என் காதலி Part 6 38

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி ரொம்ப உற்சாகத்தோடு ஆபிஸ் போனான் .பின் அன்று முழுதும் மிகவும் உற்சாகமாக வேலை பார்த்தான் .

அப்புறம் லஞ்ச் டைத்தின் போது மணி வருண் விக்கி எல்லாரும் ஒன்றாக சாப்பாடு வாங்க நின்ற போது மணி அவனிடிம் கேட்டான், என்னடா நாளை கழிச்சு திபாவளி என்ன பிளான்.

நான் என்ன ஃபேமிலி மேன் ஆ உங்களை மாதிரி கொண்டாட..
நிறைய சரக்க வாங்கி வச்சு
நைட் மோட்ட மாடிக்கு போய் வானத்துல வெடிக்கிற வெடியை பாத்துட்டு சரக்கு அடிக்க வேண்டியது தான்..

இல்ல எதும் தமிழ் பொண்ணுங்க மாட்டுன என்ஜாய் பண்ண வேண்டியது தான். என சொல்ல..

வருண் சொன்னா பாஸ் பேசாம எங்க விட்டுக்கு வாங்க நல்ல செலிப்பிரேட் பண்ணலாம் என்று சொல்ல…

மணி அதுல வேண்டா நீ என் விட்டுக்கு வாடா.. வள்ளி நல்ல சிக்கன் மட்டன் சமைப்பா.. ஒரு கட்டு கட்டிட்டு..
அப்படியே செலிப்பிரேட் பண்ணலாம் என்ன சொல்ற..

விக்கி சாப்பாடு என்றவுடன்..
(நேற்று சுவாதி சமையல் நியாபகம் வர அப்படியே அமர்ந்து இருக்க)

டேய் என்னடா யோசனை.

ஒன்னும் இல்ல என்று மழுப்பலாக சிரிக்க..

என்னடா ரெண்டு நாளா ரொம்ப பிரசாவும் சந்தோசமாவும் வேலை செய்யறியே என்ன விஷயம் என்றான் .அதாலம் ஒன்னும் இல்லடா என்றான் .

பின் மணி கேண்டின் சாப்பாடு வாங்க வர அதை பார்த்த விக்கி டேய் ஆமா நி‌‌ ஏண்டா இங்க எப்பயுமே வீட்டு சாப்பாடுதானே கொண்டு வருவ.

இன்னைக்கு என்ன புதுசா கேண்டின்ல வாங்கி சாப்புடுற ஏன் வள்ளிக்கு என்ன ஆச்சு என கேட்டான் .அது வள்ளிக்கு இப்ப 5 மாசம் ஆச்சா அதுனால அவள அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்னு சொல்லி நான்தான் சமைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ,அதான் கேண்டின் சாப்பாடு என்றான் .

அப்பறம் எப்படி நாளை கழிச்சு சமைப்பாங்க என வருண் கேக்க
அன்னைக்கு வேற வழி இல்ல சமைச்சு தான் ஆகணும்..

அப்புறம் வருண் விக்கிக்கு மணி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட ஆரம்பிக்க. விக்கி அதை எடுத்து வாயில் வைத்தான் . ஆனால் அதன் சுவை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .

காரணம் இரவு அவன் சாப்பிட்ட சுவாதியின் சாப்பாடு அந்த சாப்பாட்டின் ருசி இன்னும் அவன் நாவிலே இருந்தது .அதையும் இதையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு அந்த டேஸ்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அதனால இதை சாப்பிட்மாலே இருக்காலம் என்று நினைத்து கொண்டான் .

அவன் சாப்பாடு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை பார்த்து மணி கேட்டான் ஏண்டா சாப்பட்ட ஒதுக்கி வைக்கிறே என கேட்டான் . மணி நீ கேட்டலே ஏன்டா ரொம்ப பிரசா இருக்கேன்னு ஏன் தெரியுமா என கேட்டான் .

ஏன்டா என்றான் மணி நேத்து ஒரு இடத்துல சோறு சாப்பிட்டேன் . அப்படியே நம்ம தமிழ் நாட்டு சமையல் இன்னும் சொல்ல போனா எங்க அம்மா சமைச்ச மாதிரி இருந்துச்சு அந்த சாப்பாட சாப்பிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறும் நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு நிம்மதியா தூங்கினேன்.

அதான் நான் பிரசா இருக்க காரணம் . அதான் அப்படி ஒரு நல்ல சாப்பட சாப்பிட்டு இப்படி ஒரு சாப்பட சாப்புடுனுமான்னுதான் சாப்பிடல என்றான் விக்கி .ம்ம் அப்படி என்ன நல்லா இருந்துருக்க போகுது என் பொண்டாட்டி சமையல விடவா என்றான் மணி .

ம்ம் போடா நாந்தேன் உன் பொண்டாட்டி சமையல் எல்லாம் அதுல பாதி கூட வராது என்றான் விக்கி . அப்படி எங்க பாய் சாப்பிட்டிங்க ஹோட்டல் பேர சொல்லுங்க என்றான் வருண் .

ஆஹா கரெக்ட்டா மாட்டி விடரதுக்குன்னே வருது பாரு என்று நினைத்து கொண்டு அது ஒரு சின்ன ஹோட்டல்டா உனக்கு தெரியாது அத பத்தி என்றான் விக்கி .

அதை கேட்டு பாஸ் மும்பைல எனக்கு தெரியாத இடம் வேறயா இருக்க போகுது நீங்க எங்க சாப்பிடிங்க சொல்லுங்க என்றான் வருண் ,ஆமாடா சொல்றா ஒரு நாள் நானும் சாப்பிடனும் அப்படி என்ன அது என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு பாக்கணும் என்றான் மணி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *