கார்த்திக் : ச்சீ போடி.
ராஜி குளிக்க சென்ற பின் கார்த்திக் வேறு டிரெஸ்ஸை எடுத்து போட்டு கொண்டு காபியை பருகினான். அன்று முழுவதும் ரூமில் எலியும் பூனையுமாக இருந்து விட்டு மற்றவர்கள் முன் அன்னியோன்யமாக இருபது போல காட்டி கொண்டார்கள்.
இதற்கிடையில் லட்சுமி பாலாவிடம் இருவரது நடவடிக்கையும் கேட்டு தெரிந்து கொண்டு தனது மகன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டான் என்பதை உறுதி படுத்தி கொண்டாள்.
சரியாக மேலும் இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சென்னை கிளம்ப ஆயத்தமனர்கள். கிளம்பும் முன் இந்த மாசத்துல மறுபடியும் தாலி பெருக்கி போடணும்டா. அதை முடிச்சிட்டு ரெண்டு பேரும் போகலாம் என்று லட்சுமி சொல்ல அதற்கு மறுபடியும் வரேன் என்று கார்த்திக் சொல்லி சமாளித்தான்.
