சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 2 Like

“ ஆமா கரெக்டு தான. அவுங்க பிரெண்ட்ஸ்க்குள்ள ஆயிரம் இருக்கும். நீ ஏன் அதுக்குள்ள குறுக்க வர. “ ( மீரா பிரெண்ட் ராஜியாக இருந்திருந்தாள் இந்நேரம் மீராவிற்கு ஆதரவாக பேசி இருப்பாள். இப்போது மிசஸ் கார்த்திக் ஆயிற்றே.)

“ நீயும் என்ன ராஜி இப்படி பேசுற. நானே எங்க வீட்ல என்ன சொல்லுவங்கலோன்னு பயந்துட்டு இருக்கேன். அவன் இப்படி சொன்னா. கூட கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்காதா. “

“ சரி விடு மீரா இதை பத்தி பேச வேணாம். பேசினா தேவை இல்லாத மனகஷ்டம் வரும். எதை பத்தியும் யோசிக்காம தூங்கு. நானும் தூங்குறேன். பை குட் நைட். “

மீராவிற்கு ராஜியின் இந்த பேச்சு சற்று ஏமாற்றமாக இருந்தது, ராஜி ஊருக்கு சென்று வந்ததில் இருந்து அவளுடைய நடவடிக்கைகளில் சற்று மாற்றம் இருப்பதை அவளும் கவனிக்காமல் இல்லை. ஆனால் இப்போது அரவிந்த் உடன் போட்ட சண்டையில் அதை கவனிக்க தவறினாள்.

அன்று இரவு கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டிருக்க “ டேய் என்னடா இப்படி பண்ணிட்ட. வேணாம்டா. ஏமாந்து போயடுவடா. கடைசில என் நிலைமை உனக்கு வேண்டாம்டா. பொண்ணுங்கள நம்பாத. “ அசிரீரியை போல ஒலித்தது.

“ அண்ணன் இல்லன்ன. நான் நம்பள. நான் நம்பவும் மாட்டேன். நீ சொன்னது தான் கரெக்ட்டுன்ன. வேண்டாம். வேண்டாம். வேண்டாம். திரும்ப திரும்ப தூக்கத்தில் உளறினான். பதறி அடித்து எழுந்தான் கார்த்திக். முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுத்து இருக்க தண்ணீர் எடுத்து குடித்தான்.

பெட்டை விட்டு எழுந்து போட்டோ செல்பில் இருந்த ஒரு போட்டோவை எடுத்து பார்த்தான். அண்ணே. சொல்லிக்கொண்டே போட்டோ எடுத்து நெஞ்சோடு அனைத்து கொண்டான்.

அன்று ராஜி கணினியில் தனது வேலையை பார்த்து கொண்டிருக்க கார்த்திக் அழைப்பதாக அரவிந்த் சொல்லி விட்டு சென்றான். ராஜி சென்னை வந்து இத்தனை நாட்களில் கார்த்திக் அவளை அழைப்பது இதுவே முதல் முறை. சந்தோசமாக டேபிளை விட்டு எழுந்துகார்த்திக் கேபிணிற்கு சென்றாள்.

இவை அனைத்தையும் பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்தாள் மீரா. அரவிந்துடன் ஏற்பட்ட சண்டையில் அவள் ராஜியிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை. ராஜியும் அவளிடம் அதை பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

“ மே ஐ கம் இன் சார். “ சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

“ எஸ். உக்காரு. “

“ சொல்லுங்க சார். ”
“ கொஞ்சம் தனியா பேசணும். கீழ போய் ஒரு காபி குடிச்சிட்டே பேசலாமா. “

எப்போதும் எரிஞ்சி விழும் கார்த்திக்,அதிகாரமாக பேசும் கார்த்திக் இன்று அவளிடமே கேட்கிறான். ராஜி மாறிட்டனா. சாக்லேட் வச்சது வேலை செய்யுது. இப்போவாச்சும் புரிஞ்சிகிட்டானே . கேள்வி கேட்காத. மனசு மாறுரதுக்குள்ள்ள சரின்னு சொல்லு.

“ ம்ம்ம் வரேங்க. நீங்க சொல்லி நான் வராம இருப்பேனா.”

“ சரி நீ முதல்ல முன்னாடி போ. நான் பின்னாடி வரேன். “

காபி ஷாப்பில் எதிர் எதிர் இருக்கையில் இருவரும் அமர்ந்திருக்க ராஜி நடப்பது எல்லாம் கனவா இல்லை நனவா என்பது போல கையை பிசிந்து கொண்டு கார்த்திக் என்ன சொல்லுவான் என எதிர்பார்த்திருந்தாள்.கார்த்திக்கே பேச்சை ஆரம்பித்தான்.

“ நீ கொடுத்த சாக்லேட்க்கு ரொம்ப தேங்க்ஸ். “

“ நீங்க சாப்பிட்டீங்களா. உங்களுக்கு பிடிச்சிருந்ததா. ”

“ இதே மாதிரி தினமும் கொடுக்குறியா. “

“ நீங்களா இதை சொல்றது. கார்த்திக் நீங்க சொல்றதை சத்தியமா என்னால நம்ப முடியல. இது நிஜம் தானா. “

“ நிஜம் தான் ராஜி. நம்ப முடியளல்ல. ஆனா நம்பித்தான் ஆகணும். “

“ ரொம்ப சந்தோசமாக இருக்கு கார்த்திக். இவ்ளோ சீக்கிரம் நீங்க மாறிடுவீங்கன்னு. உங்களுக்காக நான் தினமும் கொடுப்பேன். நீங்க என்ன கேட்டாலும் கொடுப்பேன். இப்போவே உங்கள கட்டி பிடிச்சி லவ் யூ சொல்லணும் போல இருக்கு. “

“ ஹே இரு இரு முழுசா கேட்டுட்டு அப்றமா சொல்லு. “

“ சீக்கிரம் சொல்லுங்க அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்குறீங்க. “

“ இதை விட பெரிய அதிர்ச்சி ஒன்னு உனக்கு காத்துட்டு இருக்கு. “

“ என்ன சொல்லுங்க. எனக்கு தாங்க முடியல. “

“ நீ முதல் நாள் கொடுத்த சாக்லேட்ட சாப்பிட்டது நான் இல்ல. உங்க H.R. சந்துரு சார் தான். அப்றம் இன்னைக்கு வரைக்கும் நீ கொடுத்த சாக்லேட் எல்லாம் என்னோட டஸ்ட் பின்ல தான் வச்சிருந்தேன். இப்போதான் அவன்கிட்ட கொடுத்தேன்.”

ராஜிக்கு உச்சந்தலையில் எதையோ கொண்டு அடித்தது போல இருந்தது. நா வறண்டு தளுதளுத்தது. திக்கி திணறி கேட்டாள் “ நீ நீங் நீங்க பொய் சொல்றீங்க. என்ன காயபடுத்தனும்னு தான சொல்றீங்க. ப்ளீஸ் கார்த்திக் அப்படி சொல்லாதீங்க. என்னால தாங்க முடியல. “

“ நீ நம்பலைன்ன கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு. நீ கொடுத்த அதே சாக்லேட் அதே ரிப்பன் கட்டி அச்சு பிசகாம வேற ஒருத்தி கிட்ட கொடுத்துட்டு பல்ல இழிச்சி கடலை போட்டுட்டு இருக்கான் பாரு. “

ராஜி திரும்பி பார்க்க அங்கு சந்துரு ராஜி கொடுத்த சாக்லேட்டை வேறு ஒருவரிடம் கொடுத்து காதல் வசனம் பேசி கொண்டிருந்தான்.

“ ராஜிக்கு இப்போது கோபம் வந்தது. தான் ஆசை ஆசையாக கொடுத்த சாக்லேட் ஏதோ ஒரு பரதேசிக்கு கொடுத்தது இல்லாமல் தன்னிடமே அதை கூறி கஸ்ட்டபடுத்துகிறான். ராஜி கோவப்படாத. வேணும்னு தான் செய்யுறான், கண்ட்ரோல். கண்ட்ரோல். “

“ சரி பரவா இல்ல. நீங்க பேசணும்னு சொன்ன விஷயத்தை சொல்லுங்க. “

“ இது உனக்கு கஷ்டமா இருக்குமே. இல்லையா. “

“ நான் ஏன் சார் கோவப்படனும். நான் உங்களுக்கு கொடுத்தேன் நீங்க அதை வேற ஒருத்தருக்கு கொடுத்தீங்க. இதுக்கு ஏன் நான் கஷ்டபடனும். நீங்க கோவப்படாம என்கிட்டே தேங்க்ஸ் சொன்னதுக்கு நான் சந்தோசம் தான் படனும்.”

“ ஓஹோ அப்போ என்மேல உனக்கு கோவம் இல்ல. வருத்தம் இல்ல. “

“ கண்டிப்பா இல்லங்க. கொஞ்சம் பக்கத்துல வாங்களேன் ”.

“ எதுவா இருந்தாலும் அங்கயே இருந்து சொல்லு. “

“ சொல்லிடுவேன். ஆனா நீங்க கோவப்பட கூடாது. “

“ சொல்லு சொல்லு “

“ உங்க மேல கோபமே வராது மை டியர் புருஷா. “ மெதுவாக சொன்னாள்.

“ ஏய் உன்ன ககூப்பிட்டு வச்சி நான் கஷ்டபடுத்துறேன். நீ என்னடான்னு கொஞ்சிட்டு இருக்க. “ கார்த்திக் அவளை முறைத்து கொண்டே கேட்டான்.

“ மாமா கோவப்படாதீங்க மாமா. இப்போ என்ன உங்களுக்கு டெய்லி நான் சாக்லேட் தரனும். அவ்ளோதானே. டெய்லி கொடுக்குறேன் உங்களுக்கு. நான் கிளம்புறேன் மாமா. அப்றம் லவ் யூ மாமா. “ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ராஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *