இரவு எட்டரை மணிக்கு வீட்டுக்குப் போனான் நவநீதன். அவன் போனபோது ஊர் மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. வீட்டுக்குள் திரி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அம்மா ஆட்டுச் சாலையை ஒட்டிய திண்ணை மேல் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில் கீழே தொங்கிய கால்களை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த கவிதா கேட்டாள்.!
” எங்க மாமா போன. ?”
” பசங்களோட பேசிட்டிருந்தேன் ” அவள் பக்கத்தில் போய் திண்ணையில் உட்கார்ந்தான்.
” சாப்பிடறியா. ? போடட்டுமா..?” என்று அவனைப் பார்த்தாள்.
” இல்ல இரு.. கரண்ட் வரட்டும். நீ.. அம்மா எல்லாம் சாப்பிட்டிங்களா..?”
”ம்.. நாங்கள்ளாம் எப்பவோ..”
நவநீதனைப் பார்த்து விட்டு தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த கவிதாவின் அம்மா எழுந்து வந்தாள். அவனது மாமா வாசலில் ஒயர் கட்டிலை போட்டு குறட்டைச் சத்தத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
” சாப்பிட்டாச்சா அத்தை..?” நவநீதன் தன் அத்தையைப் பார்த்துக் கேட்டான்.
” ஆச்சு நவநி. நீ சாப்பிடலியா ?”
” கரண்ட் வரட்டும் அத்தை. அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க..?”
” அதுக ரெண்டும் தூங்கிருச்சுனு நெனைக்கறேன். பாரு.. இது ஒண்ணு இருக்கே.. இதுதான் தூங்காம கோட்டான் மாதிரி உக்காந்துட்டிருக்கு..” என்று கவிதாவை கிண்டல் செய்தாள் அத்தை.
” அம்மா ” எனக் கத்தினாள் கவிதா ”நான் கோட்டான்னா. நீ.. நீ தேவாங்கு..”
சிரித்தபடி கீழே தரையில் உட்கார்ந்தாள் அத்தை.
” இப்படி எல்லாம் பேசறதுக்குத்தான் பள்ளிக் கொடத்துல சொல்லித் தராங்க போலருக்கு. ”
” ஆமா.. போ.. !!”
நவநீதன் குறுக்கிட்டுச் சொன்னான்.
” இவ காலேஜ்ல ஏதோ டூர் போறாங்களாமே அத்தை..”
” ஆமா சொன்னா..! உன்கிட்ட சொல்லி கேக்க சொன்னாளா.?”
கவிதா உடனே அவனை ஒட்டினாள்.
”பாத்தியா மாமா. இதான் எங்கம்மா கிட்ட எனக்கு சுத்தமா புடிக்காது. யாரு எது சொன்னாலும் உடனே ஒரு பழி போட்றனும்.”
நவநீதன் சிரித்துவிட்டு அத்தையிடம் சொன்னான்.
” இல்லத்த.. அவள்ளாம் அப்படி சொல்லல. நான்தான் அவள போகச் சொன்னேன்.”
” உங்க மாமன்தான் போக வேண்டாம்.. அப்படி இப்படினு சொல்லுச்சு நவநி..”
” அவ போய்ட்டு வரட்டும்த்தே… மாமாகிட்ட நான் பேசிக்கறேன்..”
” ம்.. சரி என்னமோ.. நீயாச்சு. உன் மாமனாச்சு.. உன் மாமன் மகளாச்சு..! நீங்க முடிவு பண்ணா சரி.. ” என அத்தை சொல்ல..
நவநீதன் அதை சாதாரனமாகத்தான் நினைத்தான். ஆனால் தன் அம்மா எதைச் சொல்கிறாள் என்பது கவிதாவுக்கு தெரிந்தது.
” லூசு அம்மா. சும்மா ஒளறாத. பேசாம இரு..” என்றாள். ஆனாலும் அவள் மனசுக்குள் ஏதோ ஒன்று நிகழவே செய்தது.!
ஊரெங்கும் மின்சாரமின்றி இருள் சூழ்ந்து கிடந்தது. காற்று மட்டும் லேசாக வீசிக் கொண்டிருந்தது. தனது அறைக்குள் படுத்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ரேவதி எழுந்து அறையை விட்டு வெளியே சென்றாள். அவளின் பெற்றோர் இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவள் தம்பி ஒரு திருமணத்துக்கு போயிருந்தான்.
அவள் வெளியே போய் கதவைச் சாத்தினாள். கால்களில் செருப்பணிந்து பாத்ரூம் போனாள். சில நிமிடங்களில் வெளியே வந்து இருண்டு கிடக்கும் தெருவைப் பார்த்தாள். அன்னாந்து வானத்தைப் பார்த்தாள். பின் மெல்ல திரும்பி வீட்டுக்கு பின் பக்கம் இருக்கும் ஒரு தோட்டத்தை நோக்கி இருட்டுக்குள் நடந்தாள்.
பழைய தோட்டம் அது. இரண்டு கிணறுகளும் நிறைய தெண்ணை மரங்களும் முன்பு இருந்தன. இப்போது அங்கு யாரும் குடியில்லை. அந்த தோட்டத்து வீடு கூட இடிந்து சிதிலமாகியிருந்தது. இப்போது நீர் இல்லாத இரண்டு கிணறுகளும்.. அங்கொன்றும் இங்கொன்றுமான சில மரங்களும்.. இரண்டே இரண்டு காய்க்காத தென்னை மரங்களும் மட்டும் இருந்தன. இருட்டில் தனக்கு பழக்கமாகி விட்ட கால் தடத்தில் நடந்து தென்னை மரத்தடிக்குப் போனாள் ரேவதி.!
அவளுக்கு முன்பே வந்து அந்த தெண்ணை மரத்தின் ஓரமாக ஒரு சின்ன வரப்பின் மேல் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தான் அன்பு.
ரேவதி வருவதைப் பார்த்ததும் மெதுவாக எழுந்து நின்றான். அவர்கள் இருவரும் இந்த மாதிரி இருட்டில் சந்தித்துக் கொள்வது இது ஒன்றும் புதுசில்லை. ஆனால் இன்றுவரை அவள் கற்புடன்தான் இருந்து வருகிறாள்.
“வாடி” என்றான்.
“என்னை எதுக்குடா இப்ப வரச் சொன்ன?” என்று கேட்டபடி அவனை நெருங்கினாள் ரேவதி.
“ம்ம்ம்.. உன்ன கற்பழிக்கலாம்னுதான்”
“யாரு? நீ என்னை கற்பழிக்கறவன்?”
“ஏன்.. ? உன்ன ரேப் முடியாதுனு நெனச்சிட்டியா?”
“நீ ஏன்டா அவ்ளோ எனர்ஜிய வேஸ்ட் பண்ணி என்னை ரேப் பண்ணனும்.? என் கழுத்துல ஒரு தாலிய கட்டு. படுடினு சொல்லு. பாவாடைய தூக்கிட்டு படுக்கறேன்” என்றபடி அவனை நெருங்கிப் போய் இடித்தபடி நின்றாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்தான். ரேவதி அவனுடன் இணைந்தாள். அவள் முகத்தை இழுத்து உதட்டில் முத்தமிட்டான். ரேவதி முகத்தை விலக்கினாள்.
“இப்ப என்ன அவசரம்னு வரச் சொல்லி போன் பண்ண?”
“பேசலாம்னுதான்” அவள் கழுத்தை தடவினான்.
“என்ன பேசணும்? அத போன்லயே பேசலாமில்ல?”
“போன்ல பேசினா.. கிஸ் யாரு தருவா? உன் வாசம் எப்படி வரும்?”
“அலையாத”