“ உன்கூட இருந்து அதை மட்டும் தான பீல் பண்ண முடியும். “
“ இல்லடா நான் எதுக்கு கேக்குறேன்னா “
“ அப்பா சாமி நீ ன்னும் கேட்க வேண்டாம். உன் பிளாட் வந்துட்டு. போயிட்டு வா ராஜா. “ அவனை கையெடுத்து கும்பிட்டு விட்டு வண்டியை கிளப்பி கொண்டு ஓடினான். கார்த்திக் அவனை பார்த்து சிரித்து கொண்டே பிளாட் நோக்கி சென்றான்.
இரவு வாக்கில் மீரா ஊருக்கு கிளம்ப ராஜியிடம் சொல்ல சென்றாள். அனால் ராஜி அவள் வருவதை கண்டு கதவை மூடிக்கொண்டு பெட்டில் விழுந்து அழுதாள். ராஜி இப்படி இருப்பது வருத்தமாக இருந்தாலும் வேறு வழியின்றி கனத்த மனதுடன் வெளியே சென்றாள்.
பிளாட்டில் கார்த்திக்கிற்கு இருக்க முடியவில்லை. ராஜியின் அழுத முகம் அவன் நினைவிற்கு வர தன்னைத்தானே கன்னத்தில் அடித்து கொண்டான். அவன் எடுத்து வைத்த சாக்லேட் அவன் கண்ணில் பட ஓடி சென்று அதை பிரித்து எடுத்து வேகம் வேகமாக சாப்பிட்டான். கைகளில் ஒட்டி இருந்ததையும் நக்கி சாப்பிட்டான்.

Super story 💐
இப்போ தான் கதை நல்லா போது