சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 5

இசையுடன் இந்த வரிகளை கேட்கும் போது ஏனோ அவன் சொர்க்கத்தில் மிதந்து ராஜியுடன் கைபிடித்து செல்வது போல உணர்ந்தான்
காலை எழுந்ததும் கார்த்திக் குளித்து முடித்து விட்டு நேற்று எடுத்து வைத்த சட்டையை அணிந்து கொண்டு ராஜி வீட்டிற்கு கிளம்பினான். போகும் வழியில் அவளுக்கு காலை உணவு வாங்கி கொண்டு சென்றான்.

வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்த இம்முறை திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் அழுத்த இம்முறை உள்ளே இருந்து வரேன் என்ற சத்தம் கேட்டது.

கார்த்திக் ராஜியை காணும் ஆவலில் காத்திருக்க ராஜி கதவை திறந்தாள். கார்த்திக்கை பார்த்ததும் அவள் வேண்டா வெறுப்பாக திரும்பி கொள்ள கார்த்திக் சிரித்து கொண்டே அவளை பார்த்து உள்ளே வரலாமா என்றான்.

ராஜி ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல கார்த்திக் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.

“ இந்தா உனக்கு மார்னிங் சாப்பாடு இதுல இருக்கு. “

“ ஒன்னும் வேண்டாம். நான் சாப்பிட்டேன். இப்போ எதுக்கு இங்க வரீங்க. “

“ ஏன் வரக்கூடாதா. நம்ம ரெண்டு பேர்க்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அது உனக்கு நியாபகம் இருக்கா. “

“ இப்போ எதுக்கு தேவை இல்லாம பேசிகிட்டு. எதுக்கு வந்தீங்க. அதை மட்டும் சொல்லுங்க சார். “

“ நான் எதுக்கு வந்தேன்னா. “ சொல்லி கொண்டே அவள் பெட்ரூம் நோக்கி சென்றான்.

“ அங்க எதுக்கு போறீங்க. நில்லுங்க. “

கார்த்திக் அவள் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் ரூமினுள் சென்று அவளுடைய துணிகளை எல்லாம் எடுத்து பெட்டில் எடுத்து வைத்தான்.

“ என்ன பண்றீங்க. உங்களுக்கு வேணும். என்னாச்சு உங்களுக்கு. “

“ எனக்கு இந்த துணி எல்லாம் எடுத்து வைக்கணும். அதுக்கு ஒரு பேக் வேணும். பெரிய சைஸ் சூட்கேஸ் இருந்தாலும் நல்லது. கிடைக்குமா. “

“ உங்களுக்கு எதுக்கு என்னோட டிரஸ். முதல்ல வெளிய போங்க. இல்லனா நான் கத்தி கூச்சல் போட்டுடுவேன். “

“ அப்படியா. “ அவன் அவளை பார்த்து சிறிது விட்டு “ சூட் கேஸ் எங்க இருக்கு. “ சொல்லிக்கொண்டே தேடினான்.

“ ஆங். இந்த இருக்கு. “

ராஜிக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. லூசு மாதிரி இவன் செய்வதை எல்லாம் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தாள்.

துணிகளை எல்லாம் சூட் கேசில் வைத்து விட்டு ஊரில் இருந்து அவள் கொண்டு வந்த துணிகள் எல்லாம் ஒரு சூட்கேசில் அப்படியே வைத்து இருந்ததால் அதையும் எடுத்து கொண்டு ஜிப் இலுத்து மூடினான்.

“ ம்ம்ம்ம் முடிஞ்சுது. போகலாமா. “

“ எங்க போகணும். நான் எதுக்கு உங்க கூட வரணும். இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க. “

“ பார்த்தா தெரியல. உன் டிரஸ் எல்லாம் பேக் பன்னி வச்சிட்டேன். என்னோட பிளாட்டுக்கு போக போறோம். “

“ என்னது உங்க கூடவா. என்னபத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்க கூப்டா வரணும். பிடிக்கலன்னா போகனுமா. இல்ல நேத்து நீங்க சொன்ன மாதிரி அரிப்பெடுத்தவ எப்போ கூப்பிட்டாலும் வருவான்னு நினைச்சீங்களா. “

“ அய்யோ ராஜி சாரி ராஜி. அன்னைக்கு நான் ஏதோ கோவத்துல அப்படி சொல்லிட்டேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நான் இப்போ பழைய மாதிரி இல்ல. “

“ நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. “

“ சரி ராஜி நான் போறேன். போறதுக்கு முன்னாடி அம்மாகிட்ட போன் பண்ணி நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டு நான் போறேன். அவுங்க சொல்லட்டும் நான் என்ன பண்ணணு.”

“ அய்யோ ஏன் இப்படி என்ன கொள்ளுறீங்க. உங்களை லவ் பண்ணின பாவத்துக்கு நான் இன்னும் என்னலா அனுபவிக்க வேண்டி இருக்குதோ. “

“ சரி ராஜி இப்படி பண்ணிக்கலாம். நீ என்கூட எப்போதும் இருக்க வேண்டாம். அந்த சனியன் வந்ததும் நீ இங்க திரும்பி வந்துடு, உனக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நீ என்கூட இரு. அப்புறம் நான் உன்ன திந்தரவு பண்ண மாட்டேன். ப்ளீஸ். “

“ ம்ஹூம் முடியாது. “

“ ஒரு தடவை ராஜி. கடைசியா நான் சொறதை கேளு.”

ராஜி அமைதியாக யோசிக்க தொடங்கினாள். அவனும் அவள் யோசிக்கட்டும் என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“ இல்ல இது சரி வராது. நாம ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது. இதுவும் உங்களோட நடிப்பா இருக்கும். நான் வர மாட்டேன். “

“ சரி ராஜி அப்போ எனக்கும் வேற வழியே தெரியல. நான் எங்க பேசணுமோ அங்க பேசிக்கிடுறேன். “

“ எப்போதும் நான் உங்களுக்கு கீழ தான் இருக்கணும்னு நினைக்கிரீங்கல்ல. சரி வரேன். இபவும் என் மனசார நான் உங்க கூட வரல. நம்ம ரெண்டு பேரால பெரியவங்க கஷ்ட பட கூடாதுன்னு தான் நான் வர சம்மதிக்கிறேன். ஆனால் அங்க வந்தா நம்ம ரெண்டு பேருக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்க கூடாது. நீங்க யாரோ நான் யாரோ. எனக்காக நீங்க எதுவும் பண்ண கூடாது. உங்களுக்காக நான் எதுவும் பண்ண மாட்டேன். எந்த வகைளையும் நீங்க என்ன தொந்தரவு பண்ண கூடாது. “

“ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் ராஜி. நீ வரேன்னு சொன்னதே எனக்கு சந்தோஷம். “

“ நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. நான் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன். “

“ ஏன் நான் இங்க இருந்தா என்ன. நான் பாட்டுக்கு ஹால்ல ஒரு ஓரமா இருக்குரேனே. “ அவளை பார்த்து சிரித்தான்.

“ நான் மனசு மாறுரதுக்குள்ள வெளிய போங்க. “

“ ம்ம்ம்ம் ஓகே “ தலையை சிலிப்பி கொண்டு வெளியே சென்றான்.

கார்த்திக் வீட்டிற்கு வெளியே காத்து கொண்டிருக்க ராஜி குளித்து முடித்து விட்டு சிம்பிள்ளாக ஒரு சுடிதார் அணிந்து வெளியே வந்தாள்.

“ போகலாமா “

“ ம்ம்ம் போகலாம். “

“ ராஜி உன்னோட திங்க்ஸ் எங்க. “

7 Comments

  1. Poda thevidaya payable, unnala oru story olunga poda mudiyatha ne la ethuku uyirodu eruka poi sagu quikq

  2. Bro/sis,please continue posting of this love story,i really liked the story apart from lust i enjoy their care and moments,everyday i check only for this story instead of reading another lust stories im addicted to this one so make post everyday,i hope you receive…

  3. Bro please continue panunga bro story nalla poguthu bro it was soo intresting

  4. Bro please continue panunga bro story nalla poguthu bro it was soo intresting sekiram upload panunga bro

  5. it was soo intresting sekiram upload panunga bro

  6. it was soo intresting sekiram upload panunga bro please

  7. Continue pannunga bro story nalla irukku

Comments are closed.