சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 4

“ என்ன மச்சான் இன்னும் கிளம்பலையா தனியா உட்காந்துருக்க.”

“ போகனும்ட. மனசு சரி இல்ல. நீ பைக்க எடு. ரெண்டு பேரும் போகலாம். “

“ நீ இப்படி இருக்குற ஆளே கிடையாதே. எதாச்சும் பிரச்சனையா. கிருஷ் எதாச்சும் சொன்னாரா. “

“ அதெல்லாம் ஒன்னும் இல்லடா. “

“ சரி வா கிளம்பலாம். “

இருவரும் பேக்கை மாட்டி கொண்டு கிளம்ப போகும் வழியில் சந்துரு கேட்டான்.

“ மச்சான் இன்னைக்கு சாக்லேட் தரலையே. மறந்துட்டயா. “

அவன் சொன்ன பின் சாக்லேட் நியாபகம் வர பாக்கெட்டை தடவி பார்த்து கொண்டான்.

“ மச்சான் ஒரு தம் போட்டுட்டு போகலாம்டா. ரொம்ப நேரம் ஆச்சு தம் போட்டு. “ சொல்லிவிட்டு பைக்கை கடை ஓரமாக நிறுத்தினான்.

“ அண்ணா ரெண்டு பில்ட்டர் கொடுங்க. “ வாங்கி கொண்டு இந்தாடா என்றான்.

“ இல்லடா எனக்கு வேண்டாம். நீ அடி. “

“ என்ன மச்சான் புதுசா இருக்கு. “

“ இல்லடா விட்டுட்டேன். இனி தம் அடிக்கிறது இல்ல. “

“ டேய் என்னடா திடீர்னு திருந்திடுறீங்க. மனசு சரி இல்லனா புகைய உள்ள தள்ளனும். புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்தனும்னு சும்மாவாடா சொல்லிருக்காங்க. “

“ வேண்டாம்னு சொன்னா விடேன்டா. “

“ சரி மச்சான். நீ சோகமா இருக்க. இன்னைக்கு நைட் உன் ரூம்ல உன் சோகம் போற அளவுக்கு புல்லா குடிக்கிறோம். எல்லாத்தையும் மறக்குறோம் என்ன சொல்ற. “

“ நான் குடிக்கிறதையும் நிறுத்திட்டேன். “

“ டேய் என்னடா குண்டுக்கு மேல குண்டை தூக்கி போடுற. மச்சான் சத்தியமா சொல்றேண்டா. நீ சொல்றதை நம்பவே முடியல. அப்போ எதுக்குடா என்ன கூப்பிட்ட. “

“ வண்டியோட்ட டிரைவர் இல்ல அதான் உன்ன கூப்பிட்டேன். “

“ இதுக்கு மேல என்ன இன்சல்ட் பண்ண முடியாதுடா. நான் கிளம்புறேன்.”

கார்த்திக்கிற்கு சிரிப்பு தான் வந்தது.

“ சரி மச்சான் நீ கிளம்பு. நான் ஆடோ பிடிச்சி போய்க்கிடுறேன் “

“ போய்டுவேண்டா. “

“ போடா. நான் ஒன்னும் சொல்லல. “

அவன் சிறிது தூரம் சென்று விட்டு திரும்பி வந்தான்.

“ என்ன தான் இருந்தாலும் நான் நட்ப மதிக்கிறவண்டா. உன்ன இப்படியே விட்டுட்டு போனா உலகம் என்ன தப்பா பேசும். வா நானே உன்ன விட்டுடுறேன். “ சொல்லி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

கார்த்திக் சிரித்து கொண்டே பைக்கில் ஏறினான்.

சிறிது தூரம் சென்றிருக்க சந்துருவிடம் கேட்டான் கார்த்திக்.

“ லவ் பத்தி நீ என்னடா நினைக்குற. “

சடன் ப்ரேக் அடித்து கார்த்திக்கை திரும்பி பார்த்தான்.

“ என்னடா “

ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்து விட்டு வண்டியை ஓட்டினான்.

“ சந்துரு நீ லவ் பெயின் எப்படி இருக்கும்னு பீல் பண்ணிருக்கியா. “

( அதுக்குள்ள இவனுக்கு எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ. ஏற்கனவே பிரிச்சதெல்லாம் பத்தாதுன்னு இப்போ புதுசா பிரிக்க பார்க்குறான். நமக்கே இப்போ தான் புதுசா செட் ஆகிருக்கு அதை பிரிக்க ப்ளான் பண்றானே. சந்துரு. இவனை இறக்கி விடுற வரைக்கும் வாய திறந்துடாதடா. உஷார். )

அவனை திரும்பி பார்த்து ஹி ஹி ஹி ஹி என இளித்தான்.

“ என்னடா இளிக்குற. பதில் சொல்லுடா. “

2 Comments

  1. Super story 💐

  2. இப்போ தான் கதை நல்லா போது

Comments are closed.