“ இல்ல ராஜி. உனக்கு கேப் கூட இங்க கிடையாது. அதான் நான் ட்ராப் பண்ணறேன்னு சொன்னேன். “
“ நான் வரேன். “ அவள் பதில் ஏதும் கூறாமல் கதவை அடைத்து கொண்டு வெளியேறினாள்.
திமிர் பிடிச்சவ. ரொம்ப தான் திமிரு. அவன் திரும்பி டைனிங் டேபிளை பார்க்க அங்கு எல்லாம் காலி ஆகி இருந்தது. கிச்சன் சென்று பாத்திரங்களை உருட்ட அங்கும் ஏதும் இல்லை.
ஓஹோ மேடம் உங்களுக்கு மட்டும் சமைப்பீங்க. எனக்கு சமைக்க மாட்டீங்க. ம்ம்ம்ம் சரி எவ்ளோ தூரம் இப்படி இருப்பன்னு நானும் பார்க்குறேன். நினைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பஸ் பிடித்து ஆபிஸ் வந்து சேர்ந்த ராஜி தனது டேபிளில் பேக்கை வைத்து விட்டு தண்ணீர் எடுத்து குடிக்க அப்போது அவள் டேபிளில் டைரி மில்க் சாக்லேட் ஒன்றம் அதில் இருந்த பேப்பரில் சாரி. நம் இனிய வாழ்வின் துவக்கத்திற்க்காக காத்திருக்கிறேன். என்று எழுதிய பேப்பரும் இருந்தது.
அதை எடுத்து விட்டு கார்த்திக் கேபினை பார்க்க அங்கு கார்த்திக் கண்ணாடி வழியாக அவளை பார்த்து ஹாய் என்பது [போல கை அசைத்தான்.
ராஜி பேப்பரை கசக்கி தனது குப்பை தொட்டியில் போட்டு விட்டு அவனை பார்த்து முறைத்து கொண்டே சாக்லேட்டை எடுத்து குப்பை தொட்டியில் வீசினாள்.
இதை பார்த்து கொண்டிருந்த கார்த்திக் இண்டர்காமில் ராஜிக்கு கால் செய்தான். கார்த்திக் அழைப்பதை பார்த்த ராஜி அட்டென்ட் செய்ய உடனடியாக தனது கேபிணிற்கு வருமாறு அழைத்தான்.
“ மே ஐ கம் இன் சார். “
“ வா ராஜி. உள்ள வா. “
“ ஏன் சாக்லேட் எடுத்து குப்பை தொட்டில போட்ட, “
“ அது என்னோட பெர்சனல் விஷயம் சார். இப்போ நீங்க எதுக்கு கூப்பிட்டீங்க சார். “ முகத்தை வேறு எங்கோ வைத்து கொண்டு பேசினாள்.
“ மேடம்க்கு இன்னும் கோபம் தீரலையா. “
“ சார். நான் ஏன் சார் உங்க மேல கோவப்படனும். “
“ ராஜி சார் எல்லாம் வேண்டாம். கார்த்திக்னு கூப்பிடு. “
“ நீங்க தான சார் அப்படி கூப்பிட சொல்லிருக்கீங்க. ஆபிஸ் வந்த நீங்க எனக்கு பாஸ்னு. “
“ ஓகே ராஜி. ரெண்டு நாள் லீவ் எடுத்திருக்கீங்க. ஏன் இன்பார்ம் பண்ணல. “
“ அதன் உங்க கிட்ட சொன்னேனே. வீட்ல வச்சி. “
“ என்கிட்ட எங்க சொன்னீங்க. நீங்க உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொன்னேங்கன்னு சொல்லுங்க. “
“ நான் உங்ககிட்ட தான் சொன்னேன். “ அவள் அழுத்தமாக கூறினாள்.
அவள் பதில் கூற முடியாமல் முழிப்பதை ரசித்த கார்த்திக் “ சரி ஓகே. ஒரு மெயில் மட்டும் டைப் பண்ணி அனுப்புங்க. “
“ சரிங்க சார். வேற சார். “
“ ஒன்னும் இல்ல. நீங்க போகலாம். “
அவள் சென்று விட அவள் போவதை வாயில் கையை வைத்து கொண்டு சிரித்த முகமாக பார்த்து கொண்டிருந்தான்.
சில மணி நேரம் கழித்து அரவிந்த் கார்த்திக் கேபிணிற்கு வர “ கார்த்திக் இன்னைக்கு கிளைன்ட் மீட்டிங் இருக்கு. எல்லாம் ரெடி பண்ணியாச்சு. “
“ எல்லாம் செக் பண்ணிட்டியா “
“ ம்ம்ம் பண்ணிட்டேன் கார்த்திக். “
“ திரும்பவும் ஒரு தடவை கரெக்சன் பார்த்துக்கோ. மிஸ்டேக் வர கூடாது. “
“ ஓகே கார்த்திக். “
“ அப்பரம் உன் தங்கச்சி இன்னைக்கு வேலைக்கு வந்திட்டா போல. “
“ ஏன் கார்த்திக் உன் பொண்டாட்டின்னு சொல்ல வேண்டியது தான. “
“ சரிப்பா என் பொண்டாட்டி வேலைக்கு வந்துட்டா. உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா. “
“ நான் இன்னும் ராஜிகிட்ட பேசல. சரி உனக்கு என்ன அவ மேல இவ்ளோ அக்கறை. “
“ நான் தானடா அக்கறை படனும். டேய் நியாப்படி பார்த்தா அன்னைக்கு நீ செஞ்சதுக்கு நான் தாண்டா உன்மேல கோவபடனும். ஆனா நீ மூஞ்ச தூக்கிட்டு போற. “
“ அப்போ நீ செஞ்சிட்டு இருக்குறது சரின்னு சொல்றியா. “
“ நான் செஞ்சிட்டு இருக்கிறது தப்பு தாண்டா. அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற. “
“ ச்சீ உன்னால தான் இப்படி எல்லாம் பேச முடியும். உங்கிட்ட பேசுறதே வேஸ்ட். நான் வரேன். “ சொல்லிவிட்டு கதவை திறந்து சென்றான் அரவிந்த்.
Continue….i’ll write more if i get time sorry…..
