உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 5 148

கோர்ட் ஆர்டரும் வந்துவிட்டது! அமைதியாக எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்த அவள், இப்பொழுது வீட்டை விட்டு நிரந்தரமாகச் செல்லப் போகிறாள். இடையில் அவள் வேலையை ரிசைன் செய்த செய்தியும் வந்திருந்தது. அவளது பெற்றோரை பார்க்க முயன்ற அவளிடம், அவள் தந்தை பேசவேயில்லை!
இப்பொழுதும் அவள் எங்கு போகிறாள், என்ன செய்யப் போகிறாள் என்று கூடத் தெரியவில்லை! அவள் கிளம்பும் சமயத்தில் மைதிலியும் அங்கு இருந்தாள். ப்ரியாவின் இந்த நடவடிக்கைகளை, மனநிலையை அவளும் அறிந்திருந்தாள்.

அவளைக் காயப்படுத்துவதற்க்கென்று வேண்டுமென்றே ராஜா சொன்னான். போனாப் போகுதுன்னு, 5 லட்சமோ, 10 லட்சமோ கொடுக்கலாம்னு கேட்டேன். நீதான் வேணாம்னுட்ட!

என்ன இருந்தாலும் 5 வருஷம் என் கூட இருந்திருக்க, அதுக்கு ஒரு ரேட்டு போட்டுக் கொடுக்கனும்ல! இப்பக் காசும் வேணம்னுட்டு, வேலையையும் ரிசைன் பண்ணிட்டு எங்கப் போற?

அவள் அமைதியாக அவனைத் திரும்பி பார்த்தாள். பின், ஒன்றும் சொல்லாமல், எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்!

அவளுடைய அமைதி ராஜாவையே கொஞ்சம் ஆட்டியது. எதற்கும் அசராத அவளது திமிர் மேல் கொஞ்சம் கோபமும், இது மட்டும் நல்ல முறையில் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்சினகள் வந்திருக்காதே என்கிற வருத்தமும் இருந்தது.

கடுப்பில் இன்னும் ஏதோ சொல்ல முயன்ற அவனை, மைதிலி தடுத்துவிட்டாள்.

இறுதியில் சொல்லிவிட்டுக் கிளம்ப முயன்ற ப்ரியாவின் கையைப் பிடித்து மைதிலி நிறுத்தினாள். பின், ப்ரியாவின் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.

என்ன இருந்தாலும், இவரு எனக்குக் கிடைக்க முக்கியக் காரணம் நீதான் ப்ரியா. அதுக்கே, நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!

அடித்து விட்டாள். மைதிலி, மிகச் சரியாக அடித்தாள்.

ப்ரியா இழந்தது என்ன என்பதை மிகச் சரியாக சுட்டிக்காட்டினாள். இருந்தும், ப்ரியா அமைதியாக இருந்தாள்.

ப்ரியாவின் கண்களைப் பார்த்து ஆத்மார்த்தமாகவேச் சொன்னாள்! நீ நல்லவதான் ப்ரியா, உன் வளர்ப்பும், உன்னோட சில பிஹேவியரும் கொஞ்சம் வேற மாதிரி இருந்திருந்தா இன்னிக்கு உனக்கு இந்த நிலையில்லை! இதெல்லாம் நீயே வரவெச்சுகிட்டது!

நீ யாரு, உனக்கு என்னதான் வேணும், ஏன் இப்பிடி இருக்கோம்? இன்னும் எத்தனை நாள் இப்பிடி இருப்போம்னு என்னிக்காச்சும் நீ யோசிச்சிருக்கியா? இல்லை இப்பிடி இருக்கிறதுனால நீ எதையாவது சாதிச்சிருக்கியா?

ப்ரியா உள்ளுக்குள் உடைய ஆரம்பித்தாள்.

நீ இப்ப, அப்படி யோசிக்குறன்னு எனக்குத் தெரியும். ஆனா, இப்ப நினைச்சாலும் உன்னால இழந்ததை அடைய முடியுமா என்ன?

துரோகத்தையும், ஏமாற்றத்தையும் சந்திச்ச எங்களைச் சுத்தி, எங்க சப்போர்ட்டுக்கு, நிறைய பேரு இருக்காங்க. ஆனா பெருசா சாதிச்சிட்டதா, எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறதா நினைச்சிகிட்ட, உன் பக்கத்துல, உனக்குன்னு யாரும் இல்லியே, அது ஏன்னு யோசிச்சியா?

நீ ரொம்ப தைரியசாலின்னு, உன்னை நீயே நினைச்சுகிட்டது, இவரு உன் திமிரான நடவடிக்கைகளை பொறுத்துகிட்டதுனால…வாய்க்கு வந்ததையெல்லாம், அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்னு தெரிஞ்சும் பேசுறதுக்கு பேரு தைரியம் இல்லை.

எவ்ளோ பிரச்சினை வந்தாலும், அந்தக் கடமைக்காக, வலியையும் ஏமாற்றத்தையும் தாண்டி, துணைக்கு நிக்குறதுக்கு பேருதான் தைரியம்! அப்ப, நீ தைரியசாலியா, இல்ல இவரு தைரியசாலியா?

ப்ரியாவிற்க்கு பயமும் தவிப்பும் வந்தது. ராஜாவையே ஆட்டிப் படைத்தவளால், அவளது மனதை புரிந்து கொண்ட மைதிலியிடம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

தனிப்பட்ட முறையில எங்க வாழ்க்கையில, திரும்ப உன்னைப் பாக்குறதை நான் விரும்பலை ப்ரியா. ஆனா….

நிறுத்தி கேப் விட்ட மைதிலியையே பார்த்தாள் ப்ரியா!

2 Comments

  1. இந்த கதையை அனுபவித்து எழுதியவரின் கதையா இருக்கலாம் எனக்கு இந்த ஐடியில் வேலைக்கு போர இடத்தில் நடந்த கதையை அப்படியே எழுதி அவரின் அனுபவத்தை வெளிபடித்திய விதம் எனக்கு மைதிலியின் அப்பா கேரட்டரா‌ இருக்க விருப்பம்

Comments are closed.