சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 2

“ அப்றம் என்ன ஆக எல்லாம் சுபம்ங்கற மாதிரி அரவிந்த் வீட்ல எல்லாருக்கும் அவளை பிடிச்சி போச்சு. அந்த பொண்ணு வீட்ல பேசணும்னு சொல்லிடு இருந்தான். “

“ சீக்கிரமே புதைகுழில விழபோறான்னு சொல்லு.”

“ ஆமா மச்சான். நம்ம பிரெண்ட் சர்கிள் வர வர குறைஞ்சிட்டே போகுது மச்சான். இப்போதைக்கு நீயும் நானும் மட்டும் தான் முரட்டு சிங்கிள். “

“ ஆமா. ஆமா மச்சான்.” ( டேய் எனக்கும் கல்யாணம் பன்னி வச்சிட்டாங்கடா. நீ மட்டும் தாண்டா சிங்கிள். )

“ மச்சான் என்னடா புதுசா கழுத்துல செயின்லா போட்டுருக்க. “

அப்போது தான் கார்த்திக் தான் கழுத்தில் இருந்த செயினை கவனித்தான். கல்யாணத்து அன்று தனது மாமனார் அவனுக்கு அணிவித்தது அது. ( அய்யோ இந்த நாய் இதை எப்படியோ மோப்பம் பிடிச்சிடுச்சே. கார்த்தி சமாளிடா. இவனுக்கு தெரிஞ்சா இந்த உலகத்துக்கே தெரிஞ்ச மாதிரி. கைல இருக்க மோதிரத்தையும் பார்த்திருப்பானோ. ) தனது கையை டேபிளுக்கு கீழ் மறைத்து கொண்டான்.

“ இதுவா அம்மா எடுத்துருந்தாங்க. வெறும் கழுத்தா இருக்குன்னு போட சொன்னாங்க. “

“ வேற ஒன்னும் இல்லையே. “

“ செயின் போடுறதுல என்னடா சீக்ரெட் இருக்க போகுது. “

“ இல்லடா. சாக்லேட்லா வச்சிருக்க. ஒரு நாளும் சாக்லேட் சாப்ட மாட்ட. இன்னைக்கு ஆபீஸ்க்கே கொண்டு வந்துருக்க. அதான் லவ்வு கிவ்வு எதாச்சும். “

“ ஏண்டா சாக்லேட் என்ன லவ்வர்ச்க்கு மட்டும் தான்னு எங்கையாச்சும் எழுதி வச்சிருக்காங்களா. ஏண்டா இப்படி படுத்துறீங்க. “

“ சரி மச்சான் நீ வேலைய பாரு. ஆங் அப்றம் உன்ன கிருஷ் வந்தா பார்க்க சொன்னாரு. போய் அவருகிட்ட ஒரு அட்டெண்டன்ச போட்டுடு. “

“ சரி மச்சான். தின்னுட்டல்ல கிளம்பு. “

சந்துரு சென்று விட கார்த்திக் கிருஷ் இடம் சென்று ஆபிஸ் விஷயமாக பேசிவிட்டு வந்தான்.

மறுநாளும் கார்த்திக் தனது கேபிணிற்கு சென்று பேக்கை வைத்து விட்டு சீட்டில் அமர அவன் முன் அதே போன்று டைரி மில்க் சாக்லேட் ஒன்று ரிப்பன் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அவனுக்கு அது சற்று எரிச்சலையும் தந்தது.

இந்த முறை அதை எடுத்து தனது காலுக்கு கீழ் இருக்கும் குப்பை தொட்டியில் அதை எடுத்து போட்டு விட்டு ராஜியை திரும்பி பார்த்தான். அவள் வழக்கம் போல தனது கணினி திரையை பார்த்து கொண்டு வேளைகளில் மும்மரமாக இருந்தாள்.

“ கண்டிப்பா இவளோட வேலை தான். என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாலே. அவகிட்ட நாம அமைதியாய் போறதுனால தான் ரொம்ப இம்சை பண்றா. பதிலுக்கு அவளை நாம எதாச்சும் செய்யணும். அவளாவே நம்மள வெறுத்து ஒதுங்கி போகணும். இல்லனா இது தொடர்ந்து கிட்டு தான் இருக்கும். “ யோசித்து கொண்டே சீட்டின் பின்னால் சாய்ந்தான்.

அந்நேரம் அரவிந்த் அவன் ரூமிற்கு வந்தான். “ என்ன மச்சான் ஏதோ பலத்த சிந்தனைல இருக்க. ஊருல எதாச்சும் பிரச்சனையா. :

“ அப்படிலா ஒன்னும் இல்லடா.”

“ அப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க.”

“ ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல. அதை விடு. ஆமா உன் வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போய் சம்மதம் எல்லாம் வாங்கிட்ட போல இருக்கு. “

“ ஆமாடா எல்லாருக்கும் அவளை பிடிச்சிருக்கு. அவுங்க வீட்ல தான் என்ன சொல்லுவாங்களோன்னு பயப்படுறா. “

“ கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க மச்சான். அதனால நீ என்ன பண்ற தெரியுமா. பேசாம அவளை இப்போவே கலட்டி விட்டுட்டு வேலையை பார்க்குற வழியை பாரு. “

“ டேய். ஆரம்பமே அபசகுனமா பேசாதடா. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. என் புத்தியை சொல்லணும். ஆனா ஒன்னுடா சத்தியமா சொல்றேன். உனக்கும் இதே மாதிரி லவ்வுல பிரச்சனை வரும். அப்போ தெரியும் என்னோட வலி. “

“ என்ன சாபம் விடுறியா. சரிங்கப்பா. உங்க சாபம் எல்லாம் எங்க பலிக்கபோகுது. நானாச்சும் லவ் பண்றதாச்சும். உன் லவ் சீக்கிரமே ஊத்திகிட்டு கூடிய சீக்கிரம் நீ முரட்டு சிங்கிள் ஆக என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் மச்சான். கை கொடு. “

“ போடா. உங்கிட்ட போய் பேச வந்தேன் பாரு. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. “ அவன் கையை தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“ ஆமா ஆமா அப்படியே நாங்க திருந்திட்டளும். எங்க போனாலும் இங்க தான வரணும். போடா போ. ”

அரவிந்த் சென்றவுடன் க்ரிஷிடம் சென்று அடுத்த ப்ரஜெக்டுக்கான விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதை மீட்டிங் வைத்து அனைவரிடமும் தெரிய படுத்தினான். மீட்டிங்கில் அரவிந்த் கார்த்திக்கை கண்டு கொள்ளாமல் இருக்க ராஜி வைத்த கண் வாங்காமல் கார்த்திக்கை ரசித்து கொண்டிருந்தாள்.

ஆனால் கார்த்திக் யாரையும் சட்டை செய்யாமல் அவன் வேலையே கண்ணாக அனைத்தையும் தெளிவாக கூறி முடித்தான்.

மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பி விட எப்போதும் கார்த்திக்குடன் வரும் அரவிந்த் அன்று அவனுடன் வராமல் கேப் பிடித்து சென்று விட்டான். கார்த்திக் அதை பெரியதாக அலட்டி கொள்ளாமல் பிளாட் நோக்கி சென்றான்.

அன்று இரவு மீரா அரவிந்துடன் போனில் பேசி கொண்டிருக்க ராஜி அந்த சமயம் தனது பேக்கில் இருந்து டைரி மில்க் சாக்லேட் ஒன்றை அழகாக பேக் செய்து சிவப்பு ரிப்பன் கட்டி கொண்டிருந்தாள். அந்நேரம் மீரா உள்ளே வர ராஜி அவசரம் அவசரமாக அதான் மேல் பெட்சீட் போர்த்தி விட்டு அதை மறைத்தாள்.

“ என்னடி. திடீர்னு வந்துட்ட. உன் ஆளுகிட்ட பேசலையா “

“ அவன்கூட சண்டை ராஜி. ஆமா ராஜி நீ ஏன் திடீர்னு என்ன பார்த்ததும் போர்வை எடுத்து மறைச்ச. “

அய்யயோ பார்த்துட்டாலே. மாட்டிகிட்டேனே. என்ன சொல்ல. எதாச்சும் சொல்லு ராஜி.

“ ஹே. நான் என்ன மறைச்சேன். ஒன்னும் இல்லையே. ரொம்ப குளிரா இருந்துச்சு. பெட்ஷீட் எடுத்து மூடிகிட்டேன். உனக்கு தெரியாம நான் என்ன பண்ண போறேன் சொல்லு. சரி ஏன் அரவிந்த் அண்ணா கூட சண்டை. “

“ எல்லாம் உன் ஆலால தான். “

“ என் ஆளா. யாரு கார்த்திக்கா. “

“ ஆமா அந்த சனியன்னால தான் “

“ ஒய் என்ன சனியன் கினியன்னுட்டு. மரியாதையா பேசு மீரா. “

“ பின்ன வேற எப்படி சொல்லுவாங்கலாம். என்ன ஜென்மம்டி அது. “

“ மீரா நீ ரொம்ப ஓவரா பேசுற. ஒழுங்கா என்ன நடந்துசுன்னு சொல்லு.”

“ இன்னைக்கு அரவிந்த் கிட்ட உன் லவ் புட்டுகிடும். பேசாம அவளை கலட்டி விடுன்னு சொல்லிருக்கான். அவன் சொல்லுறதை கேட்டுட்டு இவன் என்கிட்டையே வந்து சொல்றான். அவனை எதாச்சும் சொல்லிடு வர வேண்டியது தானன்னு சொன்னதுக்கு நே ஒன்னும் அவனை பத்தி பேசாதன்னு என்கிட்டே சண்டை போடுறான். “