உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 5 148

உங்கப்பா ரொம்ப மனசு நொந்திருக்கார் ப்ரியா. உடனே, அவங்க உன்னை ஏத்துகலைன்னாலும், அவிங்க கடைசிக் காலத்துல, ஃபுல் சப்போர்ட்டா இருக்க வேண்டியது உன் கடமை! அந்தக் கடமையைனாச்சும் நீ கண்டிப்பா நிறைவேத்தனும். உங்க அம்மாவையும் சேத்துதான் சொல்றேன். அம்மாவோட அருமை எனக்குதான் நல்லாத் தெரியும். அவிங்களுக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா? அவங்களைப் பத்தினாச்சும் நீ கொஞ்சம் யோசிச்சு பாக்கனும்.

நீ எங்க போற, அடுத்து என்ன பண்ணப் போற, எதுவும் எங்களுக்குத் தெரியாது!

ஆனா, உன் வாழ்க்கையில ஒரு வேளை உனக்கு பண ரீதியாவோ, வேற வேலைக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னாலோ, வேறெதாவது அவசிய உதவி தேவைன்னாலோ கண்டிப்பா எங்க சப்போர்ட் உனக்கு இருக்கும். இவரும் செய்வார். நான் சொன்னா கண்டிப்பா செய்வார்!

ப்ரியா முழுதாக உடைந்தாள். பூடகமான பேச்சுதான். இனி ராஜா, என் சொந்தம் மட்டுமே என்ற அறிவிப்பும் இருந்தது!

ஆனால், அதையும் மீறி மைதிலி, ப்ரியாவின் தந்தைக்காக யோசித்தது, ஓரளவு தன்னுடைய மாறிய மனநிலையை புரிந்து கொண்டது, எல்லாவற்றையும் தாண்டி அவள் காட்டிய அளவற்ற அன்பும், கருணையும் அவளை அசைத்து விட்டது!

ராஜாவின் சீண்டல் பேச்சுக்கள் கூட தகர்க்க முடியாத அவளது திமிரை, தராத வலியை அவளது கருணையும், மன்னிப்பும் வழங்கியது! அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது! இந்தக் கருணைக்கு நான் தகுதியானவளா???

மைதிலியையே பார்த்தவள், அவளை மெல்ல அணைத்தாள் ப்ரியா! பின் பிரிந்தவள், மைதிலியின் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்!

ஆல் தி பெஸ்ட் மைதிலி! யூ டிசர்வ்டு இட்! சாரி ஃபார் எவ்ரிதிங்! என்று அவளது கன்னத்தை வருடினாள்!

பின் பெருமூச்சு இட்டவள், ராஜாவைப் பார்த்துச் சொன்னாள். கையெடுத்து கும்பிட்டாள். ஐ யம் சாரி! ஐ யம் ரியலி வெரி சாரி! முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க! ஆல் தி பெஸ்ட் டூ போத் ஆஃப் யூ! பை!

அவளது குரலில் உண்மை இருந்தது! பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பி விட்டாள்! அவர்களுக்குத் தெரிந்திருந்தது, இனி அவர்கள் வாழ்வில், அவள் வரப்போவதில்லை என்று!

ராஜா கடுப்பின் உச்சத்தில் இருந்தான். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் மைதிலி? அவன் மும்பையிலிருந்து மாலைதான் வந்திருந்தான்.

ப்ரியா விலகிச் சென்று 4 மாதங்களாகியிருந்தது.

ப்ரியா விலகிய பின், கல்யாணம் பேச இரு வீட்டிலும் முயன்ற போதே மைதிலி சொல்லிவிட்டாள். கண்டிப்பாக கல்யாணம், 6 மாதம் கழித்து மட்டுமே இருக்க வேண்டும் என்று.

ராஜா சொன்ன எந்தச் சமாதானமும் செல்லுபடியாகவில்லை!

ப்ளீஸ்ப்பா, எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு! யாராவது, ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு. ப்ளீஸ், என்னை புரிஞ்சிக்கோங்களேன்!

4 மாதம் முன்பு, அவள் இதைச் சொன்ன போதே அவன் கடுப்பாகியிருந்தான்.

கோபமா? மெல்ல, பின்னிருந்து அவன் தோளில் சாய்ந்தாள்!

என் ராஜாவுக்கு கோபமா?

இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை! காரியம் ஆகனும்னாதான் வந்து ஒட்டுவ. இல்லாட்டி எட்டி நின்னுக்குவ. ரொம்ப பண்ற மைதிலி!

இப்பியும் காரியம் ஆகனும்னுல்லாம் உங்க பக்கத்துல வரலை. நீங்க இப்பிடி, கோபிச்சிகிட்டு பேசாம இருக்குறது, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அதான். அவளது குரல் கம்மியிருந்தது.

எனக்கும் அவளது உணர்வுகள் புரிந்திருந்தது. மெல்ல முன்புறம் அவளை இழுத்தவன் என் மேல் சாய்த்துக் கொண்டேன். சரி விடு.

இல்லைப்பா, எனக்கு மட்டும் உங்க கூட இருக்கனும்னு ஆசை இருக்காதா? நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு தெரியாதா?

அதான் விடு, எனக்கு ஓகேன்னு சொல்லிட்டேன்ல. ஆனா நீ ரொம்பத்தான். இன்னமும் தாங்க்ஸ் சொல்லக் கிடையாது. ட்ரீட் கிடையாது. ஐ லவ் யூ சொன்னது கிடையாது. அவ்ளோ ஏன், ப்ரேம் முன்னாடி மாமான்னு சொன்ன, அதுக்கப்புறம் நான் கேட்டாலும் அப்பிடிச் சொல்றது கிடையாது!

2 Comments

  1. இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா‌ இருக்க விருப்பம்

Comments are closed.