சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 2 Like

“ என்னது என் முகத்துலையா. இல்லையே. அப்படிலாம் ஒன்னும் இல்லையே.” ( ஒரு வேலை இவளுக்கு எதுவும் தெரிஞ்சிருக்குமோ )
“ இல்லடி. ஏதோ உன்கிட்ட புதுசா இருக்குதே. உன் முகம் இந்த அளவுக்கு பிரைட்டா நான் பார்த்ததே இல்ல அதான் கேக்குறேன். “

“ லூசு அப்படிலா ஒன்னும் இல்ல. ட்ராவல் இருந்துச்சுல்ல அதான் கொஞ்சம் அசதியா இருந்துச்சு. நல்லா தூங்கிட்டு இப்போ தான் குளிச்சேன். அதனால உனக்கு அப்படி தெரியலாம். (ஒரு வழியாக சமாளித்தாள் )

“ ஹே அப்பறம் இன்னொரு விஷயம். நீ ஊருக்கு போன அதே நாள் exsacta அதே மாதிரி உன் ஆளும் ஊருக்கு போயிருக்கான். அதே மாதிரி நீ இன்னைக்கு வந்துருக்க. அவனும் இன்னைக்கு வந்துருக்கான். இதெல்லாம் வச்சி பார்க்கும் போது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ ஒன்னு ஓடிட்டு இருக்குனு நான் நினைக்கிறேன். உண்மைய சொல்லு. “

“ ஹே என்ன சொல்ற. அவனும் ஆபிஸ் வரலையே. நீ சொல்லி தான் இப்போ எனக்கு தெரியும். ( தெரியாத மாதிரி முகத்தை காட்டி கொண்டு நடித்தாள்)

“ ஏய் நடிக்காத. நிஜமாவே உனக்கு தெரியாது. “

“ சத்தியமா எனக்கு தெரியாது மீரா. நீ என்ன சொல்ற. ஆமா அவன் வரலன்னு ஆபிஸ்ல இருந்து நீ பார்த்திருப்ப. ஊருக்கு போயிருக்கான்னு நீ எப்படி சொல்ற. ஒரு வேலை அவன் வேற எங்கியாச்சும் போயிருக்கலாம்ல. “

“ வேற எங்கையும் போகல. ஊருக்கு தான் போயிருக்கான். அரவிந்த் தான் என்கிட்டே சொன்னான். அதான் உனக்கு எதாச்சும் தெரியுமான்னு கேட்டேன். “

“ எனக்கு இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் ஏன் உன்கிட்ட கேக்குறேன். சரி அதை விடு அரவிந்த் எப்படி இருக்காறு. நான் இல்லாம நல்ல ஊர் சுத்தி இருப்பீங்களே. (பேச்சை மாற்றினாள் ராகி “

“ ம்ம்ம்ம். நல்ல சுத்தினோம். நீ இல்லாத குறையை அவன் தான் தீர்த்து வச்சான். அவன் என்னை ரொம்ப லவ் பண்றான் ராஜி. அவன் வீட்ல எந்த பிரச்னையும் இல்லை. அவுங்க வீட்டுக்கு கூட போயிட்டு வந்தேன். “

“ ஹே என்ன சொல்ற மீரா. அந்த அளவுக்கு போயிடுச்சா. ரொம்ப ஸ்பீடா தான் போறீஙக ரெண்டு பேரும். என்ன சொல்றாங்க அவுங்க வீட்ல. “

“ அவுங்க வீட்ல எல்லாருக்கும் ஓகே தான். அவுங்க அம்மாக்கும் என்ன ரொம்ப பிடிச்சி போச்சு. அவன் தம்பி என்கிட்டே அண்ணி அண்ணி னு நல்லா பேசுறான். எனக்கும் அவன் குடும்பத்தை ரொம்ப பிடிச்சிருக்கு. “

“ ஒரு வழியா க்ரீன் சிக்னல் கிடைச்சிடுச்சுன்னு சொல்லு. “

“ இல்ல ராஜி ஒரு சைடு தான் கிடைச்சிருக்கு. எங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு நினைச்சா தான் பயமா இருக்கு. “

“ ஏன் உங்க வீட்ல நீ ஒரே பொண்ணுதான. உங்க அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. “
“ இல்ல ராஜி. அங்க தான் பிரச்சனையே. எங்க வீட்ல ஜாதி பார்ப்பாங்க. எங்க வீட்ல எல்லாருமே கொஞ்சம் பழைய காலத்து ஆள்கள். அதை நினைச்சாலே பயமா இருக்கு. “

“ மீரா. அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ தேவை இல்லாம பயப்படாத. உங்க வீட்ல பேசி புரிய வச்சிடலாம். “

“ நானும் அந்த தைரியத்துல தான் இருக்கேன். சரி வா எதாச்சும் சாப்பிடலாம். “

“ இன்னைக்கு எங்கையாச்சும் சாப்பிட வெளிய போகலாமா. “

“ ம்ம்ம் போலாம் ராஜி.”

சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள். வீட்டிற்கு தேவையான பொருள்கள் மற்றும் சிலவற்றை வாங்கி கொண்டு சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் கார்த்திக் தனது கேபிணிற்கு சென்று பேக்கை வைத்து விட்டு சீட்டில் அமர அவன் முன் டைரி மில்க் சாக்லேட் ஒன்று ரிப்பன் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.அதை எடுத்த கார்த்திக் இது ராஜியின் வேலையாக தான் இருக்கும். கண்ணாடி வழியாக ராஜியை தேட அவள் கணினியை பார்த்து கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தாள்.
இந்த சாக்லேட் கொடுத்தா லவ் வந்துடும்னு எவன் கண்டுபிடிச்சானோ. கூடவே ஒன்னு சுத்துதே அது தான் சொல்லி கொடுத்துருக்கணும். அந்நேரம் சந்துரு கேபின் கதவை திறக்க சாக்லேட்டில் இருந்த ரிப்பனை உருவி தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்தான்.

“ என்ன மச்சான் ஊருக்கெல்லாம் போயிட்டு வந்துட்டியா “

“ ம்ம்ம்ம். நீ நல்லா ஊரு மேஞ்சியா.”
“ என்ன நண்பா இப்படி கேட்டுட்ட. நண்பன் ஊருக்கு போயிட்டு வந்துருக்கியே. பார்த்துட்டு நலம் விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தா இப்படி அசிங்கபடுத்துற. “

“ டேய் டேய் நீயெல்லாம் பீல் பண்றவனா. நடிக்காதடா. “

“ என்ன மச்சான் கைல சாக்லேட். அதை கொண்டா “ கார்த்திக்கிடம் கேக்காமல் அதை பிடுங்கி கொண்டான்.

“ டேய் கேட்டா கொடுக்க போறேன். அதுக்கு ஏன் பிடுங்குற. “

சாக்லேட்டை பிரித்து சாப்பிட்டு கொண்டே கார்த்திக்கிடம் கேட்டான்.

“ சரி மச்சான் வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா. அப்பா அம்மா எப்படி இருக்காங்க. “

“ ம்ம்ம்ம் நல்லா இருக்காங்க. ஆபிஸ் எப்படிடா போச்சு. நான் இல்லாத இந்த நாட்கள்ல எதாச்சும் நடந்துச்சா. “

“ ஒன்னும் நடக்கல. நம்ம அரவிந்த்க்கு தான் யோகம் அடிச்சிருக்கு, “

“ என்னடா சொல்ற. என்னாச்சு.”

“ அது ஒன்னும் இல்லடா. அந்த மீரா பொண்ணு இருக்குள்ள. அதை அவன் வீட்டுக்கு கூட்டி போய் அவுங்க வீட்ல எல்லாத்தையும் சொல்லிட்டான்.”

“ அப்படியா. ம்ம்ம் அப்றம் என்னாச்சு. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *