சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 4

“ சரி இப்போ என்ன பண்ணலாம். “

“ எனக்கு தெரியல. “

“ ஆனா எனக்கு தெரியும். “

“ என்ன தெரியும் சொல்லு, “

“ ம்ம்ம்ம்ம்ம்ம்ம். உன்ன இப்படி இழுத்து பிடிச்சி உன்னோட அழகான செர்ரி லிப்ஸ கிஸ் பண்ண தெரியும். “

சொல்லி விட்டு அவள் உதட்டை தன் உதடால் பின்னி கொண்டான்.

திருநெல்வேலி செல்லும் வரை ட்ரெயினில் இருவரும் பேசி கொள்ளவில்லை. ராஜியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வீட்டிற்கு சென்று எப்படியும் ஒரே ரூமில் தான் இருக்க வேண்டும். அப்போது பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டாள். விடிந்ததும் ஸ்டேஷன் வந்தடைய அவர்களை கூடி செல்ல பாலா வந்திருந்தான்.

சரியாக வீட்டிற்கு செல்ல அரை மணி நேரம் ஆகி இருந்தது. காரில் செல்லும் போது பாலா கேட்கும் கேள்விகளுக்கு இருவரும் சேர்ந்தே பதில் சொல்ல பாலாவுக்கு சந்தேகம் வராமல் பார்த்து கொண்டனர்.

ரூமில் மீரா போர்வைக்குள் நிர்வாணமாக இருக்க அரவிந்த் அவளுடைய டவலை கட்டி கொண்டு காபி கலந்து இரண்டு கப்பில் கொண்டு வந்தான். மீரா தூக்கம் களைந்து பார்க்க அரவிந்த் கோப்பையுடன் அவள் அருகில் சென்று
“ குட் மார்னிங் பொண்டாட்டி. ” என்றான்.

“ குட் மார்னிங் டா. “

காபியை வாங்கி இருவரும் குடிக்க அரவிந்த் மீராவிடம் கேட்டான்.

“ மீரா இப்படி உன்ன காலையிலையே பாக்கும் போது அப்படியே ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம். “

“ டேய் நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு. நேத்து அதையும் இதையும் ச்நேஜி என் மூடையே மாதி நீ நினைச்சத சாதிச்சிட்ட. போ கிளம்பு ஆபிஸ் போகணும்ல. கிளம்பு. “

“ ம்ஹூம். இன்னும் ஒரே டைம் டர்டியா இப்படியே. ஒரு ரொமான்ஸ். அப்புறம் சமத்தா நான் கிளம்பிடுவேன். “ சொல்லி கொண்டே அவள் அருகே வாயை கொண்டு வர மீரா கையில் இருந்த சூடான காபி கப்பை எடுத்து அவன் வாயில் வைத்தாள்.

“ ஆஆஆஅ. சுடுதுடி. ஆஆஆ. “

“ தெரியுதுல்ல. மூடிட்டு போடா. இத்கு மேல நீ இங்க இருந்த அடுத்து டவலை உருவி அந்த இடத்துல வச்சிடுவேன். “

“ ஏய் ச்சீ. ஆஆஆஆஅ. சுடுதுடி. “

“ சுடுதுன்னு இங்கயே இருந்தா அப்படி தான் இருக்கும். போ பிரஷ் பண்ணு சரி ஆகிடும். “
“ இப்போ ஒரு நல்ல பொண்டாட்டியா நீ என்ன பண்ணிருக்கணும். “

“ என்ன பண்ணிருக்கணும். “

“ நான் சுடுதுன்னு சொன்னதும் உடனே நீ என் உதட்டுல கிஸ் பண்ணி அதை சரி செஞ்சிருக்கணும். “

“ தம்பி அந்த மாதிரி ரொமான்ஸ் சீன்லா, கதாசிரியர் நமக்கு வைக்க மாட்டாங்க. அதெல்லாம் ஹீரோ ஹீரோயின்க்கு தான் வைப்பாங்க. நமக்கெல்லாம் இதுவே அதிகம். “

“ என்னடி சொல்ற ஒண்ணுமே புரியல. “

“ உனக்கு ஒன்னும் புரிய வேண்டாம். இதை படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா போதும். முதல்ல நீ கிளம்பு அரவிந்த். டைம் ஆகுது. “

“ என்னமோ சொல்ற சரி பொழைச்சு போ. “

இருவரும் குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பினர்.

கார்த்திக் வீட்டில் கார்த்திக் வேஷ்டி சட்டையி;ல் இருக்க ராஜி அழகாக பட்டு புடவையில் இருந்தாள். இருவரும் அருகருகே அமர சுமங்கலி பெண்கள் சூழ ராசிக்கு மஞ்சல் கயிற்றை பிரித்து கார்த்திக்கின் குடும்ப செயினில் தாலி கோர்த்து ராஜி கழுத்தில் அணிவித்தான் கார்த்திக்.

அங்கு இருந்த இரண்டு நாட்களும் ராஜி கார்த்திக்கை சீண்டும் போதெல்லாம் கார்த்திக் காந்தியின் வழியை பின் பற்ற ராஜிக்கு இது சற்று விநோதமாக இருந்தது.

ராஜி அவனிடம் சீண்டும் போதெல்லாம் கார்த்திக் அதற்கு ரியாக்ட் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. ஊடலில் காதல் தானே ரசிக்கும். ஆனால் அவன் அமைதியாக இருப்பது அவளுக்கு பயத்தை கொடுத்து. அவன் பெரிதாக ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கும் போது ராஜியால் மேற்கொண்டு எதையும் சொல்ல முடியவில்லை. அவனை வற்புறுத்துவதை போல அவளுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.

இதை கவனித்து கொண்டிருந்த கார்த்திக் ப்ளான் ஒர்கவுட் ஆகிறது. இப்படியே இவளை அட்டாக் பண்ணுடா கார்த்தி என நினைத்து கொள்வான். இது மீண்டும் சென்னை வரும் வரை தொடர் கதை ஆகி போனது.

சென்னை வந்து இறங்கிய அடுத்த நொடியே கார்த்திக் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் பேக்கை எடுத்துகொண்டு கிளம்பினான். ராஜிக்கு அந்த நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இது வழக்கமான கார்த்திக் இல்லை. இப்போது பழைய கார்த்திக் இல்லை. யோசித்து பார்த்தாள். ம்ஹூம் பதில் இல்லை. கவலையுடன் ரயில் நிலையத்தில் நடந்தாள்.

இதை மறைவாக நின்று பார்த்து கொண்டிருந்த கார்த்திக் தனக்கு தானே தமஸ் அப் செய்து கொண்டு கெத்தாக நடந்தான்.

எத்தனை முறை நீ என்னை வெறுப்பேத்துன. ஒன்னும் செய்ய முடியலன்னு கோபம் தான் வந்தது. கோபத்தில் எடுக்கும் முடிவு தப்பா தான் போச்சு. இப்போ அமைதியா இருக்கும் போது உன்னால என்ன செய்ய முடிஞ்சுது, இன்னும் உனக்கு இருக்குடி. நினைத்து கொண்டே பிளாட் நோக்கி விரைந்தான்.

ராஜி ரூமிற்கு வந்து குளித்து விட்டு ஆபிஸ் கிளம்பினாள். ஏனோ இன்று அவளுக்கு ஆபிஸ் செல்லும் மன நிலை இல்லை. வீட்டில் இருந்தால் தேவை இல்லாத சிந்தனைகள் வரக்கூடும் என்பதால் வேண்டா வெறுப்பாக ஆபிஸ் சென்றாள்.

தான் வருவதாக முன்னமே கூறி இருந்ததால் மீராவும் ராஜியின் வருகையை எதிர் பார்த்து காத்திருந்தாள். ராஜி தனது சீடிருக்கு வந்து கணினியை ஆன் செய்து உக்கார மீரா அவளை பார்த்து “ ஹே ராஜி. எப்போ வந்த. போன காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா. அப்பா என்ன சொன்னாங்க. “ என்றாள்.

2 Comments

  1. Super story 💐

  2. இப்போ தான் கதை நல்லா போது

Comments are closed.