இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 95

காலை 6:47 மணியளவில் இதமான சூரிய ஒளி ஜன்னலை கடந்து வந்து கிஷோரின் கன்னங்களை தடவி, ஆழமான நித்திரையில் மூடியிருந்த இமைகளை இழுத்து விட்டது. எப்பொழுது உறங்கினான் என தெரியவில்லை. 8 Missed calls & 2 Text messages from மச்சினிச்சி வனிதா என்று காட்டிக் கொண்டிருந்த கைபேசியை தூங்குவதற்கு முன்பு ஓரமாக வைத்த பொழுது அதில் மணி 4.12 என இருந்ததாக நியாபகம்.

தன் மனம் கவர்ந்த காதலியை நண்பன் கலவாடுவதைப் போல் ஒரு துர் சொப்பனம், மச்சினிச்சியிடம் வாங்கிய வசைகள் பின்னர் சொந்த தம்பியை காண கூடாத விதத்தில் கண்டது என்று அவன் வாழ்நாளில் ஒரு மோசமான நாளை எதிர் கொண்டு தன் வாழ்க்கை செல்லும் திசையில் இருந்து ஏதேனும் மாற்று வழி உண்டா?? என சிந்தித்து சிந்தித்து முழு இரவையும் கழித்தான்.

சிவந்த கண்களுடன் எழுந்து அமர்ந்தான், இரவு முழுவதும் பலவாறு சிந்தனைகள் அவன் மூளைக்குள் சுழன்று ஓடிக் கொண்டிருந்ததால், எழுந்ததும் அவன் தலை மிகவும் கனமாய் இருப்பது போல் உணர்ந்தான். கண்களில் முதலில் தென்பட்டது கட்டிலுக்கு அருகில் மேசையில் அவன் அம்மா வைத்து சென்ற பாசம் அதிகம் கலக்கப்பட்ட காஃபி ஆவியை நன்கு பறப்பி கொண்டிருந்தது தான்.

டம்ளரை கையில் எடுத்து சூடான காஃபியை உறிஞ்சினான், நறுமணம் வீசிய ஆவி அவன் அனுமதியின்றி நாசிக்குள் சென்றதும் தலையின் கனம் சற்று குறைந்தது. மறுபடியும் அவன் இதழ்கள் காஃபியை உறிஞ்ச, அதிலிருந்து பறந்த ஆவியை அவன் நாசி ஆழமாக உள்ளிழுத்தது. தலையில் இருந்த கனம் ஓரளவு மறைந்திருக்க, காஃபியை முழுவதும் குடித்து முடித்தான்.

ஒரு நீண்ட குளியல் போட்டு விட்டு வீட்டின்கூடத்திற்கு வந்து பொங்கல் வைக்கப்பட்டிருந்த தட்டின் முன்பாக அமர்ந்தான். எதிரில் அவன் அப்பா நாக ராஜனும், வலப்பக்கத்தில் அம்மாவும் அமர்ந்திருந்தனர்.

“அந்த பொண்ணு பேரு என்னடா? கலையா?”

“எந்த பொண்ணுப்பா கேட்குற.. அப்புடி யாரும் எனக்கு தெரியாதே”

“பாருடி ரொம்ப தான் நடிக்கிறான், டேய் உங்கம்மா நேத்தே சொல்லிட்டா டா,.. அப்பா உன்கிட்ட பிரண்ட்லீயா தானடா பழகுறேன், அப்டி இருந்தும் அப்பா கிட்ட சொல்லாம மறைக்கிற”

“ச்சோ!!! அப்டி இல்ல ப்பா, நானே இன்னும் தெளிவா எந்த முடிவும் எடுக்கல”

“அதுதான் உனக்கு பிடிச்சுருக்குல்ல டா. அப்புறம் என்ன தெளிவான முடிவு. அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.