கார்த்திக் : அடிங்க. இது என்னோட ரூம். இங்க நான் சொல்றதை தான் நீ கேக்கணும்.
ராஜி : சார். எப்போ என் கழுத்துல நீங்க தாலி கட்டினின்களோ அப்போவே உங்களோட எல்லாத்துலையும் எனக்கு சரி பாதி பங்கு இருக்கு. நான் நீங்க சொன்னதுக்கு எல்லாம் ஒத்துகிட்டேன். கேக்கலைன்னா நான் அத்தைய கூப்பிடுறேன் நீங்களே சொல்லிடுங்க. அவுங்க என்ன சொல்றாங்களோ அதை நான் கேட்டுகிடுறேன். அத்தை அத்தை.
கார்த்திக் : ஏய்ய்ய்ய்ய்ய். ஷ்ஷ்ஷ்ஷஷ் கத்தாத. படுத்து தொலை. நான் கீழ படுத்துகிடுறேன்.
ராஜி : ம்ம்ம்ம் அது. தேங்க்ஸ்.
கார்த்திக் : மொதல்ல இந்த கண்ராவி எல்லாம் அவுத்து போட்டு படு. வாசமே குமட்டிட்டு வருது. கட்டிலை சுற்றி தொங்க விடப்பட்டு இருந்த பூமாலைகளை சொன்னான் கார்த்திக்.
ராஜி சிரித்து கொண்டே தனது புடவை முந்தியில் குத்தி இருந்த பின்னை கலட்டி விட்டு முந்தியை தோள்களில் இருந்து எடுத்து கொண்டிருந்தாள்.
கார்த்திக் : ஏய் ச்சீ. என்ன பண்ற. வேறு பக்கமாக திரும்பி கொண்டான்.
ராஜி : நீங்க தான சொன்னீங்க. எல்லாத்தையும் அவுத்து போடுன்னு.அதான் நான் ஸ்பீடா புரிஞ்சிகிட்டேன். இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம். எவ்ளோ நடிச்சாலும் இந்த விஷயத்துல கரெக்டா இருக்கீங்க.
கார்த்திக் : ஏய் அறிவு இல்ல உனக்கு. நான் சொன்னது இந்த மாலை எல்லாத்தையும். முதல்ல சேலையை எடுத்து போடு.
ராஜி : ஒரு நிமிஷம். ம்ம்ம்ம் போட்டுட்டேன்.
கார்த்திக் : உன்கிட்ட என்ன சொன்னாலும் தெளிவாதான் சொல்லனுமா. இனி இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பண்ணாத. அதையும் இதையுமா காட்டி என்ன மயக்கனும்னு மட்டும் ட்ரை பண்ணாத.
ராஜி : எதையும் எதையும் ங்க. அப்பாவியாக கேட்டாள்.
கார்த்திக் : உன்கிட்டல்லா பேசவே முடியாது என்னமோ பண்ணு எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்.
சொல்லிவிட்டு கார்த்திக் பெட்ஷீட்டை விரித்து அதில் படுத்து கொண்டான்.
ராஜிக்கு இப்போது புது விதமான தைரியம் வந்தது. கரைப்பார் கரைத்தால் கல்லே தேயும் போது இவன் மனசை கரைக்க முடியாதா. கார்த்திக் செல்லகுட்டி எங்கடா போய்ட போற நீ. இவ்ளோ தூரம் உன் ரூம் வரைக்கும் வந்த நான் உன் மனசுக்குள்ள வர்ரதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தாண்டா இருக்கு. தூங்குறதை பாரு. குழந்தை மாதிரி. லவ் யூ டா கோவக்காரா. மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவனை பார்த்தாள். அப்படியே உறங்கியும் போனாள்.
மறு நாள் காலை 7 மணி. நேற்று பேச்சு எல்லாம் முடிந்து தூங்க 12 மணி ஆனதாலும், நேற்று முழுவதும் நின்று கொண்டே இருந்ததாலும் நன்றாக தூங்கி விட்டாள் ராஜி.
வெளியே கோவிலில் பாட்டு ஒலிக்கும் சத்தம் கேட்டு முழிப்பு தட்டி எழுந்தாள் ராஜி. எழுந்தவள் கார்த்திக்கை பார்க்க நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
லூசு எப்படி தூங்குது பாரு. நேத்து கல்யாணம். அவனவன் கல்யாணம் முடிச்சி பர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டிகூட சந்தோசமா இருந்துட்டு டிரஸ் இல்லாம கட்டி பிடிச்சி தூங்குவான்.இவன் என்னடான்னா விஸ்வாமித்திரர் மாதிரி தனியா படுத்துருக்கான். பாக்குறேன் எத்தனை நாள் இந்த விஸ்வாமித்திரர் வேஷம்னு. இப்போ இவனை எதாச்சும் செய்யணுமே. ம்ம்ம்ம் என்ன பண்ணலாம். ஐடியா. பரபரவென்று எழுந்தவள் தனது சேலைகளை நன்றாக கசக்கி விட்டாள்.
சேலையில் குத்தி இருந்த சேப்டி பின்னை நீக்கி விட்டு முந்தானையை நன்கு கசக்கினாள். சேலையை லூசாக தோளில் போட்டு கொண்டாள்.
நெற்றியில் இருந்த குங்குமத்தை இழுவி விட்டாள்.கட்டிலை சுற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்த பூக்களை பிய்த்து கட்டிலை சுற்றி போட்டு விட்டு தலையில் இருந்த மல்லி பூவை நார் மட்டும் கூந்தளில் இருப்பதை போன்று செய்தாள்.
ஒரு முறை தன்னை உற்று நோக்கியவள் நேற்று முதல் இரவு முடிந்தது போன்று தன்னை தயார் படுத்தினாள். அணைத்தும் சரியாக இருக்கிறதா என மீண்டும் சரிபார்த்தவள் பக்காவாக இருப்பதை உறுதி செய்து விட்டு கட்டிலை விட்டு இறங்கினாள்.
எதையோ மறந்தவளாக ஒரு முறை பார்த்தவள் மக்கு மக்கு. எத்தனை படம் பார்த்தாலும் நீ திருந்த மாட்டடி ராஜி. நீ பக்காவா இருக்க. அவனை கவனிச்சியா. ஐயன் பண்ணின சட்டியும் வேஷ்டியுமா தூங்குறான். அவன் வெளிய வந்தா எல்லாம் கெட்டூடாது. அவனையும் ரெடி பண்ணு லூசு. தன்னை தானே திட்டி கொண்டாள்.
மெதுவாக அடி எடுத்து கார்த்திக் அருகில் சென்று அவனை தொந்தரவு செய்யாமல் அவனுடைய சட்டை பட்டனகளை மெதுவாக அவிழ்த்து விட்டாள். பின்னர் நெற்றியில் ஒட்டியிருந்த குங்குமத்தை எடுத்து அவன் வலது மார்பின் சட்டையில் கோடு போட்டாள். அது பார்ப்பதற்கு முதல் இரவில் அவனுடைய மார்பில் அவள் முகம் உரசியதை போல இருந்தது.
கட்டிலில் இருந்த மல்லிபூக்களை கொஞ்சம் எடுத்து அவன் சட்டைக்கும் பணியனுகும் இடையில் சிறிது போட்டு விட்டாள்.இரண்டு ரோஜா இதழ்களை எடுத்து அவன் முடிகளில் அவன் கவைக்க வண்ணம் இருபது போல ,அதே போன்று எதிரில் இருப்பவர்கள் பார்த்தாள் தெரிவது போல அவன் முடிகளில் வைத்தாள்.
அவன் சட்டையின் மார்பு பகுதியின் இரண்டு பக்கமும் நன்றாக கசக்கி விட்டாள். சட்டையை கசக்கும் போது அவன் லேசாக அசைய ராஜி சட்டென்று எழுந்து கதவருகே சென்றாள்.
கார்த்திக் மீண்டும் புரண்டு படுத்து தூங்கி கொண்டிருந்தான். மீண்டும் மெல்ல அடியெடுத்து வைத்து அவனருகில் வந்தவள் உதட்டில் இருந்த லிப்ஸ்டிக்கை விரலால் தொட்டு அவன் கன்னத்தில் தேய்த்து விட்டாள்.
மீண்டும் கார்த்திக் அசைய அவனை விட்டு விலகினாள். தொட்டால் எழுந்துடுவானே. டேய் பாவி கொஞ்சம் அசையாம இருடா இதோ முடிஞ்சுது. மெல்ல அவன் அருகில் வந்தவள் மீண்டும் நன்கு அழுத்தமாக அவன் உதடருகே தேய்த்து விட்டாள்.
அவனை உற்று பார்த்தவள் “ பக்கா. இன்னைக்கு நீ செமையா மாட்டுவ மவனே. நல்லா முதல் ராத்திரில பொண்டாட்டி கூட கட்டி பிடிச்சி உருண்டவன் மாதிரி இருக்க. அதிகமா பேச கூட மாட்டீங்களோ. இன்னைக்கு பேசுவ நீ. “
கதவருகே சென்றவள் தனது புடவை முந்தயை கதவின் கைபிடியில் மெல்லிதாக முடிச்சி இட்டு தோல் பட்டையில் பிடித்து கொண்டாள்.
“சரியாய் இந்நேரம் யாராச்சும் வந்தால் நல்லா இருக்குமே. யாராச்சும் வாங்களேன். பாலா தடி மாடு அண்ணா நீயாச்சும் வாயேன்.” மனதிற்குள் வேண்டி கொண்டிருந்தாள்.அவள் அடித்த மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ கார்த்திக்கின் தாய் லட்சுமிக்கு கேட்டது. சரியாய் அவர்கள் ரூம் கதவை தட்டினாள்.
லட்சுமி : அம்மா ராஜி.ராஜி. ராஜி எழுந்துருங்கம்மா ரெண்டு பேரும். நேரம் ஆகுது.
ராஜி : ஆங். அத்தை. இதோ வரேன் அத்தை.
லட்சுமி : வெளிய எல்லாரும் இருக்காங்க. கொஞ்சம் பார்த்து வாமா. புரிஞ்சுதா.
ராஜி அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தவளாக சரிங்க அத்தை. தோ வந்துடுறேன். என்றாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்கும் போதே முழிப்பு தட்டினான் கார்த்திக். எழுந்து அமர்ந்து கண்களை கசக்கி கொண்டிருக்கும் போதே ராஜி கதவை திறந்து வெளியே சென்றாள். அவள் புடவை மட்டும் கதவருகில் தெரிந்தது. கண்களை கசக்கி விட்டு பார்த்தான்.
ராஜி இதற்காக தான காத்திருந்தேன். கார்த்திக் எழுந்துட்டான். இதான் சரியான சமயம் என்று அவன் கண்ணில் படாதவாறு வெளியே சென்று கதவை மூடாதவாறு வெளியே நின்று கொண்டு செல்ல புடவை கதவின் கைப்பிடியில் மாட்டி இருப்பதால் தடுத்தது.
மாராப்பை பிடித்து கொண்டு “ ஏங்க விடுங்க. வெளிய எல்லாரும் இருக்காங்க. ச்சீ. விடுங்க.” என்றாள்.
கார்த்திக் அவள் என்ன உளருகிறாள் என்பது புரியாமல் எழுந்தான். அதற்குள் ராஜி மீண்டும் அறை கதவை பாதி திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டினாள்.
ஏங்க. என்ன இது சின்ன குழந்தையாட்டம். விடுங்க. விடிஞ்சிடுச்சு. இப்போ போய். அய்யோ சேலைய விடுங்க. வெளியே எல்லாரும் இருக்காங்க. மாமா உங்க பிரெண்ட் எல்லாரும் இருகாங்க. அவுங்க பார்த்தாள் அசிங்கமா ஆகிடும். ப்ளீஸ். பொய்யாக வெட்கபட்டாள்.
கார்த்திக் என்ன நடக்கிறது என்பது புரியாமல் கதவருகே வர வெளியே கார்த்திக்கின் தந்தை, பாலா மற்றும் ரஞ்சனி அனைவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த அனைவரும் மௌனமாக தங்களுக்குள் சிரித்து கொண்டிருந்தனர். அந்நேரம் பார்த்து கார்த்திக் கதவில் மாட்டி இருந்த அவளது புடவை தலைப்பை விடுவித்து கதவை திறந்தான்.
ரஞ்சனி பாலாவை பார்த்து சிரிக்க பாலா ம்ம்ம்ம் என்று புருவத்தை உயர்த்தினான். கார்த்திக்கின் தந்தையோ நாகரீகம் கருதி ஒன்றும் பேசாமல் பேப்பர் படிப்பது போல அவர்கள் குரும்பை நினைத்து சிரித்து கொண்டார்.
ராஜி : ச்சீ. இப்படியா விளையாடுவீங்க. என் மானமே போச்சு. இருங்க உங்களுக்கு காபி கொண்டு வரேன். என்றவள் புடவையை சரி செய்து கொண்டு ஹாலை நோக்கி வந்தாள்.
ரஞ்சனி ராஜியை பார்த்து சிரிக்க ராஜி போங்க. என்பது போல வெட்கப்பட்டு கொண்டு கிச்சனை நோக்கி ஓடினாள் .
கார்த்திக் கதவை திறந்து ஹாலிற்கு வந்தான். வந்தவன் பாலா அருகில் அமர்ந்து கொண்டு கை நீட்டி சோம்பல் முறித்து கொண்டான்.
பாலா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தான். கார்த்திக் பாலா தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்து விட்டு என்ன என்றான்.
அவனை பார்த்து சிரித்து கொண்டே ஒன்னும் இல்ல என்றான். “ அப்போ ஏன் சிரிக்கிற.”
அங்க பாரு என்று கார்த்திக்கின் தந்தையை சொல்ல அவரும் சிரித்த முகமாக பேப்பரை புரட்டி கொண்டிருந்தார்.
கார்த்திக் : இப்போ ஏன் ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க.
ராமநாதன் : ஒன்னும் இல்லப்பா.
பாலா : ஆமாடா ஒன்னும் இல்ல. ஆனால் மீண்டும் சிரித்தான்.
கார்த்திக்கிற்கு குழப்பமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று மட்டும் வித்தியாசமாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது. அவள் என்னடான்னா கதவு கிட்ட நின்னு உளறுறா.இவுங்க என்னடான்னா சம்பந்தமே இல்லாம சிரிக்கிறாங்க. என்ன ஆச்சு.
கார்த்திக் : அப்பா ஒரு நிமிஷம் கொஞ்சம் வெளிய போய் பேப்பர் படிக்கிறீங்களா.
ராமநாதன் : ம்ம்ம்ம். ஜமாய்.
இராமநாதன் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்தவன் பாலாவிடம் இப்போ சொல்லுடா.எதுக்கு சிரிக்கிற.
பாலா : மாப்ள கண் எல்லாம் சிவந்துருக்கு. நைட் தூக்கமே இல்லையோ.
கார்த்திக் : டேய் எதுக்கு சிரிச்சன்னு சொல்லு முதல்ல.
பாலா : காரணம் இருக்கு மாப்ள. சொல்லு. நான் எதுக்கு சிரிச்சேன்னு அப்றமா சொல்றேன்.
கார்த்திக் : இல்லடா. டையர்டா இருக்குன்னு சொன்னா . எனக்கும் ரெண்டு நாளா தூக்கம் இல்லை. அதான் சீக்கிரமே தூங்கிட்டோம். உன்னோட கட்டில் அலங்காரம் எல்லாம் வேஸ்ட். ( இவன்கிட்ட ஏன் உண்மைய சொல்லி பிரச்னையை உண்டாக்கணும். சென்னை போற வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.)
பாலா : இல்லையே பார்த்தா அப்படி தெரியலையே.
கார்த்திக் : என்னடா சொல்ற.
பாலா : விடிய விடிய கட்டி பிடிச்சி உருண்ட மாதிரிலா தெரியுது.
கார்த்திக் : டேய் ச்சீ. சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல,
பாலா : அப்படியா ம்ம்ம்ம்ம்ம். கார்த்திக்கின் தலையில் இருந்த ரோஜா இதழ்களை கையால் எடுத்து அவன் முன்னால் கைகளில் வைத்து ஊதி விட்டான். இது எப்படி உங்க தலையில வந்துச்சு.
கார்த்திக் : டேய் இது எப்படி என் தலையில.
பாலா : அதாண்டா நானும் கேக்குறேன். ஷர்ட் உள்ள மல்லிகை பூ மாதிரி இருக்கு. அதையும் நான் தான் எடுக்கணும் போல.
கார்த்திக் : என்னது மல்லிகை பூவா. அதையும் எடுத்து போட்டான். டேய் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கலடா. நம்பு.
பாலா : மாப்ள இதுலாம் ஒண்ணுமே இல்லடா. உன் பொண்டாட்டி கூட நீ சந்தோசமா இருந்தா எங்களுக்கும் சந்தோசம் தாண்டா. அதுக்கு ஏன் சமாளிக்கிற.
கார்த்திக் : டேய் நான் சந்தோசமா இருந்தேனா. எப்படிடா சொல்ற.
இங்க வா என்று அவனை கண்ணாடி அருகில் இழுத்து சென்றான் பாலா.
பாலா : இங்க பாரு உன் சட்டையை .குங்குமம் கரை. உன் முகத்தை பாரு. லிப்ஸ்டிக் இருக்கு. உன் சட்டை கசங்கி இருக்கு. இது போதாதா. நீ சந்தோசமா இருந்தன்னு கண்டுபிடிக்க. அதெல்லாம் விட இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பண்ணின பாரு. அல்டிமேட் டா. நான் கூட இந்த அளவு ரொமான்ஸ் பண்ணினது இல்லடா.
கார்த்திக்கிற்கு இப்போது தான் ஒவ்வொன்றாக புரிந்தது இதெல்லாம் ராஜியின் வேலை என்று. முடிந்த அளவு அவளை தவிர்க்கலாம் என்று பார்த்தால் அவள் அவனை ஈசியாக காலி செய்து விடுகிறாள். பெரிய கைங்கரியாக இருக்கிறாள். முடிந்த அளவு சென்னை செல்லும் வரை இதை பொறுத்து தான் ஆக வேண்டும். இப்போதைக்கு நாங்கள் இருவரும் சந்தோசமாக இருப்பதை போல இந்த கிறுக்கனை வைத்து தான் அனைவரையும் நம்ப வைத்தாக வேண்டும். அவளிடம் இங்கு வைத்து சண்டை இட்டாலோ இல்லை அவள் அழும்படி எதாவது சொல்லி விட்டாலோ சென்னை செல்வது தாமதம் ஆகும். பிரச்சனை தனக்கு தான் என்பதை உணர்ந்தான் கார்த்திக்.
கார்த்திக் : பெரிய ஆளுடா நீ. ஆனா இதெல்லாம் போய் ஒரு பிரெண்ட் கிட்ட கேக்குற பாரு. சரியான விவஸ்தை கெட்டவன் டா நீ. சொல்லிவிட்டு அவனை கண்டுகொள்ளாமல் பெட் ரூமிற்கு சென்றான்.
பாலா : டேய் நல்லவனே டேய் டேய்.
.கார்த்திக் : போடா.
ரூமிற்குள் சென்ற கார்த்திக் தனது சட்டையை வேகமாக அவிழ்த்து எறிந்தான். செல்பில் இருந்து துண்டை எடுத்து கொண்டு பாத் ரூமிற்குள் சென்றான்.
கிச்சனில் ராஜியிடம் சூசமாக கேட்டுவிட்டு லட்சுமியும் ரஞ்சனியும் கார்த்திக்கிற்கு காபி கலந்து கொடுத்தனர்.ராஜி இரண்டு கப் காபி எடுத்து கொண்டு ரூம் நோக்கி சென்றாள்.
ரூம் உள்ளே வந்தவள் காபியை வைத்து விட்டு கார்த்திக்கை தேட பாத் ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு அமைதியானாள்.
களைந்து கிடந்த துணிகளை எடுத்து மடித்து வைத்து விட்டு, ரூமை கிளீன் செய்தாள். கார்த்திக் செல்ப் சென்று அவனுக்கு ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் எடுத்து பெட்டில் வைத்தாள்.
கார்த்திக் குளியலறை விட்டு வெளியே வர ரூம் சுத்தமாக இருந்தது. அவனுக்கு தேவையான ட்ரெஸ் பெட்டில் இருக்க சூடாக ஆவி பறக்க காபி அருகில் இருந்தது.
கார்த்திக் : ஏய் நீ எதுக்கு இதெல்லாம் செய்யுற. உன்கிட்ட நான் கேட்டேனா.
ராஜி : நான் தான இதெல்லாம் உங்களுக்கு இதெல்லாம் செய்யணும். இல்ல வேற எதாச்சும் என்மேல உங்களுக்கு கோவமா.
கார்த்திக் : உன் மேல நான் கொலை வெரில இருக்கேன். உன் நாடகம் எல்லாம் இதோட நிறுத்திக்கோ. ரூம்க்கு வெளிய எல்லாத்தையும் வச்சிக்கோ. இங்க வேண்டாம்.
ராஜி : இப்போ எதுக்கு கோவபடுறீங்க.
கார்த்திக் : ஆமாடி கோவம் தான் படுறேன்.
ராஜி : சரி மன்னிச்சிகோங்க.நீங்க குளிக்க போகும் போது நான் இல்லாதது தப்பு தான். அடுத்த தடவை நான் இப்படி செய்ய மாட்டேன்.
கார்த்திக் : என்ன உளறுற. நான் என்ன சொல்றேன். நீ என்ன பதில் சொல்ற.
ராஜி : ஆமா நீங்க குளிக்கும் போது நான் முதுகு தேச்சு விடலன்னு தான உங்களுக்கு இவ்ளோ கோவம்.
கார்த்திக் : அய்யோ. முடியல. நகரு. உங்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. இப்போ உன்னோட டர்ன்னு தான ரொம்ப ஆடுற. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி வட்டியும் முதலுமா நீ என்கிட்ட அனுபவிப்ப.
ராஜி : சரிங்க. நீங்க கொஞ்சம் நகருரீங்களா. நான் குளிக்க போகணும். இல்ல என்கூட சேர்ந்து மறுபடியும் குளிக்க போறீங்களா. நான் எதுக்கு வேணும்னாலும் ரெடி.
