கார்த்திக் சென்ற உடன் ஹே கார்த்திக் யாருடி அவன்.ட்ரீட்க்கு வாங்கன்னு தான சொன்னேன் அதுக்கு போய் இப்படி சொல்லிட்டு போறான்.
ஹே கார்த்திக் என்னோட மாமா பையன்.அவன் இப்படிலா ஒதுங்கி போகுற ஆளே கிடையாது.முன்னாடிலா எங்க அக்கா பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் இன்ட்ரோ பண்ணி வைன்னு எங்க அக்காகிட்ட எவ்ளோ கெஞ்சுவான் தெரியுமா.அவன் ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியல.
ம்ம்ம்ம் சரி.சாரு பாக்க சூப்பரா இருக்காரே.சிங்கிளா.
ஏன் நீ ட்ரை பண்ண போறியாக்கும்.
ஏன் ட்ரை பண்ணாதான் என்ன.
ட்ரை பண்ணு.ஆனா எங்க அக்காகிட்டையும் ஒருவார்த்தை கேட்டுக்கோ.
ஏன் அதான் நீயே சொல்லிட்டல்ல.அப்புறம் ஏன் உங்க அக்காகிட்ட கேட்கணும் என்றாள் சுஜி.
ஹலோ ஓவரா கனவு காணாதீங்க.எங்க அக்கவைத்தான் அவன் கல்யாணம் பண்ணிருக்கான்.
ஏய் அப்ப நீ முன்னாடி எங்ககிட்ட சொன்னதெல்லாம் என்று மான்வி கேட்க.
ஆமா.இவனேதான்.
உங்க அக்கா கண்டிப்பா அன்லக்கிடி.ஆனா நீ சொன்னதை வச்சி பாக்கும்போது இன்னும் ரெண்டுபேத்துக்கும் நடுவுல பிரச்சனை இருக்கும் போலையே.
ஆமாடி.எங்க அக்காகிட்ட அதை பத்தி இன்னைக்கு பேசணும்னு நினைச்சேன்.சரி அவளாவே சொல்லட்டும்னு விட்டுட்டேன்.
இடையில் கௌசல்யா சக்தி அவரு நம்பர் கொடேன் என்று தயங்கிக்கொண்டே போனை எடுக்க அவளை பார்த்த மற்ற அனைவரும் சிரித்துவிட்டனர்.
அடிப்பாவி கொஞ்ச விட்டா எங்க அக்காவுக்கே சக்களத்தியா வந்துடுங்க போல.கொன்னுடுவேன்.
உங்களுக்குத்தான் எத்தனை பேரு ட்ரை பன்றாங்க.அப்புறம் என்னடி.
ஏய் அவுங்கல்லாம் சும்மா டைம் பாஸ் பண்றவங்க.அழகை மட்டும் பார்த்து மச்சான் எப்படி இருக்கா பாரு,செம கட்டைடா அப்படின்னு மத்த பொண்ணுங்களை சொல்லிட்டு,நம்மள சின்சியரா லவ் பண்றதா சொல்லுவாங்க.உங்க மச்சி மாதிரி ஒருத்தன் கிடைப்பானா. என்றால் மான்வி.
அம்மா தாயே இத்தோட இதை விட்டுடுங்க.அதையும் இதையும் சொல்லி எங்க அக்கா லைஃப்ல கும்மி அடிச்சிடாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டாள் சக்தி.
சரி சரி சேன்ஜ் த டாப்பிக் அனைவரும் சொல்லிவிட்டு ட்ரீட்டை முடித்துவிட்டு பில் செட்டில் செய்ய சென்றனர்.
தனது கார்டை எடுத்து மான்வி கொடுக்க.உங்க பில் ஆல்ரெடி செட்டில் பண்ணிட்டாங்க மேம் என்றான் கேஷியர்.
யாரு என்று அவள் கேட்க இப்போ ஒருத்தர் உங்க கிட்ட நின்னு பேசிட்டு இருந்தாரே அவருதான்.
சரி என்று சொல்லிவிட்டு சக்தியிடம் வந்த மான்வி ஹே சக்தி உங்க மச்சி பில் செட்டில் பண்ணிட்டாராம்டி. என்றாள்.
அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம். அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம்.
இல்லடி இது என்னோட ட்ரீட்.இதுக்கு அவர் பே பண்ணினா இது அவரோட ட்ரீட் மாதிரி ஆகிடாது.
விடுப்பா.இப்போ என்ன உன் சார்பா நான் கொடுத்ததா நினைச்சுக்கோ.
நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.சரி வா கிளம்பலாம்.
ஐயோ இப்படி தெரிஞ்சிருந்தா கூட அஞ்சு ஆறு பார்சல் வாங்கிருக்கலாமே. என்று ரம்யா சொல்ல அனைவரும் ஹோ என்றனர்.
ஏய் அலையாதீங்கடி.கிளம்பலாம் வாங்க என்று தங்களது ஸ்கூட்டியில் கிளம்பினர்.
புத்தகத்தை படித்து கொண்டிருந்த ராஜி மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசிக்க அதில் அத்தை மற்றும் முறைப்பெண் என்ற உறவில் அதிக இண்ட்டர்ஸ்ட் எடுத்து கார்த்திக் படித்தது தெரிந்தது.
அந்த பக்கத்தில் மட்டும் ரெட் கலர் பெண்ணினால் அதிகமா கோடிட்டு இருந்தான்.
பையன் ரொம்ப ரசனைக்காரனாதான் இருக்கான் என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.
பின் ராஜி அப்படியே தூங்கியும் போனாள்.ஈவினிங் வந்தது.
வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.
கதவை திறந்த ராஜி என்ன இன்னைக்கு சீக்கிரமாவே வந்தாச்சு என்றாள்.
இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிட்டு.அதான் வந்துட்டேன்.இந்தா என்று வாங்கி வந்த மல்லிகை பூவை அவளிடம் கொடுத்தான்.
என்னது.
மல்லிகை பூ.சாமிக்கு போட்டுடு.
சாமிக்கு மட்டும்தானா.
ஆமா.நீதான் நான் வாங்கிட்டு வந்தா வைக்க மாட்டியே.
அடுத்த பாகம் எப்போ வரும்?
hey next part epo?..
hey nice bro…
next part upload quickly… 🥰
Next part upload pannunga