“ மயிறு. “
“ என்ன. ஹலோ. “
“ உன்ன ஆபிஸ் விஷயமா கூப்பிட்டா ஐ லவ் யூ தானன்னு சொல்ற. “
‘ ஆபிஸ் விஷயம் பேச ஏன் இவ்ளோ தயங்குறீங்க சார். “
“ ஒன்னும் இல்ல நீ போ. நான் அரவிந்த் கிட்ட பேசிக்கிறேன். “
“ ஓகே சார். வரேன். “ சொல்லி விட்டு அவள் திரும்பி பார்க்காமல் செல்ல அவள் கதவு அருகே செல்லும் போது “ ஒரு நிமிஷம் “ என்றான்.
“ சொல்லுங்க சார்.”
“ ஈவினிங் வெளிய எங்கையாச்சும் போகலாமா.”
“ சார் ஆபிஸ்ல எல்லாரும் போறோமா. போகலாம் சார். எனக்கு ஓகே. மற்றதை அரவிந்த் கிட்ட சொல்லிடுங்க. “
பழிக்கு பழி வாங்குறாலே. முதல்லையே இவகிட்ட சொல்லிருக்கலாம். பரவா இல்ல. கெத்தை விட்டுடாத கார்த்தி.
“ நாம ரெண்டு பேரு மட்டும் போகலாம். வேற யாரும் வேண்டாம். “
“ மயிறு.” வாய்க்குள் முனகினாள்.
“ ஏய் என்னடி சொன்ன. இப்போ என்ன முனகின. சொல்லுடி “
“ இல்ல சார் நான் வரலை சார். சாரி “
( முதல்லையே சொல்லிருந்தா நான் வந்திருப்பேன். கெத்து காட்றியா. இப்போ கெஞ்சு. நல்லா கெஞ்சு. )
“ என்ன ஓவரா பண்ற. நீ வரலன்ன அம்மா கிட்ட சொல்லிடுவேன்.”
“ என்ன சார் ஸ்கூல் குழந்தைங்க மாதிரி அம்மாகிட்ட சொல்லிடுவேன். மிஸ் கிட்ட சொல்லிடுவேன்னு. நீங்க ஏன் என்ன கூப்டுரீங்க. சொல்லுங்க. “
கார்த்தி நல்லா கலாய்க்கிரா. நேரம்டா உனக்கு. வந்து தொலையேன்டி.
“ அது. எதுக்கோ கூப்பிடுறேன். வரியா இல்லையா. “
“ நான் யாரு சார் ஏன் என்ன கூபிடுறீங்க. நான் உங்களுக்கு கீழ வேலை பார்க்குறேன். அதுக்காக நீங்க எங்க கூப்ட்டாலும் நான் வரணுமா. “
“ ஏய் நீ என் பொ…………….” நிறுத்தினான்.
( அதை சொல்லுடா அழகா.இதை தான் உன் வாயால கேட்கனும்னு நான் ஆசை பட்டேன். சொல்லு. சொல்லு கார்த்திக் சொல்லு ப்ளீஸ் ப்ளீஸ். வந்துடுச்சு. சொல்லு. )
“ என்ன என்ன சொன்னீங்க. பொ….. “
“ இல்ல நீ ஒரு பொண்ணு. எங்க அம்மா உனக்கு அத்தை அந்த முறைல சொன்னேன். ப்ச். அதை விடு. நீ வருவியா மாட்டியா. “
“ ம்ம்ம்ம்ம்ம்ம். “ தலையை ஆடிக்கொண்டே அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
கார்த்திக் அவள் அப்படி பார்ப்பது ஒரு மாதிரியாக தோன்றியது.
(சைட் அடிக்கிறாலோ. ம்ம்ம்ம் வச்ச கண் வாங்காம பார்க்குறா. இவளுக்கு மட்டும் எங்க இருந்து லவ் பீலிங் ஊற்றேடுக்குனு தெரியல. பதில சொல்றாளா. பாரு. அய்யோ யோசிக்கிறாலே அடுத்து ப்ளான் பண்றாளோ. கார்த்திக் சீக்கிரம் அனுப்பி விடு. அனுப்புடா பதிலை கேட்டு அனுப்பு )
“ சொல்லு என்ன சொல்ற. “
“ யோசிக்கிறேன். நீங்க நெக்ஸ்ட் டைம் கூப்டுங்க நான் வரேன். “
“ ஏன் இப்போ என்ன. “
“ இந்த டைம் நீங்க கூப்பிட்ட தோரணை எனக்கு பிடிக்கல சார் “
“ இங்க பாரு 5 மணிக்கு கால் பண்ணுவேன். நீ கண்டிப்பா வர. நான் வெயிட் பண்ணுவேன். இப்போ நீ போகலாம். “
“ 5 மணிக்கு நீங்க என்ன எப்படி கூப்பிடுரீங்கலோ அதை பொறுத்து தான் நான் முடிவு பண்ணுவேன் மாமா. வரேன் மாமா. “ அவள் சென்று விட கார்த்திக் பெரு மூச்சு விட்டான்.
கார்த்திக்கிற்கு அவள் சொன்னதில் இருந்து வேலையே ஓடவில்லை. வருவாளா மாட்டாளா என்று அடிக்கடி ராஜியின் டேபிளை பார்த்து கொண்டிருந்தான்.
ராஜிக்கும் இது பிடித்திருந்தது. கார்த்திக்கை ஏங்க வைப்பது. அவளை பொறுத்த வரை இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவனை ஏங்க வைக்க வேண்டும். அது அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஊடல் மோதல் அன்பு சண்டை இவை அனைத்துமே காதலில் இருந்தால் தானே ரசிக்கும்.
ஈவினிங் அனைவரும் கிளம்ப ராஜியும் கிளம்பினாள். கார்த்திக்கிற்கு திக்கென்றானது.அய்யோ சொன்ன மாதிரியே போறாளே. நல்லா பழிவாங்குறா. அம்மா போன் பன்னி நான் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன். பதட்டத்தில் போனை எடுத்து ராஜிக்கு கால் செய்தான்.
போனை எடுத்த ராஜி “ ஹலோ சொல்லுங்க. “
“ ஹேய் என்ன கிளம்பிட்ட. இன்னைக்கு வெளிய போகலாம்னு சொன்னேன்ல. “
“ நான் தான் சொன்னேன்ல நீங்க கூப்பிட்ட தோரணை எனக்கு பிடிக்கலன்னு. கூப்டுங்க. “
“ ரொம்ப ஓவரா பண்ற. உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ப்ளீஸ் வா. “
“ பார்ரா. ம்ம்ம்ம். ப்லீஸ்லா சொல்றீங்க. ரொம்ப கெஞ்சுறீங்களா. “
“ கெஞ்சலா செய்யல. சீக்கிரம் வா. “
“ இல்லையா. அப்போ நான் வரல. “
“ ஹேய் ஆமா ஆமா. கெஞ்சுறேன். வா. “
“ இல்ல வந்துடுவேன். ஆனா மீரா இருக்காளே. அவ கிட்ட என்ன சொல்றது. “
“ அவகிட்ட எதாவது பொய் சொல்லிட்டு கழட்டி விட்டுட்டு வா. “
“ துருவி துருவி கேட்பாளே. என்ன சொல்ல அவகிட்ட. “
“ அதுக்காக நானா அவகிட்ட பேச முடியும். நீதான் எதாச்சும் சொல்லணும் . “
“ இது நல்லா இருக்கே. நீங்களே எதாச்சும் சொல்லி அவகிட்ட பேசிடுங்களேன். “
