சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 45

அதிர்ச்சியில் இருந்த நவநீதன் இயல்புக்கு மீள.. சில நொடிகள் பிடித்தன.!! திறந்த வாய் மூடாமல்.. ரேவதியை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு.. அப்பறம் மெல்ல முனகினான். !!
” என்னக்கா சொல்ற.???”

” ஆமாண்டா ” ஒருவித வாஞ்சை உணர்வில்.. அவனை நெருங்கி உட்கார்ந்தாள். அவள் வாசம் அவனை தொட்டது. அவன் கையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு சொன்னாள். ”இப்பவும் நான் சொன்னதுல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா.. இப்பவே அவனுக்கு கால் பண்ணி கேட்டுப்பாரு..”

” ச்ச.. அப்படி இல்ல.. உன்ன நம்பறேன்.. ஆனா.. நீ எப்படி.. அவனை போயி.. ”

” ஏன்டா.. நான்லாம் லவ் பண்ணவே கூடாதா ?” என அவள் மெல்லிய சிரிப்புடன்.. கிண்டலாகக் கேட்டாள்.

” நான் அப்படி சொல்லல…” அவன் அடுத்த வார்த்தை சொல்லும் முன்.. அவள் வீட்டின் வாசலில் இருந்து குரல் கேட்டது.

”ரேவா.. ஏய் ரேவா.. ” அழைத்தது ரேவதியின் அம்மா. !!

” என்னம்மா.?” ரேவதி கத்திக் கேட்டாள்.

தன் கைக்குள் இருந்த அவன் கையை மெல்ல நகர்த்தி விட்டாள்.
”எங்கம்மா வந்தாச்சு . நாம அப்பறம் பேசலாம்..”

” தண்ணி குடு..” தொப்பென ஒரு சத்தம்.

ரேவதி எழுந்து சமையலறைக்குப் போனாள். நவநீதன் எட்டிப் பார்த்தான். தலையில் சுமந்து கொண்டு வந்திருந்த புல் கட்டை தொப்பென கீழே போட்டிருந்தாள். புடவை முந்தானையால் கழுத்து வியர்வையை துடைத்த ரேவதியின் அம்மா நவநீதனைப் பார்த்தாள்.
” யாரு.. நவநியா..?”

” ஆமாக்கா..” சிரித்தான் நவநீதன். ”நல்லாருக்கிங்களாக்கா.?”

” நல்லாருக்கன்டா சாமி.. நீ எப்ப வந்த.. ?”

” நேத்துக்கா.. ” எழுந்து முன்னால் போனான். ”பில்லு மாடுகளுக்காக்கா..?”

” ஆமாடா ராஜா.. மாடுகள மேய்க்க விட்டா.. மேவு பத்தறதில்ல. ஒரு மாடு வேற கண்ணு போடற மாதிரி இருக்கு.. பில்லு கெடைக்கறதும் கஷ்டம்தான்..”

” எத்தனை மாடுக்கா இருக்கு..?”

” மூணு உருப்புடி இருக்கு. ரெண்டு கறக்குது.. சொசைட்டிக்கு அளவா..”

ரேவதி தன் அம்மாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கி முகத்தைக் கழுவி விட்டு அன்னாந்து குடித்தாள் அவள் அம்மா. நவநீதன் உடனே கிளம்பத்தான் நினைத்தான். ஆனால் அதற்குள் அவள் அம்மா.. தன் துக்கத்தை கொட்டி அழ ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில் அவள் மனதில் இருந்த.. ரேவதி கல்யாணம் பற்றின அத்தனை துயரங்களையும் அவனிடம் சொல்லித் தீர்த்தாள்.. !!

மாலை நேரச் சூரியனின் மறைவை நோக்கி சிகரெட் புகையை ஊதிவிட்டு. . நவநீதனைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டான் அன்பு.
” யாரு.. ரேவா சொன்னாளா .?”

”ம்.. ” அவனையே இமைக்காமல் பார்த்தான் நவநீதன். ”அது சொன்னத கேட்டு செம ஷாக்கா இருந்துச்சு. ”

” நம்பிட்டியா நீ.. ?”

” அது சொன்னது பொய் மாதிரி தெரியலடா.. ”

” அப்ப.. நம்பிட்ட.. ?” உற்றுப் பார்த்தான். மீண்டும் சிகரெட் உறிஞ்சி.. புகை ஊதினான்.

” நம்பாம.. ? ஏன்.. அப்ப அது உண்மை இல்லையா. ?”

” உண்மைதான். …” என இழுத்தான் அன்பு.

1 Comment

  1. அழகான கதை அடுத்த பகுதி please

Comments are closed.