திருட்டு பயலே 414

(என் காதலை மறுப்பேதும் சொல்லாமல் அம்மா ஏற்றுக்கொண்டது சந்தோஷமாக இருந்தது)

நான்: அம்மா எனக்கு உங்களோட சம்மதம் கிடைச்ச அப்பறம் நான் லதாவை மிஸ் பண்ண மாட்டேன் மா. இது சத்தியம்

பின் நான் படிப்பில் கவனம் செலுத்தி கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். லதாவும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றாள்.

அம்மா, நான், லதா மூன்று பேரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.

அம்மாவும் எங்களின் காதலை லதா வீட்டில் எடுத்து சொல்லி திருமணம் செய்வதாக சத்தியம் செய்தாள்.
அன்று இரவு என் அப்பா வீட்டிற்கு வந்தார். நான் அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு என் ரூமிற்கு தூங்க சென்றேன்.

சிறிது நேரத்தில் என் அப்பாவின் சத்தம் அதிகமாக கேட்டது. நான் எழுந்து கதவின் அருகில் சென்று காதை வைத்து கேட்டேன்.

அப்பா: என்னடி நெனச்சுட்டு இருக்கிங்க ரெண்டு பேரும், அவன் யாரோ வேற சாதி பொண்ண லவ் பண்ணுவானாம், நீ அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா, என்னடி இதெல்லாம்
அம்மா: என்னங்க இப்படி பேசுறிங்க, நம்ம பையன் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்.

அப்பா: அதுக்கு வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க சொல்றியா

அம்மா: ஏங்க அவன் ஆசைபட்டுடான் இப்ப போய் இப்படி சொல்றிங்க.

அப்பா: அவனுக்கு நம்ம சாதியில நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

அம்மா: ஏங்க நான் சொல்றது உங்களுக்கு புரியலையா, அந்த பொண்ணு கிடைக்காத வருத்ததுல நம்ம பையன் எதாவது பண்ணிகிட்டா நாம என்னங்க பண்றது, நமக்கு இருக்குறது ஒரே புள்ள
அப்பா: நான் செத்தாலும் அவங்க கல்யாணம் நடக்காது.

அம்மா: ப்ளீஸ்ங்க நம்ம பையன் வாழ்க்கை
இது, நல்லா யோசிச்சு முடிவு எடுங்க
(அப்பா உடனே கோபமடைந்து அங்கு இருந்த பொருட்களை தூக்கி அடித்து நொறுக்கினார்)

அப்பா: இந்தா டி நான் சொன்னது சொன்னது தான். என்ன மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு பாக்குறேன். நான் இதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்.

இதுவரை அப்பா இதுபோல் கோபப்பட்டு அம்மா பார்த்ததில்லை. அம்மா அப்பாவின் கோபத்தை பார்த்து அழுதாள்.
( அப்பா ரூமின் உள்ளே சென்று கதவை வேகமாக சாத்தினார்)
அம்மா சிறிது நேரம் கழித்து என் ரூமிற்குள் நுழைந்தாள்.

நான் பெட்டில் படுத்து இருக்க என் பக்கத்தில் வந்த அம்மா என்னை பார்த்து.

அம்மா: ராஜா ராஜா தூங்கிட்டியா

நான்: இல்ல மா

அம்மா: நடந்ததெல்லாம் கேட்டியா

நான்: கேட்டேன் மா ( என் கண்ணில் நீர் வழிய)

அம்மா: ராஜா அழாதடா அம்மா நான் இருக்கேன் நீ நினைச்ச மாதிரி லதா தான் உன் பொண்டாட்டி.
நான்: எப்படி மா அப்பா தான் ஒத்துக்க மாட்டாரே

அம்மா: ராஜா நான் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன், இன்னைக்கு தானே அவரு ஊருல இருந்து வந்திருக்காரு , அதனால அவர்கிட்ட பொறுமையா பேசி சம்மதம் வாங்குறேன்.

நான்: அம்மா லதா இல்லனா நான் செத்துருவேன்
அம்மா ஓங்கி என் கண்ணத்தில் அறைந்தாள், இந்த மாதிரி இனி பேசுன உன்ன நானே கொன்னுடுவேன் பாத்துக்க.

நீ தூங்கு எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்.
நானும் தூங்கினேன்.

நானும் அம்மா அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிடுவாள் என்று நம்பிக்கையாக இருந்தேன்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல நான் அம்மாவை பார்த்து

நான்: அம்மா என்ன ஆச்சு அப்பா என்ன சொன்னாரு

அம்மா: நான் எவ்வளவோ பேசி பாத்தேன் டா ஆனால் உன் அப்பா ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.

நான்: ( கோபமாக) என்ன அம்மா இப்படி சொல்றிங்க உங்கள நம்பி தானே நான் இருந்தேன் இப்போ இப்படி சொல்றீங்க, உங்கள போய் நம்புனேன் பாருங்க, விடுங்க என் வாழ்க்கையை நானே பாத்துக்கிறேன்.
அம்மா: ராஜா கத்தாதடா அம்மா உனக்கு சொன்ன மாதிரி லதா தான் உன் பொண்டாட்டி போதுமா

நான்: என்ன மா கொலப்புற

அம்மா: ராஜா நான் அப்பாகிட்ட எவ்வளவு சொன்னாலும் அவரு பிடியில் இருந்து வர மாட்றாரு. அதனால நீ லதா வ கூட்டிட்டு கோயம்புத்தூர் ல இருக்க என் அண்ணன் வீட்டுக்கு போயிடு, அங்க என் அண்ணன் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாரு , கொஞ்ச நாளைக்கு அப்புறம் இங்க வந்துருங்க, உன் அப்பாவும் வேற வழி இல்லாம உங்களை ஏத்துப்பாரு.

1 Comment

  1. Story is good upload the next

Comments are closed.