“வாங்க தம்பி வந்து சாப்பிடுங்க……. கொஞ்சம் லேட்டாயிடுச்சு இவன் வேற இப்ப வந்து தொல்லை பண்ணிட்டு வேலைய கெடுத்துட்டு இருக்கான்” என்று என் பழைய முதலாளியை பார்த்து திட்ட, அவர் சிரித்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்.
“அம்மா, நான் இவர் கம்பெனில தான் வேலை பார்த்துட்டு இருந்தேன்.வேலைய விட்டு நிப்பாட்டுதனல இங்க வந்து சேர்ந்தேன்.”
“அப்படியாடா” என்று என் முதலாளியை பார்த்து கேட்க ,அவர் சங்கடத்தில் நெளிந்தார்.
“உனக்கெல்லாம் அறிவே இல்லடா …..உன்னை நம்பி எங்க சொத்தயெல்லாம் எழுதி கொடுத்தோம் பாரு. எல்லாம் உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுற ஆட்டம்.இப்ப ஒழுங்கா நான் சொல்றேன். இப்பயே அந்த தம்பிக்கு வேலையா போட்டு கொடுத்து, சம்பளத்தையும் ரெண்டு மடங்கு ஆக்கிக்கொடு” என்று கண்டபடி திட்ட, அவர் தலைகுனிந்தவாறே கேட்டுக்கொண்டிருந்தார்.
” சரிப்பா இப்ப என்ன பண்ற……. உடனேயே பெட்டி படுக்கை எல்லாம் மூட்டை கட்டிட்டு, என் கார்லேயே என்கூட வந்து சேரு.”
“சார் அங்க சொல்லிட்டு வந்து சேறுறேன்”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அப்புறம் என் அம்மாவுக்கு வேற என்னால பதில் சொல்ல முடியாது கிளம்பு சீக்கிரம்” என்று சொல்ல மூட்டை முடிச்சுகளோடு அவரோட கிளம்ப தயாரானேன்.
கிளம்புவதற்கு முன்னால், குட்டியிடம் அவளுக்கு வாங்கி வைத்திருந்த கிப்ட் கொடுத்து, சாந்தியிடம் விடைபெறும்போது, சாந்தி கதறி கதறி கண்ணீர் விட்டு அழுததை என்னால் மறக்கமுடியாது.
”கவலைப்படாத அப்பப்ப நான் வர்றேன்” சொல்லி விடைபெற்றுக்கொண்டு கிளம்பி, அந்த அம்மாவை பார்த்து,
“இதனை வருஷம் உஙகம்பனிதான் எனக்கு சோறு போடுச்.சு இப்ப இங்க நீங்கதான் எனக்கு சோறு போட்டிங்க” என்று சொல்ல,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி, உனக்கு இனிமே நல்ல காலம்தான். குடும்பமா சந்தோசமா இருங்க. ஏதாவது பிரச்சினைன்னா என்னை கூப்பிடுங்க” என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.
எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டிற்கு வர, வீட்டில் என் மனைவி சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.அவளிடம் ஹரி நரேன் அந்த விஷயம் எதுவுமே சொல்லாமல் மூடி மறைத்துவிட்டேன். மொபைலை பார்த்து அவளின் ரசனையை உணர்ந்த நான், அவளின் ரசனைக்கேற்பவே நடந்து திருப்தியை கொடுத்து ,எங்கள் வாழக்கை சிறப்பான முறையில் நடத்தி சென்றோம்.
நன்றி வணக்கம்.
Super
Super