“ சொல்லு ராஜி. நான் புரிஞ்சிகிடுறேன். ,முதல்ல இந்த காபிய குடி. “ அவளிடம் காப்பிய நீட்டினான்.
ராஜி அதை தட்டி விட்டு வெளிய போங்கன்னா வெளிய போங்க என்று கத்தினாள்.
கார்த்திக் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியேறினான். அவனுக்கு இப்போது தலைக்கு மேல் கோபம் வந்தது. அனால் அவளிடம் வாக்குவாதம் செய்யாமல் வெளியே வந்தான். வந்தவன் கதவை அடைக்கும் முன் ஒரு முறை அவளை பார்க்க முட்டியை தலைக்கு வைத்து வயிற்றை பிடித்து கொண்டிருந்தாள்.
“ என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி பீகேவ் பண்றா. “ இறங்கி போறன்னு ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்கா. ச்ச. “
அவன் மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டு காபியை எடுத்து டிவி யை ஓட விட்டான்.
ஒவ்வொரு சேனலாக மாற்றி கொண்டிருக்க அப்போது டிவியில் ஸ்டேப்ரீ விளம்பரம் ஓடியது. கூடவே அதில் நடித்த பெண்மணி சுருண்டு படுத்திருப்பது போல விளம்பரம் வந்தது.
காபி கப்பை கீழே வைத்தவன் ஒரு நிமிடம் யோசித்தவன் “ ஒஹ் ஷிட். இதை புரிஞ்சிக்காம இருந்துட்டேனே. “ வேகம் வேகமாக சட்டையை எடுத்து அணிந்தவன் பைக் சாவியை எடுத்து கொண்டு லிப்ட் நோக்கி சென்றான்.
அவன் பேன்ட்டை கூட இறக்காமல் சட்டையில் மேல் பட்டனகளை போடாமல் வேகமாக பைக்கை கிளப்பினான்.
அருகில் இருந்த மெடிக்கல் ஸ்டோர் சென்றவன் இரண்டு பாக்கேடுகள் வாங்கி கொண்டு வலி குறைவதற்கு மாத்திரைகள் வங்கி கொண்டு ப்ளேட் நோக்கி விரைந்தான்.
பிளாட்டை திறந்து உள்ளே வந்தவன் அங்கொன்றும் இங்கொன்றுமாக செருப்பை வீசினான். ராஜி ரூம் கதவை மறுபடியும் தட்டினான்.
“ ராஜி. ஒரு நிமிஷம் ராஜி “
“ என்ன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுங்களேன். உங்களை கெஞ்சி கேட்டுகிடுறேன். சத்தியமா என்னால முடியல. “
“ இல்ல ராஜி ஒரு நிமிஷம் கொஞ்சம் கதவை மட்டும் திற. என் முகத்தை கூட பார்க்க வேண்டாம். ப்ளீஸ். “
அவள் கதவை திறக்க கார்த்திக் வெளிபக்கம் இருந்து இருந்து கதவை பிடித்து கொண்டு தான் வாங்கி வந்தவற்றை கதவு அருகில் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ராஜி அது என்னவென்று புரியாமல் எடுத்து கொண்டு பிரித்து பார்க்க அதில் உள்ளே இரண்டு பாக்கெட்டுகள் பேப்பரில் சுற்றி இருந்தது. கதவை அடைத்து விட்டு அதை எடுத்து கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.
அந்த இரவு ராஜி ரூமில் படுத்துக் கொண்டிருந்தாள். அப்போது கார்த்திக் ரூம் கதவை தட்டினான். ராஜி வேண்டாவெறுப்பாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே கார்த்திக் கையில் ஒரு டம்ளர் உடன் நின்று கொண்டிருந்தான். அவனைக் கண்ட ராஜி அவனிடம் பேசாமல் திரும்பி சென்று மெத்தையில் படுத்துக்கொண்டாள். டம்ளருடன் அவளிடம் சென்ற கார்த்திக்
” இப்போது பரவாயில்லையா ராஜி. ” என்று கேட்டான்
” எனக்கு எப்படியோ இருந்துட்டு போவுது தயவு செஞ்சு கொஞ்சம் வெளியே போங்க. திரும்பத் திரும்ப வந்து இப்படித் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காதீங்க.”
” ராஜி நான் உன்ன தொந்தரவு பண்ண வரல. இதுல கஷாயம் இருக்கு. இந்த கசாயத்தை குடி. கொஞ்சம் வலி குறையும். ”
” எனக்கு ஒன்னும் தேவை இல்ல. ரெண்டு நாளைக்கு என்ன தொந்தரவு பண்ணாம இருங்க. ”
” இங்கே இருக்கிற வரை உன்னை நான் எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன். அம்மா கிட்ட கேட்டு இப்ப தான் இதை ரெடி பண்ணினேன். இதை மட்டும் குடிச்சிட்டு சாப்பிட்டு தூங்கு. ”
ராஜி அவன் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் எதிர்ப்புறமாக படுத்துக் கொண்டிருந்தாள்.
” சரி இங்கே வைத்து விட்டுப் போகிறேன் நீ அப்புறமா குடி. ”
டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு ராஜியிடம் சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே சென்றான் கார்த்திக். அவன் வெளியே சென்றதும் டம்ளரில் இருந்த கசாயத்தை எடுத்து குளிக்க தொடங்கினாள் ராஜி. அவள் அதை குடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்து இருக்க அவளது போன் ரிங் ஆனது.
எடுத்துப் பார்க்க லக்ஷ்மி கால் செய்திருந்தாள். அட்டெண்ட் செய்து ” ஹலோ சொல்லுங்க அத்தை. நல்லா இருக்கீங்களா ” என்றாள்.
” என்னமா ராஜி எப்படி இருக்க. உடம்பு சரியில்லன்னு கார்த்திக் சொன்னான். இப்ப எப்படிமா இருக்கு. ”
” ம் பரவாயில்லை அத்தை. இப்பதான் கசாயம் கொடுத்தாங்க குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன்.
” என்ன பொண்ணுமா நீ. பொண்ணுங்களுக்கு இந்த வலி வருவது சகஜம்தான். நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இந்த கசாயம் எப்படி செய்றதுன்னு கார்த்திக் கிட்ட சொல்லி இருக்கேன் அவன் கிட்ட கேட்டு மூணு நாளைக்கு தொடர்ந்து போட்டு குடி. ”
“ சரிங்க அத்தை “
“ ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க. சந்தோசமா இருக்கீங்களா. சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்லுமா. “
“ கண்டிப்பாக அத்தை. “
“ சரி மா. நீ ரெஸ்ட் எடு. நான் நாளைக்கு பேசுகிறேன். “
அத்தையிடம் பேசிவிட்டு ராஜி போனை வைத்தாள். அவளுக்கு இப்போது வலி முற்றிலும் குறைந்து விட்டது போல இருந்தது. ரூம் கதவை திறந்து வெளியே சென்று பார்க்க கார்த்திக் ஹாலில் உட்கார்ந்திருந்தான். அவனருகில் சென்று ஒரு நிமிஷம் என்றாள்.
“ என்ன ராஜி சொல்லு. “
என் வாழ்க்கையில உங்ககிட்ட எந்த உதவியும் எதிர்பார்த்து இருக்கக்கூடாது என நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் கடவுள் என்ன உங்க கிட்ட உதவி கேட்கிற இடத்தில நிக்க வச்சுட்டாரு. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி ஆனா இதை காரணம் வச்சு என் கிட்ட நெருங்க ட்ரை பண்ணாதீங்க. நீங்க சொன்ன அந்த ஒரு ஒரு வார்த்தையில உங்க மேல இருந்த மதிப்பு காதல் அன்பு பாசம் எல்லாமே செத்துப்போச்சு. ”
” ராஜி நான் அன்னைக்கு ஒரு கோபத்தில் தான் அப்படி உன்கிட்ட சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அத நெனச்சு ரொம்ப பீல் பண்றேன். ப்ளீஸ் ராஜி. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு. கண்டிப்பா இந்த முறை நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நம்பு. ”
” போதும் கார்த்திக். உங்களை நம்பி நம்பி நான் ஏமாந்தது எல்லாம் போதும். நீங்க சொன்ன மாதிரி நீங்க யாரோ நான் யாரோ அப்படின்னு இனிமே இருந்து விடுகிறேன். நான் இனிமே உங்களை எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன். எனக்கு ரெண்டு நாளைக்கு லீவு வேணும். ஆபீஸ்ல மெயில் பண்றேன் பாத்துக்கோங்க இப்ப எனக்கு ரெஸ்ட் எடுக்கணும் குட் நைட். “
அடுத்து வந்த இரண்டு நாட்கள் ராஜி வீட்டிலையே இருக்க கார்த்திக் ஆபிஸிற்கு சென்றான். அரவிந்தும் கார்த்திக்கிடம் பேசாமல் தான் உண்டு வேலை உண்டு என்பது போல இருந்து கொண்டான். கார்த்திக்கும் சந்துருவும் மட்டும் பேசி கொண்டனர்.
ராஜிக்கு உடல் நிலை சற்று சரி ஆக அன்று காலை குளித்து விட்டு வேலைக்கு செல்ல தயார் ஆனாள். காலை உணவு தயார் செய்து கொண்டிருக்க கார்த்திக் தூங்கி எழுந்து ஹாலிற்கு வர அங்கு கிச்சனில் சமையல் வாசம் வந்து கொண்டிருந்தது.
ஆஹா ரொம்ப நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு கார்த்தி இன்னைக்கு ஒரு புடி பிடிச்சிடனும். ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹா. நல்ல வாசம் வருதே. ராஜி இவ்ளோ நல்லா சமைப்பியா. இதோ வரன் சொல்லி கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷப் ஆகி விட்டு வெளியே வந்தான்.
கிச்சன் சென்று பார்க்க ராஜி புத்தம் புது மலராக குளித்து முடித்து தலையில் துண்டை கட்டி கொண்டு, முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளுடன் சமையல் செய்து கொண்டிருந்தாள். கிச்சன் வாசலில் நின்று கொண்டு அவள் சமைக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.
வாசலில் நிழல் அசைவதை கவனித்த ராஜி அதை சட்டை செய்யாமல் காபி கலந்து கப்பில் ஊற்றினாள்.
( “ என்னதான் பொண்ணுங்களுக்கு கோபம் இருந்தாலும் புருஷனுக்கு செய்ய வேண்டிய கடமைன்னு வந்துட்டா சரியா செஞ்சிடுறாங்க. இப்போ காபி கொடுத்துட்டா கோபம் கொஞ்சம் குறைஞ்சிட்டுன்னு அர்த்தம். கார்த்தி வரா வரா. “ )
“ கொடு ராஜி. “ சொல்லி கொண்டே கையை நீட்ட ராஜி அவனை மதியாமல் காபி கப்புடன் சென்று ரூமுக்குள் புகுந்தாள்.
அப்போ இவ்ளோ நேரம் பண்ணிட்டு இருந்ததெல்லாம் எனக்கு இல்லையா. ச்ச. கார்த்திக் கழுத்தில் கிடந்த துண்டுடன் அடுப்பை பார்க்க பாத்திரம் காலி ஆக இருந்தது. அடுப்பை பற்ற வைத்து தனக்கு காபி கலந்து எடுத்து கொண்டு ஹாலிற்கு வந்தான்.
சில நிமிடங்கள் சென்று விட ராஜி அழகாக சுடிதார் அணிந்து கொண்டு தலையை லூஸ் ஹேர் விட்டு அவனை கடந்து செல்ல ஒரு வித நறுமணம் வீச கார்த்திக் காபி கோப்பையுடன் ஸ்தம்பித்து இருந்தான்.
ராஜி தான் கொண்டு வந்த காபி கோப்பையை கழுவி வைத்து விட்டு டைனிங் டேபிள் சென்று அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
“ தனியா திங்கிறாலே. ஒரு வார்த்தை ஆச்சும் கூப்பிடுறாளா பாரு. எங்க கூப்பிடுவா. காபியே கொடுக்கலை. இதுல சாப்பாடு வேறையா. “ அவள் சாப்பிடுவதை பார்த்து கொண்டிருக்க ராஜிக்கு புரை ஏறியது.
அவள் கார்த்திக்கை திரும்பி முறைத்து பார்க்க அவன் வேறு பக்கமாக திரும்பி கொண்டான். ராஜி சாப்பிட்டு முடித்து விட்டு பிளேட்டை கழுவி கொண்டு ரூமிற்குள் செல்ல கார்த்திக் அங்கிருந்து நகர்ந்தான். பின் அவனும் தான் பங்கிற்கு ரூமிற்குள் சென்று உடை மாற்றி விட்டு கிளம்ப இருவரும் ஒரே நேரத்தில் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
கார்த்திக் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை ராஜிடிடம் கொடுத்தான். “ ராஜி ஒரு நிமிஷம். இது பிளாட்டோட இன்னொரு கீ. இது உன்கிட்டயே இருக்கட்டும். “ சொல்லிவிட்டு அவளிடம் கொடுத்தான். “
அதை வாங்கிய ராஜி தனது பேக்கிற்குள் வைத்து கொண்டு அவனை திரும்பி பார்க்காமல் சென்றாள்.
“ ராஜி. “
அவள் மீண்டும் நிற்க “ ராஜி நீ தனியா போக வேண்டாம். நான் வேணும்னா உன்ன ட்ராப் பண்றேன். “
“ எனக்கு எப்படி போகணும்னு தெரியும். உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. “
