திருட்டு பயலே 414

லதாவின் கணவன்: சாரி தம்பி இப்போதான் நியாபகம் வந்தது.

நான்: இங்க என்ன பண்றிங்க

லதாவின் கணவன்: என் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

நான்: வாழ்த்துக்கள் சார்.

லதாவின் கணவன்: நன்றி தம்பி, குழந்தையை பாக்குறிங்களா

நான்: (நான் அங்கு சென்று லதாவை பார்த்தால் என் மனநிலை மாற கூடும் என்பதால் வேண்டாம் என்றேன்).

லதாவின் கணவன்: பரவாயில்லை வாங்க தம்பி.( என்று என் கையை பிடித்து அழைத்து சென்றார்).

நானும் வேறு வழி இல்லாமல் பின் சென்றேன்.

அங்கு சென்று ஒரு ரூமில் பார்க்கும்போது லதா பெட்டில் படுத்திருக்க பக்கத்தில் அழகான குழந்தை இருந்தது.

லதாவின் கணவன்: தம்பி இங்கயே இருங்க, நான் சென்று சுடுதண்ணீர் எடுத்து வர்ரேன்.

அவர் அங்கிருந்து கிளம்ப, நான் லதாவின் குழந்தையை பார்த்து கொண்டு இருக்க, திடீரென லதா கண் விழித்தாள்.

லதா என்னை பார்த்ததும் அவள் கண்களில் நீர் வழிந்தது.

நான் அவளை பார்த்து அழ, அவளும் அழுதாள். பின் என்னால் அங்கிருக்க முடியாமல் என் அம்மாவை பார்க்க சென்றேன்.

நான் என் அம்மாவிடம் செல்ல, அவள் அங்கு இரண்டு மூன்று பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

நான்: அம்மா இங்க கொஞ்சம் வா
அம்மா: என்னடா
அம்மா என்னிடம் வர, என் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து விட்டு பதறினாள்.

அம்மா: என்னடா ஆச்சு, எதுக்கு உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.

நான்: அம்மா லதாவை இங்கு பாத்தேன்

அம்மா: எங்கடா

நான்: அவளுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அந்த ரூமில் இருக்கிறாள்.

அம்மா சற்று நேரம் யோசித்துவிட்டு சரி வா நம்ம வீட்டுக்கு போகலாம். இனிமேல் இங்க இருந்தால் உனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும். உடனே போகலாம் வா

நானும் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றோம்..

வீட்டிற்கு சென்றாலும் என் மனம் லதாவின் நினைப்பாகவே இருந்தது. நான் சரியாக சாப்பிடாமல் இருப்பதும், எப்போதும் தனிமையில் இருப்பதும், முன்பு போல் அம்மாவிடம் இருந்த நெருக்கம் குறைந்தது. அம்மாவும் இதை கவனிக்க தவறவில்லை.

சில நேரங்களில் கோபம் உச்சமடையும், கையில் கிடைத்த பொருட்களை உடைக்க ஆரம்பித்தேன்.

இப்படி லதாவின் நினைப்பு என்னை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்தது.

ஒருநாள் அப்பா வீட்டிற்கு வந்திருந்தார். நான் அவரை முகம் கொடுத்து கூட பார்க்கவில்லை.

அப்பா என்னை பார்க்க என் அறைக்கு வந்தார்.
அப்போது அவர் என்னிடம்

அப்பா: டேய் ராஜா, கல்லூரி முடிச்சிட்டு வீட்டில வெட்டியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா டா

நான் அவரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

அப்பா: டேய் உன்னைத்தான் கேக்குறேன் பதில் சொல்லு

நான் அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் இருக்க.

அவர் என்னிடம், உனக்கு இரண்டு வாய்ப்புகள் தரேன். ஒன்று நீ உன் மேல் படிப்பை தொடரு இல்லை என்றால் நான் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று சொல்லி விட்டு சென்றார்.

1 Comment

  1. Story is good upload the next

Comments are closed.