என் காதல் கண்மணி 2 58

அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்.,

அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான்.

ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த சாந்தா வந்துவிட என்னப்பா ஏன் நீ காபி போட்டுட்டு இருக்க.என் மருமக எங்கன்னு கேட்டாள்.

கார்த்திக் அவன் பின்னால் நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்தான்.பார்த்துவிட்டு ஏன் நான் போட்டு குடிச்சா என்ன.என் பொண்டாட்டி போட்டு தரேன்னு தான் சொன்னா.நான்தான் அவளை போட வேண்டாம்னு சொல்லிட்டு அவளுக்கும் எனக்கும் சேர்த்து நானே போட்றேன்னு சொல்லி அவளை இருக்க வச்சேன்னு சொன்னான்.

அதுக்குள்ள பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டயடா.கல்யாணத்துக்கு முன்னாடி காபி குடிச்ச டம்ளர கூட எடுத்துட்டு வர மாட்டியேடா.இப்ப காபியே போட்டு குடிக்கிற.சூப்பர்டா என்று சொல்லிக்கொண்டு சென்றால் சாந்தா.

தயார் செய்த காபியை எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றான் கார்த்திக்.இங்கு ராஜி அத்தையிடம் சென்று அதை நைட் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்னு கேட்டாள்.

சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணிவச்சிருக்கேன்மா.அதை செஞ்சுக்கிடலாம்.சட்னி மட்டும் செய்யணும்.அதை நான் பாத்துகின்றேன்.நீ மேல போமான்னு சொன்னால் சாந்தா.

ரூமில் கார்த்திக் தலை வலிக்கு தைலம் தேய்த்து விட்டு தான் வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு சென்றான்.அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைப்பதற்கு முன் அவன் தனியாக ஆஃபீஸ் வைத்து ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருந்தான்.இப்போது அதை தன் சித்தப்பா பையன் மகேஷிடம் ஒப்படைத்து அதை கார்த்திக் கவனித்து கொண்டான்.

அங்கு மகேஷ் கிளைண்ட்ஸ் இடம் பேசி கொண்டிருக்க இவன் உள்ளே சென்றான்.பின் அவர்களிடம் பேசி கணக்குகளை சரி பார்த்தான்.இவ்வாறாக இரவாகி விட வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.ராஜிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நாம் இவனை நிம்மதியாக இருக்க விடகூடாதுன்னு நினைச்சோம்.ஆனால் இவன் நம்மகூட பேசாம நம்மள அவைட் பன்றான்.எது எப்படியோ நம்மை அவன் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.

இப்படியாக நாட்கள் செல்ல அன்று வெள்ளிக்கிழமை.வழக்கம் போல கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டான்.மதியம் போல ராஜியிடம் இருந்து போன் வந்தது.என்னங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடுறிங்களா.ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வரலாம்.சரின்னு சொல்லுங்கன்னு சொன்னாள் ராஜி.

அவனுக்கு குழப்பமாக இருந்தது.திடீர்னு ராஜியின் இந்த மனமாற்றம் எப்படின்னு.என்ன நடந்ததுன்னு தெரியலையே.சரி நல்லது நடந்தா சரிதான்னு சரி வரேன்.சீக்கிரமா வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.

இங்கு ராஜியோ கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அத்தையிடம் அத்தை சொல்லிட்டேன் அத்தை.சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாள் ராஜி.சரிம்மா அவன் வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க.மறக்காம சேலை கட்டிட்டு போம்மான்னு சொன்னாங்க.

இதை எதையும் அறியாத கார்திக்கிற்கோ நிமிடங்கள் வருடங்களை கழிய எப்போது நேரத்தை கழிக்க என்று யோசித்து கொண்டிருந்தான்.சரியாக 4 மணிக்கு கடிகாரம் ஒலிக்க ஆபிஸில் சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.