ராஜி : என்னனு சொல்லுங்க அத்தை. நான் கண்டிப்பா செய்யுறேன்.
லட்சுமி : என்னடா கல்யாணத்துக்கு முன்னாடியே அதிகாரம் பன்றாலேன்னு நினைக்காதமா. இது என்னோட ஆசை அதான் சொல்றேன். எண்ணி 1 வருஷத்துல என் பேரன் பேத்திய நான் தூக்கி கொஞ்சனும். அது உன் கையில தான் இருக்கு. எனக்காக நீ இதை செய்வன்னு நம்புறேன்.
ராஜி : போங்க அத்தை.சொல்லிவிட்டு தலையை தொங்க விட்டு சிரித்தாள்
லட்சுமி : சரிமா.இந்தா இந்த நகையை போட்டுக்கோ. தான் கொண்டு வந்த மர பெட்டியில் இருந்து நகைகளை ராஜியிடம் கொடுத்தாள்.
ராஜி : என்ன அத்தை இதெல்லாம்.
லட்சுமி : போட்டுக்கோ. இனி இது உனக்கு தான். என் பையனுக்கு கல்யாணம் நடக்கும்னு ஒவ்வொரு வருஷமும் அவன் அனுப்புற சம்பளத்துல நான் பார்த்து பார்த்து எடுத்த நகைங்க இதெல்லாம்.
அதை வாங்கிய ராஜி கண்கள் கலங்க லட்சுமியை கட்டி கொண்டாள்.
லட்சுமி : ராஜி என்னாச்சு ஏன் அழுகுர
ராஜி : நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி அத்தை.
லட்சுமி : சரிம்மா அழாத. சீக்கிரம் கிளம்புமா. முகூர்த்ததுக்கு நேரம் ஆகிடுச்சு. இனி நீ எப்போதும் அழகூடாது.
சொல்லிவிட்டு லட்சுமி கிளம்பி விட்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் மணப்பெண் அழைத்து வரப்பட ராசியை மணகோலத்தில் பார்த்தான் கார்த்திக்.மிதமான மேக் அப்பில் தேவதை ஒன்று நகை அணிந்து அவன் அருகில் வந்து கொண்டிருந்தது.
கார்த்திக் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வீடியோ எடுப்பவர் அவனையும் ராஜியையும் மாறி மாறி போகஸ் செய்து கொண்டிருந்தார்.
பாலா அவனுக்கு முகத்தை துடைத்து விடும் சாக்கில் அவன் காதில் மாப்ள போதும் சைட் அடிச்சது இன்னும் கால் மணி நேரத்துல அவ உனக்கு பொண்டாட்டியா ஆக போறா. இனி வாழ்க்கை முழுதும் நீ அவளை சைட் அடிக்கலாம். இப்போ அயர் சொல்றதை பண்ணு என்றான்.
கார்த்திக் அவனை பார்த்து சிரித்து விட்டு நேராக அமர்ந்து கொண்டான்.
ராஜி அவன் அருகில் அமர்ந்ததும் ஓர கண்ணால் கார்த்திக்கை பார்த்தாள்.கார்த்திக் அவளை பார்த்து சிரித்தான்.
அவன் சிரிப்பதை பார்த்த ராஜிக்கு அடி வயிற்றில் குறுகுறுப்பு தோன்ற முகத்தில் கோடி மின்னல் பாய்ந்தது போன்று வெக்கம் குடி கொண்டது.
அங்கே காமிரா கண்கள் நடப்பவை அனைத்தும் படம் பிடித்து கொண்டிருக்க கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றார் அய்யர்.
கார்த்திக் தாலியை எடுத்து ராஜியின் கழுத்தில் கட்ட நாத்தானார் முறைக்கு ரஞ்சினி மீதியை கட்டினாள்.
தீபத்தை சுற்றி வந்து அம்மியில் வைத்து மெட்டியை ராஜியின் கால் விரல்களில் போட்டு ராஜியை மனைவி ஆக்கி கொண்டான்.
கார்த்திக்கின் தாய் தந்தை காலில் விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு ராஜியின் தாய் தந்தை காலிலலும் விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.
லட்சுமி ராஜியை கட்டி பிடித்து அவள் கன்னத்தில் பாசத்துடன் முத்தம் இட்டாள்.
அவ்ளோதான் முடிஞ்சுது.என்னோட பேச்சிலர் வாழ்க்கை.இது வரைக்கும் நடந்தது எல்லாம் வேணும்னா உங்களோட கதையா இருக்கலாம்.ஆனா இதற்கு அப்றம் இந்த கதையை எழுத போறது நானா தான் இருக்கும்.
கார்த்திக் மனதிற்குள் வேறு விதமாக சிந்தித்து கொண்டிருக்க அதற்கு முன் கடவுள் அவர்களது வாழ்வுக்கு வேறு விதமாக திரைக்கதை எழுதி முடித்திருந்தார்.
கல்யாணம் முடிந்து பந்தி நடைபெற்று கொண்டிருக்க மணமக்கள் இருவரையும் சந்தித்து வந்திருந்தவர்கள் அனைவரும் வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருந்தனர்.
லட்சுமி மதிய உணவிற்காக கார்த்திக்கும் ராஜியும் சாப்பிட அழைத்தாள். கார்த்திக் ராஜியுடன் அருகில் அமர வைக்கப்பட பாலா அவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தான்.
முதலில் இனிப்பு வைக்கப்பட காலையில் இருந்து கொலை பசியில் இருந்த கார்த்திக் அதை எடுத்து சாப்பிட அவன் சாப்பிடுவதை தலை குனிந்து வெட்கத்துடன் பார்த்தாள் ராஜி.
தனது இலையில் இருந்த லட்டு ஐ எடுத்து தலை குனிந்தவாறே கார்த்திக் இலையில் எடுத்து வைத்தாள்.
கார்த்திக் அதை பார்த்தவன் சிரித்து கொண்டே வேண்டாமா என்பது போல பார்க்க ராஜி வேண்டாம் என்று வெட்கத்துடன் தலையை அசைத்தாள்.
கார்த்திக் சிரித்து கொண்டே ஒரே வாயில் போட்டு கொண்டான்.
சாப்பாடு இலையில் வைத்து மற்ற கறிகள் வைக்கப்பட பாலா கார்த்திக்கை பார்த்து மாப்ள உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடுடா என்றான்.
கார்த்திக் : ச்சீ போடா.
பாலா : டேய் வெட்கபடாத. சும்மா ஊட்டி விடு மாப்ள. என்ன தங்கச்சி என் மாப்ள கொடுத்தா சாப்ட மாட்டியா என்ன.
ராஜி தலையை குனிந்து வெட்கப்பட கார்த்திக் சோறு எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
பாலா : என்ன தங்கச்சி என் மாப்ள மட்டும் தான் ஊட்டி விடணுமா. நீ ஊட்டி விட மாட்டியா.
கார்த்திக் : டேய் சும்மாவே இருக்க மாட்டியா. சாப்பிட விடுடா அவளை
பாலா : பாருடா. பொண்டாட்டி மேல அக்கறையை.
ராஜி அதற்கும் வெட்கத்தை பரிசாக தர சாதத்தை எடுத்து கார்த்திக்கிற்கு ஊட்டி விட்டாள்.
இப்படியாக கேலியும் கிண்டலுமாக இரவு வரை சென்றது.
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே ..
