணர விடவில்லை. குடும்பத்தின் முன்பும் எந்த வேஷமும் பெரிதாக அவள் போட்டது இல்லை. நண்பர்கள் வேண்டும் என்று பொய்யாக நடிக்கவில்லை. யாருக்காகவும், பெரிதாக எதையும் பார்த்ததில்லை அவள்!
தேவைகள் இருக்கும் மனிதனை வளைப்பதோ, அடிப்பதோ எளிது! அந்தத் தேவையின் மேல் கை வைத்தால் போதும்! ஆனால், தேவைகளற்ற மனிதனை சாய்ப்பது அவ்வளவு எளிதல்ல! அந்த மனதை வெல்வதும் சாமன்யமானதல்ல. அப்படித்தான் ப்ரியாவை வெல்ல முடியாமல் யோசித்தான் ராஜா!
ப்ரேமைப் போல், லாயரைச் சந்திப்பது, யார் மூலமாவது தூது விடுவது, இப்படி செய்ய வேண்டாம் என்றெல்லாம் ப்ரியா கெஞ்சவேயில்லை! அவனைப் போல் காசு வேண்டும், சொத்து வேண்டும் என்றும் கெஞ்சவில்லை, அதே சமயம், இது வரையிலும், எதற்க்காகவும், அவள் மன்னிப்பும் கேட்கவில்லை.
அதன் பின் ராஜா அவளை அதிகம் பேசுவதில்லை. ராஜாவிற்கே கொஞ்சம் கடுப்பாகிவிட்டது! இப்பொழுது கூட ஆட்டம் காட்டுகிறாளே என்று!
ஆயிற்று!

Super story
இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா இருக்க விருப்பம்