“ வெளிய எடுத்து வச்சீங்கள்ள. தூக்கிட்டு வாங்க. “
“ எது. நானா. “
“ என்ன. புரியல. நீங்க தான எடுத்து வச்சீங்க. அப்போ நீங்க தான் தூக்கிட்டு வரணும். “
“ ஆமா நான் தான எடுத்து வச்சேன். நானே எடுத்துட்டு வரேன். “ கேப் டிரைவரை அவன் துணைக்கு கூப்பிட ராஜி அண்ணா நீங்க இருங்க. அவுங்க எடுத்து வைப்பாங்க. என்று சொல்லி விட்டு காரில் ஏறி கொண்டாள்.
கார்த்திக் அவளையே பார்த்து கொண்டிருக்க ராஜி கார் கண்ணாடி வழியாக கையை காட்டி டைம் ஆகுது போல சைகை செய்தாள்.
கார்த்திக் வெறுப்பாக சூட்கேசை தூக்கி கார் டிக்கியில் வைத்து விட்டு காரின் பின் சீட்டில் ராஜி அருகில் அமர்ந்தான்.
“ ஒரு நிமிஷம். நீங்க முன்னாடி போய் இருங்க. “
“ இல்ல ராஜி. நான். “
“ போங்கன்னு சொன்னேன். “ சொல்லி விட்டு அவனை முறைத்தாள்.
“ சரி போறேன். “ ஒன்றும் சொல்லாமல் முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான்.
கார் கிளம்ப இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
கார்த்திக்கின் பிளாட்டிற்கு சென்றதும் இருவரும் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
“ வா ராஜி. இங்க ரெண்டு பெட்ரூம் இருக்கு. இன்னொரு ரூம் யூஸ் பண்ணாம தான் இருக்கு. நாம ரெண்டு பேரும் சேர்ந்து அதை ரெடி பண்ணிடலாம். நீ அங்க தங்கிக்கோ. “
“ எனக்கு அந்த பெட்ரூம் லா வேண்டாம். “
“ நீ என்ன சொல்ற. அப்போ நம்ம ரெண்டு பேரும் ஒரே பெட்ரூம்லையே படுத்துக்க்கலாம்னு சொல்றியா. எனக்கு ஓகே. “
“ எனக்கு அந்த பெட்ரூம் தான் வேண்டாம்னு சொன்னேனே தவிர உங்க கூட தங்குறேன்னு சொல்லல. “
“ அப்போ எப்படி ராஜி. “
“ நான் நீங்க இருக்குற ரூமை எடுத்துக்குறேன். நீங்க நாதா பெட்ரூமை எடுத்துகோங்க. “
“ நான் அந்த பெட்ரூம்லையா. அதை கிளீன் பண்ணவே இரு நாள் ஆகுமே. நான் எங்க ஹால்லையா படுக்க “
“ அது எனக்கு தெரியாது. உங்க விருப்பம் நீங்க எங்க வேணும்னாலும் படுத்துகோங்க.”
“ இல்ல ராஜி நாம ரெண்டு பேரும் அந்த ரூம்லயே படுத்த்துகலாமே. நீ ஒரு ஓரமா நான் ஒரு ஓரமா. “
“ நான் சொன்னா சொன்னது தான். இல்லனா நான் இப்போவே கிளம்பி போய்கிட்டே இருக்கேன். “
“ சரி ராஜி. நான் அங்கயே போய்க்கிடுறேன். நீ உள்ள போ. நான் அந்த ரூமை கிளீன் பண்றேன். “
“ ராஜி சூட்கேசை தள்ளிக்கொண்டு ரூமிற்கு செல்ல கார்த்திக் ஒரு நிமிஷம் என்றான்.
அவள் திரும்பி அவனை பார்க்க “ இந்த ஷர்ட் உனக்கு நியாபகம் இருக்கா ராஜி. “
“ தெரியல. “
“ இல்ல இது அன்னைக்கு நாம ரெண்டு பேரும். “
“ எனக்கு டையர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும். “
“ சரி ராஜி நீ ரெஸ்ட் எடு. “
அவள் உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள்.
கார்த்திக் பண்ட ஷர்டுடன் இருக்க சட்டையை கலட்டி ஹாலில் இருந்த சோபாவில் வைத்து விட்டு பேன்ட்டை முட்டி வரை மடித்தான். பாத்ரூம் சென்று வாளியையும் துடைப்பத்தையும் எடுத்துக்கொண்டு பெட் ரூம் நோக்கி செல்ல ராஜி கதவை திறந்து அவனுடைய துங்களை மொத்தமாக அள்ளி ஹாலை நோக்கி வீசினாள்.
கார்த்திக் அதை பார்த்து கொண்டு நின்றான். செம கோவத்துல இருக்கா போல. சரி எங்க போய்ட போரா. கரைப்பார் கரைத்தால் கல்லே தேயுது. ராஜி தேய மாட்டாளா. பொறுமை பொறுமை. சொல்லிக்கொண்டே துணிகளை அள்ளி சோபாவில் போட்டு விட்டு பெட்ரூம் நோக்கி சென்று கிளீன் செய்ய ஆரம்பித்தான்.
மதிய நேரம் மணி இரண்டை நெருங்கி கொண்டிருக்க ராஜி ரூமை விட்டு வெளியே வந்தாள். கார்த்திக்கை தேடி பார்க்க அவன் ஹாலில் இல்லை. டைனிங் டேபிளில் இருவருக்கும் சாப்பாடு இருக்க கார்த்திக் தோளில் டவலுடன் முகம் முழுதும் ஈரத்துடன் வியர்த்த முகமாக பெட்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
“ வா ராஜி. சாப்பிடலாம். இப்போ தான் கிளீன் பண்ணி முடிச்சேன். உன்ன எழுப்பலாம்னு பார்த்தேன். தொந்தரவு பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன். லன்ச் வாங்கிட்டு வந்துருக்கேன். எடுத்து வச்சிட்டேன். நீ சாப்பிடு. “
ராஜி ஒன்றும் சொல்லாமல் டைனிங் டேபிள் சென்று அமர்ந்தாள். சாப்பாடை எடுத்து ப்ளேட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள்.
கார்த்திக் அவள் சாப்பிடும் அழகை சோபாவில் இருந்து ரசித்து கொண்டிருக்க ராஜி அவனை நோக்கி திரும்பினாள். அவள் திரும்புவதை கண்ட கார்த்திக் சோபாவில் கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
ராஜி கார்த்திக்கை பார்க்க அவன் முகத்தில் வியர்வை வழிய தலை முடியில் தூசியுமாக, தோளில் துண்டுடன் பேப்பரை வெறித்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாக ராஜி சாப்பிட்டு முடித்து விட்டு பிளேட்டை கூட எடுக்காமல் அப்படியே கை கழுவ சென்றாள்.
கார்த்திக் அவள் செல்வதை போகும் வரை பார்த்து கொண்டிருந்தான். ரொம்ப ஓவரா தான் பண்றா. பிளேட்டை கூட மேடம்க்கு கழுவி வைக்க முடியாதாக்கும். இன்னும் என்னல்லாம் செய்ய போறாளோ.
ஆமா நீ பண்ணலையா. நீ பன்னநினதை விட அவ பண்றது கம்மி தான். போண்டட்டிகு தான இதை செய்ற. ஏன் அவளுக்கு முடியாம இருக்கும் அதான் பிளேட்டை கழுவாம போறா. சரி எல்லாம் ஒரு உதவி தான. தான் மனதிற்குள்ளே பேசிவிட்டு பிளேட்டை எடுத்து கழுவி வைத்தான் பின் தானும் சாப்பிட்டு விட்டு சோபாவிலே படுத்து தூங்கியும் போனான். இவை அனைத்தையும் ராஜி கதவு இடுக்கின் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
சாயங்காலம் நேரம் ராஜி வயிற்றை பிடித்து கொண்டு ரூம் கதவை திறந்து வெளியே வர கார்த்திக் அப்போதும் தூங்கி கொண்டிருந்தான்.
“ அய்யோ இன்னைக்கு பார்த்து இது வரணுமா. எல்லாம் எடுத்து வச்சேன் அதை மறந்துட்டேனே. இவன் கிட்ட கேட்கலாமா. இதை போய் இவன்கிட்ட கேட்கவா. அவளுக்கு அழுகையாக வந்தது. “
அவள் நெருங்கி வந்து அவனை எழுப்பலாமா என்று யோசித்தாள். அந்த என்னத்தை கை விட்டு விட்டு ரூமிற்கு சென்று கதவை வேகமாக சாத்தினாள்.
அதில் உண்டான சத்தில் தூக்கம் கலைந்த கார்த்திக் எழுந்து பார்த்தான். சோபாவை விட்டு எழுந்து பேஸ் வாஷ் செய்து விட்டு இருவருக்கும் காபி கலந்தான். அதை இரண்டு கப்புகளில் ஊற்றி ராஜி ரூம் கதவை தட்டினான்.
“ ராஜி. ராஜி……. “
உள்ளே ராஜி வயிற்றை பிடித்து கொண்டு அலுத்து கொண்டிருந்தாள்.
“ யாருகிட்ட போய் நான் கேட்க. இங்க எனக்கு யாரை தெரியும். ரூம்லயே இருந்திருக்கலாம். இவன் வேற “
“ ராஜி. காபி ரெடி. வெளிய வா. இல்ல நான் உள்ள வரட்டுமா. “
“ நீங்க ஒன்னும் வர வேண்டாம். இப்போ எனக்கு காபி ஒன்னு தான் கேடு. “
“கார்த்திக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று “ என்ன ஆச்சு ராஜி “ என்றான்.
ராஜி பேட்டின் ஓரமாக அமர்ந்து கொண்டு அலுத்து கொண்டிருந்தாள்.
“ ராஜி உங்கிட்ட தான். மறுபடியும் உடம்பு சரி இல்லையா. ஹாஸ்பிட்டல் போகலாமா. “
“ ஒன்னும் இல்ல முதல்ல நீங்க வெளிய போங்க. “
“ ராஜி கோவப்படாத. என்னனு சொன்னா தான தெரியும். “
“ ஒன்னும் தெரிய வேண்டாம். இதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. வெளிய போங்க.“
