அவனையும் ஆட்டோக்குள் இருந்த சத்யாவையும் நோட்டம் விட்ட மூவரில் ஒருவரான ராகேஷ் (வயது 23, பணக்கார திமிரு கொஞ்சம் அதிகம் ), அங்கே ஓடி வந்த வாட்ச்மேன் சத்தம் கேட்டு சத்யா விடம் இருந்து தன் பார்வையை வாட்ச்மேன் இடம் திருப்பி
ராகேஷ் : எத்தன தடவ சொல்லி இருக்கேன் ஆட்டோ எல்லா உள்ள விடாத னு, என்ன தூங்கிட்டு இருந்தியா
வாட்ச்மேன் : சாரி சார்
இப்போது சீனு வை நோக்கி
வாட்ச்மேன் : இங்க எல்லாம் ஆட்டோ வ நிறுத்த கூடாது போங்க போங்க
சீனு : அண்ணா இந்த அட்ரஸ்
வாட்ச்மேன் : தம்பி இது பணக்கார ஏரியா பா நீ போக வேண்டிய அட்ரஸ் அந்த பக்கம்
என்று எதிர் திசையை காட்டினார். ஆட்டோவில் ஏறிய சீனு வை பார்த்து நக்கலாக சிரித்தான் ராகேஷ்.
வாட்ச்மேன் காட்டிய திசையில் இருந்தது ஒரு நடுத்தர குடியிருப்பு அதற்குள் நுழைந்து எதிரே வந்த பைக்கை நிறுத்தி அட்ரஸ் கேட்டான் சீனு. பைக்கில் இருந்த அபி (வயது 21, நடுத்தர குடும்ப பையன். இன்ஜினியரிங் பைனல் இயர் ). அவனுக்கு வழியை சொன்னான். அந்த வெயிலில் ரெயின் கோட் அணிந்த அபியை பார்த்து
சத்யா : எதுக்கு வெயில்ல ரெயின் கோட் போட்டு இருக்கீங்க
அபி : சரியா இன்னும் ஒரு மணி நேரத்துல மழை வரும் அதான்
சத்யா : உங்களுக்கு எப்படி தெரியும்?
அபி : (சிரித்துக் கொண்டே) தெரியும்
என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான். அபி சொன்ன வழியில் வந்து கடைசியாக வலது புறமா இடது புறமா என்று யோசிக்க அங்கு வந்த நாகராஜ் யிடம் (வயது 23, சற்று ஏழை குடும்பம் அதிகம் படிக்கவில்லை) கேட்க அவன் அவர்களுக்கு சரியான வழியை சொல்லி அனுப்பினான்.
சீனுவின் ஆட்டோ சென்றவுடன் அங்கே இன்னொரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து ஒரு பெண் குரல் நாகராஜ் ஐ அழைத்தது. அங்கே லக்ஷ்மி யும் (22 வயது, சற்று ஏழை குடும்பம் +2 வரை படித்துள்ளாள்) அவள் தந்தையும் இருந்தனர்.
நாகராஜ் : என்னைய வா
லக்ஷ்மி : சி – 10 எங்க இருக்குங்க
நாகராஜ் : (சற்று யோசித்தவன்) அது கொஞ்சம் சுத்து நான் அந்த பக்கம் தான் போறேன் வா காட்டுறேன்
லக்ஷ்மி : ஐயோ பரவாயில்லைங்க உங்களுக்கு எதுக்கு கஷ்டம்
நாகராஜ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் அந்த பக்கம் தான் போறேன் வா காட்டுறேன்
லக்ஷ்மி அவள் தந்தையை பார்க்க அவர் சரி என்று தலையை அசைக்க, நாகராஜ் உடன் சென்றனர்.
நாகராஜ் : இங்க வா இது தான் சி – 10, பக்கத்துல தான் என் வீடு
லக்ஷ்மி : தேங்க்ஸ்
என்று சொல்லி வீட்டுக்குள் சென்றாள். நாகராஜ் அவன் வீட்டுக்குள் சென்றான். சீனுவின் மாமா குடும்பம் கொஞ்சம் பெருசு. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அத்தையின் தங்கை மற்றும் மாமா அத்தையின் பையன் அசோக் (வயது 25 IAS க்கு படித்துக்கொண்டு இருக்கிறார்). வீட்டுக்குள் நுழைந்த சீனுவையும் சத்யாவையும் தாத்தா பாட்டி வரவேற்றனர். சத்தம் கேட்டு வந்த அத்தை அவர்களை நலம் விசாரித்து விட்டு சாப்பிட சொன்னாள். மாமா ஆபீஸ் செல்வதால் ஈவினிங் பேசலாம் னு சொல்லி கிளம்பிட்டார். அங்கே சாப்பிட்டு இருந்த அசோக் உடன் இவர்களும் சேர்ந்து சின்ன வயசு கதைகளை பேசிக்கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன் அசோக் கிளாஸ் க்கு கிளம்ப, அத்தை சத்யாவிடம்
அத்தை : உங்களுக்கு மாடில ரூம் இருக்கு அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க
சத்யா : சரிங்க அத்தை
அத்தை : அப்புறம் இங்க ஆளுக கொஞ்சம் அதிகம் அது நால உங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
சத்யா : ஹ்ம் சரிங்க அத்தை
Story super ah irukku
Paathila niruthama mulusa mudiyunga nanba