எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

“ஸாரி டாடி..!! தமிழ் ரசிகர்களுக்கு அப்படி ஒரு தாங்க முடியாத துயரத்தை குடுக்குறதுக்கு நான் தயாரா இல்ல..!!” அசோக் கிண்டலாக சொன்னதை கேட்டு பாரதி சிரிக்க, மணிபாரதி டென்ஷன் ஆனார்.

“ஏண்டா.. நான் எழுதுன ஸ்டோரிலாம் உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா..??”

“அப்படி இல்ல டாடி.. உங்க ஸ்டோரின்னு இல்ல.. எந்த லவ் ஸ்டோரியும் எனக்கு பிடிக்கல.. ஒரே வெறுப்பா இருக்கு..!!”

“ஓஹோ.. அந்த வெறுப்புலதான் அந்த ப்ரொட்யூசர்கூட சண்டை போட்டுட்டு வந்தியா..??” சங்கீதா மீண்டும் கிண்டலாக ஆரம்பித்தாள்.

“என்னது..?? சண்டை போட்டானா..??” பாரதியும், மணிபாரதியும் இப்போது ஒன்றாக அதிர்ந்தார்கள்.

“அந்த கதை தெரியாதா உங்களுக்கு.. கிஷோர் எனக்கு எல்லாம் சொல்லிட்டான்..!! இருங்க.. இவன் என்ன பண்ணான்னு சொல்றேன்..!!” சங்கீதா ஆர்வமாக,

“ஏய்.. உன் வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா..?? சும்மா நொனநொனன்னு..!!” அசோக் தங்கையிடம் சலிப்பாக சொன்னான்.

“ஏன்.. சொன்னா என்ன ..?? நான் சொல்லுவேன்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. கம்னு இரு..!!”

“முடியாது போடா..!!”

திமிராக சொன்ன சங்கீதா கிஷோர் தன்னிடம் சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் தங்கையை முறைத்து பார்த்தான். அவனுக்கு.. சங்கீதாவிடம் உளறியிருக்கிறான் என்று கிஷோர் மீதும் கடுப்பு.. இவள் வாயை அடைக்க முடியவில்லையே என்று சங்கீதா மீதும் எரிச்சல்..!! அசோக் இரண்டுக்கும் சேர்த்து ஒரே தீர்வாய் யோசித்தான்..!!

“கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை..” சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து,

“இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!” என்றான்.

“என்ன..??”

“நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!”

“ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??”

“புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குறேன்ல..??” என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான்.

“எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? – ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!”

“ப..பரவால.. சொல்லு..!!”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??”

“ஆமாம்..!! சொல்லு..!!”

“ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! ‘உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா’ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!”

“ஏ..ஏன்..??” கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *