உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 5 148

மைதிலி சலுகையாய் அவன் மார்பில் சாய்ந்து அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்!

தா… இது மாதிரி ஏதாவதுன்னாதான், பக்கத்துலியே வர்றது. இல்லாட்டி 10 அடி தள்ளியே நிக்குறது. ப்ரேமுக்கு ப்ளான் பண்ணப்பல்லாம், மாசக் கணக்குல் ஒரே வீட்டுல இருந்துட்டு, இப்ப என்னடான்னா, நேர்ல மீட் பண்றதுக்கு கூட பிகு பண்றது. எல்லாம் நீ பண்ணிட்டு, நாங்க பேசி கவுத்துடுவோம்னு என்னைப் பத்தி எங்கிட்டயே கம்ப்ளெயிண்ட்… ரொம்பத்தான் நீ, போடி!

ஹா ஹா…

சிரிக்காத! மனுஷனை கடுப்பேத்திட்டு, இப்ப என்ன சிரிப்பு!

சொன்ன படியே, 6 மாதங்கள் கழித்தே திருமணம் என முடிவாகியிருந்தது.

மைதிலி வீடு வாடகைக்கு விடப்பட்டு, அவள் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டாள்.

நாளை வெள்ளிக்கிழமை, அவனுக்கு பிறந்த நாள்!

மைதிலியை வெளியே சர்ப்ரைசாக கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தவனுக்கு செம கடுப்பு. அவள் ஆளே காணவில்லை. அந்தக் கடுப்பில்தான் ஃபோன் செய்தான்.

ஹாலோ

ஹலோ, எங்க இருக்க மைதிலி?

ஹாய், எப்டி இருக்கீங்க? இன்னிக்கு மீட்டிங் நல்லா போச்சா?

முதல்ல நீ எங்க இருக்க?

நான் ஊருக்கு வந்துட்டேம்பா! அப்பா ஞாபகமா இருந்துச்சு, நீங்க வேற மும்பை போயிட்டீங்க. அதான் நேத்து நைட்டு கிளம்பி ஊருக்கு வந்துட்டேன்.

நேத்து பேசுனப்ப கூட என்கிட்ட சொல்லவேயில்லை.

இல்லப்பா, நாளைக்கு உங்க பர்த்டேயில்ல. அதான், இங்க குல தெய்வம் கோவில்ல உங்க பேருல அர்ச்சனை பண்ணலாம்னு. உங்க கூட ஸ்பெண்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, நீங்க மும்பை போயிட்டதால, மனசுக்கு கஷ்டமா இருந்துச்சா, அதான் வந்துட்டேன்

போ மைதிலி, உனக்காக நான் மீட்டிங்லாம் முடிச்சிட்டு, அவசர அவசரமா ஓடியாந்தா இப்படி பண்ணியிருக்க.

வாட், நீங்க சென்னைக்கு வந்துட்டீங்களா? என்னைச் சொன்னீங்களே, நீங்க என்கிட்ட சொன்னீங்களா, நேத்து பேசுறப்ப? இப்பொழுது இவள் திட்ட ஆரம்பித்தாள்.

இருவருக்குமே கடுப்பாய் இருந்தது.

பெருசா சர்ப்ரைஸ் கொடுக்குறேன்னு சொல்லி இப்புடியே சொதப்புங்க! நான் கேட்டேன்ல, சீக்கிரம் வரமுடியாதான்னு? அப்பல்லாம் கஷ்டம்னு சொல்லிட்டு, இப்ப எதுக்கு வந்தீங்க?

மைதிலி இன்னும் கோபத்தில் இருந்தாள்.

இங்க பாருங்க, எனக்குத் தெரியாது, கோடம்பாக்கம் வீட்ல, உங்களுக்குன்னு டிரஸ் வாங்கி கிஃப்ட்டா வெச்சிருந்தேன். சரி, நீங்களே இல்லையே, நேர்ல பாக்கிறப்ப கொடுத்துக்குலாம்னு வெச்சுட்டு வந்துட்டேன்.

நான் நைட் 12 மணிக்கு ஃபோன் பண்ணுவேன். அதுக்குள்ள, அங்க போயி, குளிச்சிட்டு, அந்த ட்ரஸ்ஸை போடுறீங்க. நான் நைட்டே கிளம்பி, காலையில நேரா அங்கத்தான் வருவேன். சரியா?

அவன் கோபமும் தணிந்திருந்தது. அவள்தான் உடனே கிளம்பி வர்றாளே என்ற காரணத்தால்.

ஏய் பாத்து! இப்பியே அதிகாரம் தூள் பறக்குது! இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருக்குமோ?

பேசாதீங்க நீங்க! சொதப்பி வெச்சுட்டு… ஒழுங்கா நான் சொல்ற மாதிரி செய்யனும்! ஓகே?

கொஞ்ச நாள் முன்னாடி அமைதியின் திருவுருவமாய் இருந்த மைதிலி இது என்று அவளைச் சீண்டினான்.

2 Comments

  1. இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா‌ இருக்க விருப்பம்

Comments are closed.