உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 5 148

உங்களை என்று பல்லைக் கடித்தாள் அவள்!

ஏய், நாளைக்குதான் நீ வர்றியே, நாளைக்கு அதைப் போட்டுக்கறேன். நீ வா!

ஹலோ, நாம காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் வர்ற, உங்களோட முத பர்த்டே. இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நாளைக்குன்னு இன்னொரு செட்டு தனியா எடுத்து வெச்சிருக்கேன். கம்முன்னு இன்னிக்கு இதை போட்டுக்கோங்க. நான் சரியா 12 மணிக்கு ஃபோன் பண்ணுவேன், விஷ் பண்ண, ஓகேயா?

சரிடி! ரொம்பத்தான், என்னமோ இதுக்கு மட்டும் ஸ்பெஷலா ட்ரீட் வெக்கிற மாதிரி! நீயெல்லாம் எனக்கு ட்ரஸ் வாங்கியிருக்கேன்னு சொன்னதே எனக்குல்லாம் ஆச்சரியமா இருக்கு என்றூ கிண்டல் செய்தான்.

உங்களை வந்து வெச்சுக்கறேன். சரி வெச்சுடறேன். ஆங்… ஹல்லோ, உங்க கிஃப்ட் என் ரூம்ல இருக்கும். உங்க ரூம்ல தேடிட்டு இருக்காதீங்க. உங்க ரூம் கீ, என்கிட்ட இருக்கு! பை. மார்னிங் மீட் பண்ணலாம்.

அவனும், அவள் சொன்ன படியே, 9 மணிக்கு மேல் கிளம்பி கோடம்பாக்கம் வீட்டிற்குச் சென்றான்.

அவளது அறையில், அவளது கட்டிலில், ஒரு கிஃப்ட் பார்சல் இருந்தது. அதில், ‘என் மாமாவிற்க்காக’ வித் லவ் மைதிலி என்று எழுதியிருந்தது.

இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை என்று அலுத்துக் கொண்டாலும், சிரித்துக் கொண்டே, அவள் சொன்ன படி செய்து, 12 மணிக்காக ஹாலில் வெயிட் பண்ண ஆரம்பித்தான்!

சரியாக 12 மணிக்கு, அந்தச் சத்தம் கேட்டது! மொபைலில் இருந்து அல்ல!

அவனுடைய ரூம் கதவு திறந்திருந்தது! இவனும் குழம்பியவாறே சென்று பார்த்தான். அங்கே…

2 Comments

  1. இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா‌ இருக்க விருப்பம்

Comments are closed.