திருட்டு பயலே 414

ராஜாவின் நண்பன் புரோக்கருக்கு கால் செய்து ராஜாவின் நம்பர் கொடுக்க, அந்த புரோக்கர் ராஜாவின் வாட்ஸ்அப் கு நிறைய பெண்களின் ஃபோட்டோ மற்றும் அவர்களுக்கான தொகையையும் அனுப்பி இருந்தார். அன்று ராஜா போதையில் தூங்கி கொண்டு இருந்ததால் ராஜாவின் போனை அம்மா எடுத்து அந்த போட்டோக்களை தன் போனுக்கு அனுப்பி விட்டு அவனுடைய போனில் உள்ள போட்டோக்களை டிலீட் செய்து விட்டாள்.
தன் மகன் வாழ்க்கை இப்படி சீர்குலைந்து போய் விட்டது என்று நினைத்து அவள் தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறாள்.
இதையைல்லாம் கேட்ட ராஜா அதிர்ச்சி ஆகி நின்றான்.

ராஜா: அம்மா என்னை மன்னிச்சுடு மா. எனக்காக நீ எதுக்கு கஷ்டபடனும். என் லதா இல்லாத வாழ்க்கையை என்னால் நெனச்சு கூட பார்க்க முடியலை. நான் செத்து போறேன்.
உடனே அம்மா, ராஜாவின் கையை பிடிச்சு இந்த கோபம் தான் டா இந்த அளவு உன்னை கொண்டு போய் இருக்கு.

இங்க வந்து உட்காரு என்று ராஜாவை கையை இழுத்து தன் அருகில் உட்கார வைத்தாள்.

அம்மா: ராஜா, கண்ணா அம்மாவால உன்ன இந்த மாதிரி பாக்க முடியல டா

ராஜா: என்னால அவ நினைப்புல இருந்து வெளிய வர‌ முடில மா

அம்மா: அம்மா அதுக்கு ஒரு ஐடியா சொல்லவா

ராஜா: சொல்லுமா என்ன ஐடியா

அம்மா: உனக்கு லதாக்கு அப்புறம் யாரை ரொம்ப பிடிக்கும்.

ராஜா: உன்னதான் மா பிடிக்கும்.

அம்மா: பொய் சொல்லாத டா, என்னலாம் உனக்கு பிடிக்குமா

ராஜா: ஏன் மா இப்படி பேசுற, கொஞ்ச நாள் உன் கூட பேசாம இருந்தது உண்மை தான், அதுக்காக பாசம் இல்லாமயா இருக்கும்.

நீதான் மா என் செல்லம் என அவளது முகத்தில் கை வைத்து கூற அம்மா லேசாக சிரித்தாள், நானும் சிரித்தேன்.

அம்மா: இப்போ எப்படி தெரியுமா இருக்கு , இந்த மாதிரி எப்போதும் நீ சிரிச்சுக்கிட்டே இருக்கனும். டேய் ராஜா நீ கொஞ்சம் கொஞ்சமா லதாவை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பி வரனும்.

ராஜா: முயற்சி பண்றேன் மா
நானும் லதாவை மறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன். நாட்கள் பல கடந்தன.

இப்படி இருக்க சில நாட்களில் என் தாத்தா அம்மாவிற்கு போன் செய்து அங்கு ஊரில் திருவிழா நடக்க இருப்பதால் அதற்காக என்னையும் அம்மாவையும் அழைத்தார்.

நான் அங்கு சென்றால் என் மனநிலை சிறிது மாற வாய்ப்பு இருப்பதால் அம்மா அங்கு வருவதாக கூறினாள்.

திருவிழாவும் வந்தது, நானும் அம்மாவும் தாத்தா வீட்டுக்கு சென்றோம்.
தாத்தா வீட்டில் மாமா, அத்தை, தாத்தா, மட்டுமே.. அத்தைக்கு குழந்தை இல்லை.
அங்கு சென்றதும் அனைவரும் வரவேற்றனர்.
கோவிலுக்கு வீட்டில் இருக்கும் அனைவரும் கிளம்பினோம். கோவிலில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி இருந்தது. ஒருவரை தவிர அது என் அம்மா தான்.

நான்: அம்மா எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க, நீங்க மட்டும் ஏன் கவலையாக இருக்கிங்க.

அம்மா: அதெல்லாம் ஒன்னும் இல்லடா, அதிக தூரம் பயணம் செய்து வந்து வந்தோம் அதனால டயர்டா இருக்கு.

நான்: சரி மா அப்போ வாங்க நாம வீட்டுக்கு போகலாம்

அம்மா: சரி வா போகலாம்

இருவரும் வீட்டிற்கு சென்று தூங்க, திடிரென்று தாத்தா என்னை எழுப்பினார் நானும் என்ன என்று கேட்க

தாத்தா: ராஜா என்கூட வா நம்ம இரண்டு பேரும் பக்கத்து ஊரு வரைக்கும் போயிட்டு வரலாம்

நான்: தாத்தா எனக்கு டயர்டா இருக்கு, நான் வரல, நீங்க போங்க.

தாத்தா: எனக்கு பைக் ஓட்ட தெரியாது, நீ கொஞ்சம் கூட வந்தா சீக்கிரம் போயிட்டு வரலாம்.

அம்மா: ராஜா, தாத்தா கூப்பிடுராருல கொஞ்சம் கூட போயிட்டு வா

நான்: சரி மா

நானும் தாத்தாவும் பைக்கில் பக்கத்து ஊருக்கு சென்றோம், அங்கு தாத்தா சிறிய வேலையாக அவரின் நண்பரின் வீட்டிற்கு செல்ல நான் அங்கிருந்து சற்று தள்ளிச்சென்று சிகரெட்டை பற்ற வைத்து அடித்து கொண்டு இருந்தேன்.

அப்போது என் பக்கத்தில் ஒரு பைக் வந்தது, அதிலிருந்த நபர் என்னிடம் ஒரு அட்ரெஸ்ஸை கேட்க நான் அவருக்கு வழி சொல்லும்போது தான் கவனித்தேன், அவர்கூட பைக்கில் இருந்தது என் லதா.

எனக்கு கைகள் படபடக்க, கண்களில் தண்ணீர் வழிய எதுவும் பேச முடியாமல் நின்றேன்.

பின் அவர், தம்பி என்னாச்சு எதற்காக உங்கள் கண்ணில் கண்ணீர் வருகிறது என கேட்க, நானோ இல்லை சார் கண்ணில் தூசி விழுந்துவிட்டது என்று கூறி பின் அவர்களுக்கு வழி கூற அவரும் நன்றி என கூறினார்.

அப்போது லதாவை கவனித்தேன், கழுத்தில் தாலியுடன், வயிறு சிறிது பெரிதாக இருந்தது.

நான் அவரிடம் சார் இது யாரு என்று கேட்க, அவர் இது என் மனைவி. எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு மாதம் ஆகிறது என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதுவரையிலும் லதா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திரும்பவும் லதாவின் நினைவலை என் மனதை வற்புறுத்தியது.

பின் நானும் தாத்தாவும் அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

அங்கே என் ரூமிற்கு செல்ல அப்போதும் அம்மா சோகமாக இருந்தாள்.

நான்: அம்மா என்னாச்சு எதற்காக சோகமாக இருக்க

1 Comment

  1. Story is good upload the next

Comments are closed.