டேய் டேய். நில்லுடா கதவை திறந்து விடுடா. டேய் பாலா. நாயே.உன்னைத்தாண்டா. மவனே உனக்கு என் கைலதான்டா சாவு. டேய் டேய்.
மாப்ள பேசாம படுத்து தூங்கு. இப்போ நீ வெளியே வந்த நான் செத்தேன். மன்னிச்சிடுடா. குட் நைட். பாய்.
ச்சை. வெறுப்பாக உணர்ந்தான் கார்த்திக். ஐயோ. எல்லாம் முடிஞ்சுது. நாளைக்கு கல்யாணம். சோ இதான் என்னோட கடைசி bachilor day. நடக்கட்டும். என்ன நடக்குமோ நடக்கட்டும். கல்யாணத்துக்கு அப்புறமா தான இருக்கு.
அடுத்து தான் செய்ய வேண்டிய அனைத்தையும் திட்டமிட்டு கொண்டு கட்டிலில் படுத்தான் கார்த்திக்.
காலை பொழுது விடிந்தது. கார்த்திக் ரூம் கதவு தட்டபட்டு கொண்டிருக்க கார்த்திக் முன்னமே குளித்து முடித்து ரெடி ஆகி இருந்தான்.
வெளியே நின்றிருந்த அவன் தாய்க்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. என்னடா இவன் கல்யாணமே வேண்டாம்னு அடம் பிடிப்பான்னு பார்த்தால் கிளம்பி ரெடியா இருக்கான். கேட்டு விடலாமா. வேண்டாம். கேட்டு வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால் காரியம் கெட்டு விடும். அவன் போக்கிலே போகலாம் என்று எண்ணி கொண்டு அடுத்த கட்ட சடங்குகளை செய்து விட்டு மண்டபத்திற்கு கிளம்ப தயார் ஆனார்கள்.
முதலில் மாப்பிளை வீட்டார் மண்டபத்திற்கு வந்து விட கார்த்திக் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நேராக மணமகன் அறைக்குள் சென்றான்.
அவனை தனியாக இருக்க விட வேண்டாம் என எண்ணி துணைக்கு பாலாவை அவன் உடன் இருக்க சொன்னாள்.
கார்த்திக் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் பாலாவிடம் பேசிகொண்டிருந்தான். மச்சான் அந்த சீப்பு எடு. ஹேர் ஸ்டைல் நல்லா இருக்குல்ல.
என்ன இவன் இப்படி மாறிட்டான். என்ன ஆச்சு.நேத்து பண்ணினதுக்கு பிடிச்சி குத்து குத்துன்னு குத்துவான்னு பார்த்தா சந்தோசமா இருக்கான்.
டேய் உங்கிட்ட தாண்டா. எடுத்து கொடுடா.
ஆங். இந்தா மாப்ள.
தலையை சீவி விட்டு அப்றம் மச்சான் முகம் கொஞ்சம் டல்லா இருக்க மாதிரி இருக்கு. அந்த பை இருக்குல்ல அதுக்குள்ள Fair and Handsome க்ரீம் இருக்கும். அதை எடுத்து கொடுடா.
மேக் அப் டேபிள் ல் அமர்ந்து கொண்டு கேட்க பாலா அவன் சொல்வதை மட்டும் செய்து கொண்டிருந்தான்.
டேய் மாப்ள நானே கேட்டுட்டு இருக்க முடியுமா. நீயெல்லாம் ஒரு பிரெண்டா டா. மாப்ள பிரென்ட் நீதானா நான் அழகா இருக்கு
கான்னு பாத்துக்கணும். எல்லாம் கேட்டா தான் செய்வியா. அந்த போதிய ஸ்ப்ரே எடு.
பாலா பேசாமல் எடுத்து கொடுத்தான். தனது நண்பனின் மாற்றத்தை கண்டு சந்தோஷப்படுவதை இல்லை அவன் ஏதாவது திட்டத்தில் இருக்கிறான் என்று சந்தேக படுவதா. தெரியாமல் குழம்பினான்.
என்ன மாப்ள கல்யாண காலை வந்துடுச்சு போல.
ஆமா மச்சான். வாழ்க்கைல இது எவ்ளோ முக்கியமான நாள். பிடிக்குதோ பிடிக்கலையோ இணைக்கு மட்டும் சிரிச்ச மாதிரி இருக்கனும். ஏன்னா இன்னைக்கு மட்டும் தான் கடைசியா சிரிச்சிக்க முடியும். சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்திக்.
என்னமோ உலகத்துலயே இல்லாத புது ஜோக் சொன்னதா சிரிக்கிற. ப்ப்பா. எனக்கும் சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடுச்சு. ஏன் இந்த திடீர் மாற்றம்.
என்னடா இது வம்பா போச்சு. கல்யாணம் வேண்டாம்னு சொன்னா கட்டாய படுத்துறீங்க. சரின்னு ஏத்துக்கிட்டு சந்தோசமா இருந்தாலும் இப்படி கேட்குறீங்க. என்ன தான் செய்யட்டும்.
அய்யயோ மாப்ள என்னடா இப்படி சொல்லிட்ட. நீ கல்யாணம் பண்ணினா சந்தோசப்படுற முதல் ஆள் நானேதான் இருப்பேன். நீ வா மாப்ள நான் உன்ன நம்ம தல மாதிரி ஆக்கி காட்டுறேன்.
நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் ரெடி ஆகிட்டேன்.
சரி மாப்ள. நீ இரு உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரேன். நீ பசியா இருப்ப. சொல்லி விட்டு வெளியேறினான் பாலா.
அங்கே மணமகள் அறையில் ராஜிக்கு மேக் அப் நடந்து கொண்டிருந்தது. உள்ளே வந்த கார்த்திக்கின் தாய் ராஜியை பார்த்தாள்.
மிதமான மேக் அப்பில் ராஜி லட்சுமி கடாட்சமாக இருந்தாள்.
வாங்க அத்தை.
ரொம்ப அழகா இருக்கமா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.
ராஜி வெட்கப்பட்டாள்.
அம்மா ராஜி உனக்கு ஏதும் இதுல வருத்தம் இல்லையே.
என்ன அத்தை சொல்றீங்க. எனக்கு புரியல.
இல்ல உன்கிட்ட எதுவும் கேட்காம உன் விருப்பம் இல்லாம எல்லாம் நடக்குதே. அதான் உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே.
ராஜியின் ரூமில் நுழைந்த லட்சுமி, ராஜிக்கு மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருப்பதை பார்த்து அவள் அருகில் சென்றாள். அவள் பின்னல் சென்று கண்ணாடியில் ராஜியின் முகத்தை பார்த்தாள்.
லட்சுமியை கண்ட ராஜி வாங்க அத்தை என்று சொல்லி மரியாதையை நிமித்தமாக எழ முற்பட்டாள்.
லட்சுமி : உக்காரு.உக்காரு ராஜி.
சொல்லிக்கொண்டே அவள் தோல்களை அழுத்தி சேரில் அமர வைத்தாள்.
லட்சுமி : ரொம்ப அழகா இருக்கமா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அம்மா ராஜி உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.
ராஜி : அய்யோ.என்ன அத்தை பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.
லட்சுமி : இல்லமா. திடு திப்புன்னு உங்கிட்ட எதுவுமே சொல்லாம எல்லா ஏற்பாடும் வேகமா நடந்துட்டு. அதான் உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு கேட்டேன்.
ராஜி : அத்தை சத்தியமா நான் இதை எதிர் பார்க்கல.ஆனா உங்க பையன் தான்னு தெரிஞ்சுதும் என்னால நம்பவே முடியல.
லட்சுமி : உனக்கும் இதுல சம்மதம் தான. உனக்கு அவனை பிடிச்சிருகுல்ல.
ராஜி : ரொம்ப பிடிக்கும் அத்தை. உங்க கிட்ட நான் இதை எப்படி சொல்றதுன்னே தெரியல.
சொல்லிக்கொண்டே வெட்கபட்டாள் ராஜி.
லட்சுமி : இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. நீ வெட்கப்படும் போது ரொம்ப அழகா இருக்க. சரிமா உங்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லணும்.அந்த பயலுக்கும் உன்ன பிடிக்கும்னு தான் நினைக்கிறேன்.
ராஜி : எப்படி அத்தை சொல்லிறீங்க.
லட்சுமி : நேத்து வரைக்கும் என்னலாமோ சொல்லிட்டு இருந்தான்.ஆனா இன்னைக்கு ரொம்ப ஆர்வமா இருக்கான். எனக்கே ஆச்சர்யமா இருக்கு.
ராஜி : நிஜமாவா சொல்றீங்க
லட்சுமி : ஆமா ராஜி. அவன் மாறிட்டன்னு தான் நினைக்கிறேன். அந்த பய கல்யாணத்துக்கு அப்புறம் உங்கிட்ட எதாச்சும் சொன்னானு வை என்கிட்டே சொல்லு. அவனை நான் பார்த்துகிடுறேன். ஆனா எனக்கு ஒன்னே ஒன்னும் மட்டும் செய்யனும்.முடியாதுன்னு மட்டும் சொல்ல கூடாது.
