எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

“பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. ‘தாங்க முடியலைடா சாமி’ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! ‘இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா’ன்னு கதர்றான்..!!”

“இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!” சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது.

“நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த ‘லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..’ இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!”

அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ‘டாடீஈஈ..!!’ என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார்.

“ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!” என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார்.

“ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??” பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள,

“இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!”

அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள்.

“இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!”

“ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??”

“சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!”

“அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!”

“ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!” சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார்.

“அப்பப்பப்பா…!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??”

அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார்.

“இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??”

“என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!” பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது.

“ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??”

“இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!”

“ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!”

“ஏன் அப்படி சொல்றீங்க..??”

“இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??”

“இ..இல்ல.. ஏன்..??”

“இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு… அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??”

“நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!” பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க,

“கிழிச்சான்…!!!!” அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள்.

“இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!”

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *