உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 5 149

எந்த மைதிலியைத் தொட விடாமல் செய்வேன் என்று ப்ரேமிடம் சொன்னாளோ, அந்த மைதிலியிடம், அவளது கணவன் ராஜாவையே தொட முடியாமல், தோற்று நிற்கிறாள். எந்த ராஜாவை தொடர்ந்து நிராகரித்தாளோ, அந்த ராஜா இப்போது அவளை நிராகரிக்கிறான். எந்தப் ப்ரேமின் மேல் ஆசை கொண்டாளோ, அந்தப் ப்ரேம் சுத்தமாகக் காணாமல் போயிருந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எப்பொழுது ராஜாவைக் கொஞ்சம் காதலிக்கத் தொடங்கினாளோ, எந்த சுகத்தை, ராஜாவால் பன்மடங்கு அதிகம் தர முடியும் என்று உணர ஆரம்பித்தாளோ, எப்பொழுது அவள், தன்னுடைய திமிர் அதிகம், தான் மாற வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியிருந்தாளோ, அந்தத் தருணத்தில் அவளிடமிருந்து எல்லாமும் பிடுங்கப் பட்டது!

தான் இழந்தது எவ்வளவு என்று அவள் உணரத் தொடங்கினாள்! ஆனால் என்ன செய்வது? அவள் உணரத் தொடங்கும் போது காலம் கடந்திருந்தது!

ராஜா வெளியே சென்று விட்டு, வீடு நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது! ப்ரியா அமைதியாக சோஃபாவில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

சாப்ட்டீங்களா?

அமைதியான அவள் பதிலில், ராஜாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டான்.

ம்…

உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்! இப்பப் பேசலாமா?

தான் சொல்ல வேண்டியதை, அவளேச் சொல்லவும், அவன் இன்னும் ஆச்சரியம் அடைந்தான்.

ம்ம்.. சொல்லு!

உ.. உங்களுக்கு எவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியும்.

நம்ம வெட்டிங் டே ல இருந்து!

அவள் கண்கள் விரிந்தது. அவள் நினைத்தது போன்றே, அன்று, அவன் முன்பே வந்திருக்கிறான்.

அன்னிக்கு, முன்னாடியே வந்துட்டீங்களா?

ஆமா! வீட்டுக்கு 4.30 க்கு நானும், மைதிலியும் வீட்டுக்கு வந்தோம்!

மைதிலியோட எதுக்கு?

நீ, சாயங்காலம் வீட்டுக்கு வர்றப்ப உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு, கொஞ்சம் டெகரேட் பண்றதுக்கும், கேக் வாங்கி வைக்கிறதுக்கும் அவளோட ஹெல்ப் கேட்டிருந்தேன். அதான்…

ஓ… இந்த நிலையிலும் அவளுக்கு, அவர்கள் மேல் பரிதாபம் வந்தது! பாவம்! எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருந்திருக்கும் இருவருக்கும்! வெட்டிங் டே அன்று, அத்தனை நிராகரிப்பிற்க்குப் பின்னும், அவளுக்காக வந்தவனுக்கு அவள் செய்ததுதான் என்ன???

பெரு மூச்சு விட்டவள், சோ, நெக்ஸ்ட் என்ன ப்ளான் என்றாள்!

டைவோர்ஸ் தான்! நீ தேவையில்லாம பிரச்சினை பண்ற எண்ணம் இரு…

அவன் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் குறுக்கிட்டாள்.

அவசியமில்லை… நீங்க எடுக்கும் எந்த முடிவுக்கும், எல்லா முடிவுக்கும் நான் உடன் படுறேன். ஜஸ்ட், என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க! தட்ஸ் எனஃப்…

ராஜாவே ஆச்சரியப்பட்டான்!

அதன் பின் காரியங்கள் துரிதமாக நிறைவேறின. ப்ரியா சொன்ன மாதிரியே, கம்ப்ளீட் சப்போர்ட் கொடுத்தாள். ராஜா கொடுத்த டாக்குமெண்ட்களில் படிக்காமலேயே கையெழுத்திட்டாள்.

அவள் எந்த லாயரிடமும் கன்சல்ட் செய்யவில்லை. அவன் காசு தருவதாகச் சொன்ன போது கூட வேண்டாம் என்றாள். அவளாகவே இன்னொன்றும் சொன்னாள், கோர்ட் ஆர்டர் வந்தவுடன் தானாகவே வீட்டை விட்டு சென்று விடுவதாகச் சொன்னாள்.

2 Comments

  1. இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா‌ இருக்க விருப்பம்

Comments are closed.