நான் என் மகளை பிரிந்து எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். இப்போது என் மகள் யாருமில்லாமல் அன்புக்காக எவ்வளவு ஏங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டேன். ” ஆரணியம்மா, உன் அம்மாவால் தான் இத்தனை காலம் என்னால் உன்னுடன் கதைக்க முடியவில்லை. அவள் இல்லை என்று நினைக்கும் போது எனக்கும் கண்ணீர் மட்டும் தான் வருகிறது. நீ எதற்கும் இனி கவலை பட கூடாது. உனக்கு இனி நான் இருக்கிறேன். இனி எது என்றாலும் நீ என்னிடம் சொல் அதை நான் பார்த்து கொள்கிறேன்” என்று அவளுக்கு தெம்பூட்டினேன்.
“இத்தனை வருடம் தந்தையின் அன்புக்காக ஏங்கினேன் இனியாவது அந்த அன்பு முழுமையாக கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று என் மகள் சொல்லி முடிக்கும் முன்னரே தொடர்பு துண்டானது. “அடக் கடவுளே! நானே இத்தனை வருடம் கழித்து என் மகளுடன் கதைக்கிறேன் அதற்குள் ஏன் இப்படி” என்று கூரையை பார்த்து புலம்பிவிட்டு மீண்டும் அந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தேன். ஒரு ஆணின் குரல் அதுவும் எனக்கு புரியாத பாஷை. என்ன இப்படி ஆகிவிட்டது. நான் ஆங்கிலத்தில் கதைத்தும் அவருக்கு அது புரியவில்லை. “ஒரு வேளை என் மகள் யாருடைய தொலைபேசியையும் வாங்கி கதைத்திருப்பாளோ” என்று எனக்குள்ளே குழப்பம். யோசித்து யோசித்து பார்த்தும் எனக்கு எதுவுமே விளங்கவில்லை. என் மகளை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று வழியும் தெரியவில்லை. ஆரணி எப்படி இருப்பாள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அவள் கறுப்பா, சிவப்பா, முகம் எப்படி இருக்கும் என்றெல்லாம் அவளின் குரலை மனதில் நிறுத்தி கற்பனை செய்தபடியே தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலை நான் வழக்கம் போல் அலுவலகம் சென்று வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். இருந்தும் என் மனம் முழுக்க ஆரணியின் நினைவாகவே இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து என் மகளோடு கதைத்தேன் ஆனாலும் அந்த சந்தோஷம் சில நிமிடங்களிலே முடிந்து விட்டதே. அவளை திரும்ப எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தெரியவில்லையே என்று எனக்குள் நானே கவலைப்பட்டுக் கொண்டேன். ஏனோ வேலையில் என் கவனம் செல்லவில்லை.
அப்போது எனது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி “please call this number – Arani” என்று ஒரு இந்தியா நம்பரிலிருந்து, நான் அடைந்த சந்தோசம் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. உடனே அந்த நம்பருக்கு கோல் செய்தேன் மறுமுனையில் ஆரணி “Hello! sorry நேற்று தொடர்ந்து கதைக்க முடியல. இன்றைக்கு தான் என் ஃபிரண்ட் போன் கிடைச்சது. இந்த போன்லயும் அமெரிக்கா கதைக்கிற அளவுக்கு காசு இல்லை அதுதான் உங்களை கோல் எடுக்க சொன்னேன்” என்று சொல்லி முடித்தாள். “என்னம்மா நீ! எனக்கு ஏதோ ஒரு வழியில் உன் கூட கதைச்சாலே போதும் என்று இருக்கு, உன் கூட கதைக்கிற சந்தோஷம் எனக்கு எப்போதும் வேண்டும் என்று தோனுதுமா” என்றேன்.
“ஏன் ஆரணி! உன் கிட்ட ஃபோன் எதுவும் இல்லையா” என்றதும் அவள் ” அம்மா என்னை பெரிய ஃபோன் யூஸ் பண்ண விடுறது இல்லை. என் கிட்ட நோர்மல் ஃபோன் தான் இருந்திச்சு அதுவும் பழுதாகிட்டு” என்றாள். என் மகள் இன்னும் நவீன உலகிற்கு பழக்கப்படவில்லையோ என எண்ணிக்கொண்டே ” என்னம்மா இப்ப எல்லாம் சாதாரணமா எல்லாரும் பெரிய ஃபோன் வச்சிருக்கிற காலம் இது. அப்படி இருக்க நீ இன்னும் பெரிய ஃபோன் இல்லாம இருக்கிற” என்றேன். ” இல்லை பெரிய ஃபோன் வச்சிருக்க வேண்டிய தேவை எனக்கு வரல. அம்மா இங்க வந்த பிறகு என்னை படிக்க வைக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாங்க அதனால் எனக்கு அவங்களை இன்னும் கஷ்டப்படுத்த தோனல” என்று சொன்னாள். ஆரணி இவ்வளவு தூரம் என்னோடு கதைத்தாலும் அவள் இதுவரை என்னை அப்பா என்று அழைக்கவில்லை.
அந்தச் சமயத்தில் அலுவலகத்தில் வேலை நிமித்தம் என்னை சந்திக்க சில நபர்கள் வருகை தர அவர்களை சிறிது நேரம் இருக்க சொல்லி விட்டு ஆரணியிடம் “ஆரணி நான் அலுவலகத்தில் இருக்கிறேன். உன்னோடு தொடர்ந்தும் இப்போது கதைக்க இயலாது. ஆனால் நான் இப்போது கோல் கட் பண்ணினா உன் கூட எப்படி கதைக்கிறது என்று தெரியல. உனக்கு என்று சொந்தமா ஒரு ஃபோன் இருந்தா தானே நானும் உன் கூட எப்போதும் கதைக்க முடியும்” என்றதும் அவள் மௌனமாக இருந்தாள். “என்னம்மா ஏன் மௌனமாக இருக்கிறாய்” என்றதும் அவள் ” என் கிட்ட இப்ப ஃபோன் வாங்கும் அளவுக்கு பணம் இல்லை. எனக்கும் உங்க கூட கதைச்சுக் கொண்டே இருக்க தான் ஆசையா இருக்கு ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை” என்றாள்.
“ஆரணி எனக்கு உன் மேல இருக்கிற உரிமையில கேட்கிறேன். நான் பணம் போட்டு விடுறன் முதல்ல ஒரு ஃபோன் வாங்கிறியா” என்றதும் ” நான் உங்க கிட்ட காசுக்காக தான் கதைக்கிறேன் என்று நினைக்கிறீங்களா ” என்று அவள் சோகமாக கேட்டதும் ” நீ என் பொண்ணுமா. உனக்கு செய்யுறதுக்கு நான் ஏன் அப்படி நினைக்கனும். உன்னோட இந்த 18 வயசுக்குள்ள வெறும் 2 வருசம் தான் நான் உன் கூட வாழ்ந்திருக்கன் அதுவும் நீ அறியாத வயதில், இனி வரும் காலமாவது நான் உனக்காக உன் கூட வாழனும் என்று ஆசைப்படுறன். அதுக்காக நான் எதையும் செய்ய தயாரா இருக்கேன்” என்றேன். மறுபடியும் அளிடமிருந்து மௌனமே பதில். “நான் சம்பாதிக்கிற அத்தனையுமே உனக்காக நான் என்று நான் இங்க வந்த காலம் தொடக்கம் முடிவு செய்து விட்டேன். இனி எனக்கு இந்த வாழ்க்கையில் எல்லாமே நீதானம்மா” எனறதும் அவள் ” எனக்கும் இந்த உலகத்தில் உங்களை தவிர வேற யாரும் இல்லை. உங்களோட அன்புக்குள்ளயும், பாசத்துக்குள்ளயும் வாழனும் என்று தான் ஏக்கமா இருக்கு. அதுக்காக நீங்க என்ன சொன்னாலும நான் செய்கிறேன்” என்றாள்.
“நான் பணம் போட்டு விடுவேன் நீ முதல்ல ஒரு ஃபோன் வாங்கி அதுல வட்ஸ்அப் எடுத்து அது மூலமா எனக்கு மெசேஜ் அல்லது கோல் பண்ணுமா” என்று அவளுடைய வங்கி இலக்கத்தை வாங்கி கொண்டேன். ” எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் ஃப்ரீ ஆனதும் உன்னுடைய புது போனில் நாம் கதைக்கலாம். உன்னுடைய கோலுக்காக காத்திருப்பேன்” என்று கூறி போனை கட் செய்து அலுவலக வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். வீடு செல்லும் வரை ஃபோன் தொடவில்லை. வேலை எல்லாம் முடித்து வீடு செல்ல முனையும் போது தான் ஆரணியின் நினைவு வர, ஆரணியை மெசேஜ் அல்லது கோல் பண்ண சொன்னோமே என்று போனை எடுத்து பார்த்தேன். அங்கே வட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. ஆம் அது ஒரு இந்தியா நம்பர் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படம் ப்ரோஃபைலில். ஆவலோடு அந்த மெசேஜ் திறந்தேன். ” Hi! I’m Arani, please reply me when you are free” என்று இருந்தது. நான் மெசேஜ் படித்ததும் முதலில் அவளுடைய ப்ரொஃபைல் திறந்து அவளின் புகைப்படம் பார்த்தேன்.
18 வருடங்கள் கழித்து என் மகளை பார்க்கிறேன். ஒரு தேவதை போல் அவ்வளவு அழகாக இருந்தாள். அவள் அவளின் அம்மா போல வெள்ளை நிறம். அத்தனை அம்சங்களும் பொருந்திய இலட்சனமான முகம். அவள் கண்கள் அப்படியே என்னுடைய கண்கள் போல. நான் என்னை மறந்து, அவள் என் மகள் என்பதை மறந்து அப்படியே மெய் மறந்து அவளின் படத்தை ரசித்துக் கொண்டு இருந்தேன். ஆம் அவளை பார்க்கும் யாவரும் அவள் அழகில் மயங்கி விடுவார்கள். அவளிடமிருந்து மீண்டும் ஒரு மெசேஜ் “are you busy now?” என. நான் அவளின் முதல் மெசேஜ் படித்தும் பதில் எதுவும் போடவில்லை என்றதும் அவள் அடுத்த மெசேஜ் அனுப்பி விட்டாள்.
நான் அவளின் வட்ஸ்அப்பிற்கு அழைப்பு எடுத்தேன். அவள் மறுமுனையில்” வேலையா இருக்கிறீங்களா? நான் உங்களை தொல்லை செய்கிறேனா?” என்றாள். ” ” இல்லயம்மா இப்போது தான் வேலை முடிச்சு வீட்டுக்கு போகப் போகிறேன். வீடு போனதும் நான் மறுபடி கோல் பண்ணுறேன்” என்றதும் அவள் ” சரி நான் wait பண்ணுறேன்” என்று கோல் கட் செய்தால். நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறியதும் அவளுக்கு “I miss you so much Arani” என்று வட்ஸ்அப்பிற்கு மெசேஜ் செய்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து வீடு நோக்கி புறப்பட்டேன். சிறிது நேரத்தில் என் வட்ஸ்அப்பிற்கு அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இருந்தும் நான் வாகனத்தில் இருந்ததால் அதனை பார்க்க முடியவில்லை. 15 நிமிடத்திற்கு பின்னர் வீடு வந்ததும் போனை எடுத்து வட்ஸ்அப் திறந்து அவள் மெசேஜ் பார்த்ததும் என்னை அறியாமல் ஒரு சந்தோஷம் எனக்குள் உருவானது.
Enna bro avlothanaa Sema story bro continue pannugaa
Bro Continue pannu bro. waiting for next episode
Dai ithu yepdi da mudiyum? Unakku story continue panna mudiyala na sollu naa panren