சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 4 Like

ஏன் இப்படி பண்ணின ராஜி. இதுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். இவ்ளோ நாள் நல்லா நடிச்சிருக்க நீ. அப்போ அன்னைக்கு அலையன்ஸ் பார்த்தது. அப்பாவ பார்க்கனும்னு ஊருக்கு போனது. அய்யோ மண்டை வெடிச்சிடும் போல இருக்குதே. ராஜியின் அப்பாவிற்கு போன் செய்து கேட்டுவிடலாமா.

ம்ஹூம் வேண்டாம். நாளை ராஜியிடமே கேட்டு விடலாம்.இப்போதைக்கு தேவை இல்லாமல் பிரச்சனை இழுத்து விட கூடாது. நாளை ராஜியிடம் கேட்டுவிடுவதே சரி. பலவிதமாக மீரா சிந்தித்து கொண்டிருக்க அவள் போன் ஒலித்தது. யாரென்று பார்க்க அரவிந்த் தான் அழைத்திருந்தான்.

அய்யோ அரவிந்த். இவன்கிட்ட இப்போ சொல்லலாமா. வேண்டாம். உண்மை என்னனு தெரிஞ்ச அப்றம் சொல்லிக்கலாம். போனை அட்டென்ட் செய்து நார்மலாக பேசினாள்.

“ ஹலோ அரவிந்த் சொல்லு. “

“ என்னாச்சு மீரா. ஏன் கட் பண்ணிட்ட. “

“ ஒன்னும் இல்ல அரவிந்த். ஸ்டவ்ல பால் வச்சிருந்தேன். அதான். அராவிந்த் நான் நாளைக்கு பேசட்டுமா. தூக்கம் வருதுடா எனக்கு. “

“சரி மீரா நீ தூங்கு நாளைக்கு பேசிக்கலாம். குட் நைட். “

“ குட் நைட் டா. “

மீராவிற்கு தூக்கமே வரவில்லை. குழப்பத்தில் உருண்டு கொண்டிருந்தாள். எப்போது விடியும் என்று எதிர் பார்த்து கொண்டே எப்போது உறங்கினால் என்றே தெரியவில்லை.

விடிந்ததும் அவள் ராஜியை தேட அவள் பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது. அவள் ராஜி வருவதற்குள் பிரஷ் செய்து விட்டு ரசிக்கும் தனக்கும் காபி தயார் செய்து அவளுக்காக சோபாவில் காத்து கொண்டிருந்தாள்.

ராஜி குளித்து விட்டு சுடிதார் அணிந்து தலையை துவட்டி கொண்டிருந்தாள். மீராவிற்கு அவளிடம் கேட்டு விட நாக்கு துடித்து கொண்டிருந்தது. கட்டுப்படுத்தி கொண்டு ராசியை பார்த்து கொண்டிருந்தாள்.

மீரா தன்னையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்த ராஜி அவளிடம் என்ன அப்படி பார்க்குற என்றாள்.

“ உன் முகத்துல கல்யாண கலை தெரியுது அதான் பார்த்தேன். “

( என்ன இவ கரெக்டா சொல்றா. நாம ஓவரா நடிச்சிட்டோமோ. )

“ எ. எ, என்ன சொல்ற மீரா. “

“ இல்ல கழுத்துல புதுசா செயின்லா போட்ருக்க. அதை பார்த்தா புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி இருக்க. “

“ செயினா என் கழுத்துலையா. எங்க இருக்கு. “

( “ ராஜி தான் கழுத்தில் செயின் தெரிகிறதா என்று பார்த்தாள். இல்லையே பாத்ரூமில் வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செரிபர்த்து தானே வெளிய வந்தேன். இவ எந்த செயினை சொல்றா. “ )

இந்த செயினை தான் சொல்றேன். தனது போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோவை காண்பித்தாள்.

“ இது இது . இல்ல. உனக்கு. “” ராசிக்கு வாய் குழறியது.

“ ராஜி ரிலாக்ஸ். நீயே சொல்லு ராஜி. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன் கழுத்துல தாலி செயின் இருக்கு. இதை ஏன் என்கிட்டே நீ முன்னாடியே சொல்லல. இதை மறைக்கிற அளவுக்கு அப்படி நீ என்ன தப்பு பண்ணின. “

“ இல்ல மீரா அது வந்து. நான் தப்பு. பன் ன ல. . நா “

“ ராஜி ஒரு பிரெண்டா உன் நல்லதுக்காக தான் நான் கேக்குறேன். சொல்லு ராஜி. “

ராஜிக்கு கண்ணீர் திரண்டு வந்தது. அவள் மேலும் ஒரு வார்த்தை கூறினால் உடைந்து அழுது விடுவாள் என்ற நிலைமையில் இருந்தாள்.

“ உனக்கு கல்யாணம் ஆகியும் நீ இன்னும் கார்திக்க நினைச்சிட்டு இருக்குற அளவுக்கு நீ மோசமான பொண்ணு கிடையாது. ஆனா யாருக்கும் தெரியாம இந்த கல்யாணம் ஏன். என்ன நடந்துச்சு. யாரு உன் ஹஸ்பன்ட். “

“ மீரா. நிறுத்து. “ ராஜி கண்ணீர் விட்டு கதறினாள்.

“ ராஜி அழாத ராஜி. ப்ளீஸ் ராஜி.”. அவள் அருகில் சென்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

“ மீரா என் நிலைமை யாருக்கும் வர கூடாது மீரா. என்னோட கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்ல முடியாம நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும். நான் உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்றேன்,. ஆனா நீ எனக்கு அதுக்கு முன்னாடி ஒரு சத்தியம் பண்ணனும். நீ இதை யார்கிட்டையுன் சொல்ல மாட்டேன்னு. “

“ சத்தியமா சொல்ல மாட்டேன் ராஜி. என்ன நம்பி நீ சொல்லலாம். “

“ எனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. “

“ என்னது கார்த்திக் கூடவா. நீ என்ன சொல்ற ராஜி. “

“ ஆமா மீரா கார்த்திக் தான் என்னோட ஹஸ்பன்ட். “

“ அப்போ ஏன் ரெண்டு பேரும் இதை மறைச்சீங்க. அந்த அலையன்ஸ் ஏன் பார்க்க போன. நீ ஏன் இன்னும் என்கூட இருக்க. உங்க வீட்ல இதெல்லாம் தெரியுமா. “

“ சொல்றேன் மீரா. “ ராஜி நடந்தவற்றை ஒவ்வொன்றாக சொல்ல மீரவிருக்கு இப்போது தான் புரிந்தது.

“ சரி மீரா என்ன இருந்தாலும் அவன் தான உனக்கு தாலி கட்டிருக்கான். அவன் கூடதான நீ இருக்கணும். அவன் நல்லவனா இருக்குறதுக்கு ஏன் உன்ன கஷ்டபடுத்தனும். என்ன ஜென்மமோ அவன் எல்லாம். சாடிஸ்ட். “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *