மறு நாள் இருவரும் ஆபீஸில் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள். அரவிந்தை சமாளிப்பதற்கு தான் கார்த்திக்கிற்கு சற்று கடினமாக இருந்தது. அவன் கூறிய பொய் காரணத்தில் கார்த்திக் மீது அவனுக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.இருந்தாலும் அவனிடம் மேலும் கேட்க விரும்பாமல் அவன் சொல்வதை மட்டும் கேட்டு கொண்டான்.
ஏற்கனவே பிளான் செய்ததை போல கார்த்திக் இருவருக்கும் ட்ரைன் டிக்கெட் புக் செய்து விட்டு சென்னை ரயில் நிலையம் வந்தடைந்தான். ராஜியை ட்ரைன் ஏற்றி விட மீரா வருவதாக சொல்லவும் ராஜி வேண்டாம் என்று சொல்லி விட்டாள். கேப் புக் செய்து அவளும் வந்து விட கார்த்திக் அவளை பிக்கப் செய்து கொண்டான்.
இருவரும் தங்களது கம்பார்ட்மென்ட் சென்று சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டனர். ராஜி அவன் எதாவது பேசுவான் என்று எதிர் பார்க்க அவன் ஏதும் பேசாது ஹெட்போன் அணிந்து போனை நோண்டி கொண்டிருந்தான்.
இங்கே மீராவின் ரூமில் அரவிந்த் இருக்க மீரா வேறு சிந்தனையில் இருந்தாள். அங்கே மௌனத்தை கலைக்கும் விதமாக அரவிந்தே பேச்சை ஆரம்பித்தான்.
“ என்னாச்சு மீரா. அமைதியா இருக்க. “
“ ஒன்னும் இல்ல அரவிந்த். சும்மா தான். “
“ இல்ல மீரா. நீ ஏதோ யோசிச்சிட்டு இருக்க. என்ன விஷயம்னு சொல்லு/ “
“ அரவிந்த். நீ ராஜி பத்தி என்ன நினைக்குற. “
“ ராஜியா. அவங்கள பத்தி ஏன் இப்போ கேக்குற. “
“ சொல்லு அரவிந்த். காரணம் இருக்கு. “
“ ராஜி ரொம்ப நல்ல பொண்ணு. சின்சியர். அப்ரம் உனக்கு நல்ல பிரெண்டு. “
“ எனக்கு நல்ல பிரெண்டு தான. ஆனா இப்போலா அவ என்கிட்டே இருந்து எதையோ மறைக்கிற மாதிரி எனக்கு தோணுது. அது என்னனு தான் எனக்கு புரிய மாட்டேங்குது. “
“ நீ என்ன சொல்ற மீரா. அவ ஏன் உன்கிட்ட இருந்து மறைக்கணும். எனக்கு புரியல.
“ இல்ல அரவிந்த் உன்கிட்ட நான் ஒன்னு சொல்லாம விட்டுட்டேன். அவ கார்த்திக்கை லவ் பன்னினா. கார்த்திக் பத்தி தான் உனக்கு தெரியுமே, அவன் அதை ஏத்துகிடல. “
“ ஒஹ் இதெல்லாம் நடந்துருக்கா. மச்சக்காரன் கார்த்திக். அவனுக்கு மட்டும் தான் இப்படிலாம் நடக்கும். “
அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டி விட்டு நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு. என்றாள்.
அரவிந்த் தலையை தடவி கொண்டே சொல்லு என்றான்.
“ அவ மற்ற பொண்ணுங்க மாதிரி கிடையாது. என்கிட்டையே எத்தனையோ தடவ சொல்லிருக்கா. காதல் பத்தி அவ வச்சிருக்குற அபிப்ராயமே வேற. கார்த்திக்கை அவ்ளோ ஈஸியா அவ மறக்க மாட்டா. “
“ சரி அதுக்கும் இப்போ நீ சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம். “
“ சம்பந்தம் இருக்கு அரவிந்த். “
நடந்த சனம்பவங்கள் அனைத்தையும் அரவிந்திடம் சொன்னாள் மீரா.
“ மீரா அவ பிராக்டிக்கலா யோசிச்சிருக்கா, கார்த்திக்கை மாற்ற முடியாதுன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. அதான் அவ மூவ் ஆன் ஆகிருக்கா. இது நல்ல விஷயம் தான். இதுக்கு போய் ஏன் நீ இவ்ளோ யோசிக்கிற. ப்ரீயா விடு.”
“ இல்ல அரவிந்த். இதுல ஏதோ ஒன்னு இருக்குன்னு என் மனசு சொல்லுது.”
