எனக்கு பெரிய பணக்காரியாக ஆக வேண்டும் என்று ஆசை. ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் மெனுகார்டை கூட பார்க்காமல் அங்குள்ள அத்தனை ரக ரகமான உணவுகளை ஒரு கை பார்க்க வேண்டும் என்று தோன்றும். உங்களில் சிலருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றலாம். ஆனால் எனக்கு ஒரு வேளை நல்ல உணவே கனவாக இருந்தது.
இப்படியிருக்கும் நான் எப்படி பெரிய பணக்காரியாக ஆக முடியும். யோசித்துப் பார்த்தால் எனக்கு இருக்கும் ஒரு ஆயுதம் என்னுடைய உடல் மட்டுமே என்று தோன்றியது. எனக்கு நல்ல பணக்கார கணவன் அமைந்தால் நிச்சயம் நான் எதிர்பார்க்கும் வகையில் என்னுடைய வாழ்வு இருக்கும்.
என்னுடைய பட்டன் கம்பேனியின் முதலாளியின் பெயர் சிவசேனன். எல்லோரும் சிவா என்று அழைப்பார்கள். அவருடைய கம்பீரம் அனைத்து பெண்களையும் அசத்தும். உடல் அளவில் மட்டுமல்ல.. பணத்திலும் அவருடைய கம்பீரம் வெளிப்படும். ஆனால் சிவசேனன் பெண்களைப் பார்த்து வழிபவர் இல்லை. பட்டன் கம்பேனியில் அத்தனை இளம் சிட்டுகள் இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்காதவர்.
சில பெண்கள் அவரை வளைத்துப் போட்டால் போதும் கைசெலவுக்கு பணம் கிடைக்கும் என்று டிரை பண்ணிப் பார்த்தார்கள். ஆனால் ஒன்னுமே நடக்கவில்லை. சிவசேனன். அப்பா.. அப்படியொரு ஆள்.
சிவசேனனைப் பார்க்க நடிகர் விசாலைப் போல சாயல் இருக்கும். ஆனால் விசால் அளவிற்கு உயரமெல்லாம் இல்லை. நல்ல கட்டுடம்பும் இருக்கு. நெற்றியில் பட்டைப் போட்டுக் கொண்டு அதன் நடுவே செந்தூரத்தை திலகம் போல இழுத்துவிட்டிருப்பார்.
கழுத்தில் ருத்ராட்சம் தங்க பீடிகையில் இட்டு தங்க சங்கிலியில் இணைத்திருப்பார். கையில் ஈசா பாம்பு மோதிரம் இருக்கும். மணிக்கட்டில் கம்பீரமாக தங்க பிரேஸ்லெட் இருக்கும். அதை மட்டும் கொண்டு போய் என்னுடைய திருமணத்தையே முடித்துவிடலாம். ஆனால் அதையெல்லாம் தினமும் போட்டுக் கொண்டு தங்கத்தை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெரிய பணக்காரர்கள்.
சில நாட்களாக சிவசேனன் முதலாளியின் பார்வை என்மேல் படுவது தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அவர் என்னிடம் நெருக்கமாக பழகினார். பட்டன் மூட்டைகளை எடுத்து வைக்கும் போது குடோனில் என்னோடு பேசினார். நெருக்கம் அதிகமாக இருப்பதைப் போல அவருடைய பேச்சு இருந்தது.
அவர் மேல் வீசுகின்ற செண்ட் நறுமனம் தூக்கலாக வீசியது. அவர் என்னைப் பார்த்து சிரித்து பேசுவதை பார்த்து நந்தினி என்னுடன் வேலைக்கு வருகிறவள். அவள் இந்த பேச்சுவார்த்தையை கவனித்துவிட்டாள்.
“என்னாடி நடக்குது நம்ப பட்டன் கம்பேனியில”
“அதெல்லாம் ஒன்னும் நடக்கலையே..”
“ஆங்..ஆங்.. முதலாளி உன்னைப் பார்த்து அடிக்கடி சிரிக்கிறதும்.. பதிலுக்கு நீ அவரைப் பார்க்கிறதும்…”
“ச்சீ.. நான் எங்க.. முதலாளி எங்க.. அவரோட கால் செருப்புக்கு ஈடாவேனா”
“பார்த்தா அப்படி தெரியலையேடி…” என்று அவள் என்னுடையப் பேச்சை கேட்டு குழம்பிப் போனாள்.
நந்தினி கூறியது போல அவர் என்னைப் பார்த்து சிரிப்பதும், உதட்டை லேசாக கடித்துக் கொண்டு கண்ணிலேயே பேசுவதும் எனக்கு வெட்கமாக இருந்தது. அவரை எப்போதுமே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருப்பேன்.