எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 174

மதுரைக்கருகே ஒரு சிற்றூரில்.. எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்துவிட்டு.. காலையிலும், மாலையிலும் அடுப்பூதுவதை தவிர.. வேறு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் பாரதி..!! வெட்டி நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாது.. கிழிந்த காகிதத்துண்டு எதுவும் கீழே கிடந்தால் கூட.. அது எவ்வளவு சிதிலமடைந்த நிலைமையில் கிடைத்தாலும்.. எடுத்து படித்துக் கொண்டிருப்பாள்..!! வாரமலரில் வெளியான அந்த ‘உள்ளம் இரண்டு’ பாரதியின் கண்ணில் பட்டுவிட்டது.. உருகிப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. பித்துப் பிடிக்காத குறை..!! கதை ஆசிரியரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்ற.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டையில் தனது பாராட்டை எழுதி அனுப்பினாள்..!!

தன்னுடைய எழுத்துக்கு முதன்முறையாக ஒரு விசிறி.. அதுவும் பெண் விசிறி.. அதனினும் திருமணம் ஆகாத பெண் விசிறி.. பூரித்துப் போனார் பிச்சுமணி..!! உடனே பதில் அனுப்ப நினைத்தார்.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டை வாங்க அஞ்சலகத்துக்கு ஓடினார்..!! அந்த சின்ன அட்டையில் எத்தனை நன்றிகளை அடக்க முடியுமோ.. அத்தனையும் அடக்கி எழுதி.. அப்படியே மட்டையாக மடங்கி.. ஒரு பதில் அனுப்பினார்..!! ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து உடனே தனக்கு பதில் வந்துவிட்டதில்.. புளங்காகிதம் அடைந்து போனாள்.. பாரதி..!!

கதை பிரசுரம் ஆன துணிச்சலும்.. பாரதியின் மடல் தந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள.. பிச்சுமணி அதன்பிறகு நிறைய கதைகளை சுட ஆரம்பித்தார்..!! சுட்டதில் நிறைய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.. பிச்சுமணி, பாரதியின் அட்டை பரிமாற்றமும் தொடர்ந்தது.. அரசாங்க கஜானாவிலும் நிறைய அஞ்சு பைசாக்கள் குவிய ஆரம்பித்தன..!! ஆரம்பத்தில் கதை பற்றி பேசிய பேச்சு.. அப்புறம் நட்பாக மாறி.. பிறகு காதலாக கனிந்து.. உருகி.. ஓடி.. அஞ்சல் அட்டை வழியாக ஒழுக ஆரம்பித்தது..!! மாதவரத்தில் இருந்து மதுரை வரை அஞ்சல் அட்டையை தூக்கி சுமக்கும் போஸ்ட்மேன்கள், இவர்களுடைய அட்டைகளுக்கு ‘Followers’ ஆக ஜாயின் செய்து கொண்டார்கள்..!! அஞ்சலகத்தில் குவிந்து கிடக்கும் அட்டைகளில் இவர்களுடைய அட்டைகளை தேட ஆரம்பித்தனர்..!! ‘பாரதியே.. பார் ரதியே.. என்னைப்பார் ரதியே..!!’ என்று பிச்சுமணி பாரதியை நினைத்து அச்சுபிச்சுத்தனமாக எழுதுகிற கவிதையை, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற தபால்நிலையத்தில் முத்திரை குத்துகிற ஒருவர் படித்து, ‘பேஷ்.. பேஷ்.. கவிதை ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு..’ என்று உசிலைமணி ஸ்டைலில் பாராட்டிவிட்டு முத்திரை குத்துவார்..!!

“உன் ஆளு கதை இந்த வாரம் கல்கில வருதாம்மா.. மறக்காம படிச்சுடு..!!” – அஞ்சல் அட்டையை நீட்டியவாறே போஸ்ட்மேன் சொல்லும்போதே, பாரதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.

“ஐயோ.. அடுத்தவங்களுக்கு வந்த போஸ்ட் கார்ட்லாம் படிப்பிங்களாண்ணே..?? ப்ளீஸ்ண்ணே.. படிக்காதிங்கண்ணே..!!” – குனிந்த தலை நிமிறாமல் கெஞ்சலாக சொல்வாள்.
“ஹாஹா.. பயப்படாதம்மா.. படிக்க கூடியதை மட்டுந்தான் நான் படிப்பேன்..!!” – அவர் சிரிப்புடன் சொல்லிவிட்டு சைக்கிளை மிதிப்பார்.

பாரதி இந்தமாதிரி முகம் தெரியாத ஒருவருடன் அஞ்சல்வழிக்காதல் பயிலுவது அவளுடைய வீட்டுக்கு ஒருநாள் தெரிந்து போனது. கொதித்துப் போயினர். அவளுக்கு உடனே திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வீட்டுச்சிறை வைத்தனர். பாரதி சற்றும் மனம் தளரவில்லை. வீட்டு சிறையில் இருந்து தப்பித்து ஓடி, தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கிருக்கும் அரதப்பழசான டெலிபோனில் சென்னைக்கு ட்ரங் கால் புக் செய்து பேசி, ஒருவழியாக பிச்சுமணியை பிடித்தாள். அவரும் அவளை உடனே மதராசபட்டினத்துக்கு வந்து சேர சொன்னார். சென்னைக்கு ரயில் ஏறிவிட்டாள் பாரதி..!! பிறகு சென்னை வந்து.. காதலனை கைபிடித்து.. பிற்காலத்தில் அசோக், சங்கீதா ஆகிய அரிய செல்வங்களை ஈன்றெடுத்து..

திருமணம் ஆனபிறகு பிச்சுமணி வேறு புனைப்பெயரில் கதை எழுத துவங்கினார்.. தன்னுடைய கதைக்காக படங்கள், பிற புதினங்களில் இருந்து பாதியை உருவுகிற பிச்சுமணி, புனைப்பெயருக்காகவும் பாதியை தன் மனைவியின் பெயரில் இருந்து உருவிக்கொண்டார்.. அப்படி உருவித்தான் மணிபாரதி உருவானார்..!! அன்றிலிருந்து மணிபாரதியின் எழுத்துப்பயணம் நிற்கவே இல்லை.. காசாளராக வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதுவதை கண்டின்யூ செய்தார்..!! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.. அவ்வளவும் காதல் கதைகள்தான்.. காதல் ரசத்தின் கடைசி சொட்டையும்.. கருணையே இல்லாமல் கசக்கி பிழிந்து சாறெடுத்துத்தான்.. தனது கதைகளையே அவர் எழுதுவது..!!

சரி.. குவிஸ்க்கு ஆன்சர் கெஸ் செய்தீர்களா..?? நானே சொல்கிறேன்.. விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!! வீட்டு சிறையில் இருந்த பாரதி.. பிச்சுமணியுடன் இணையவேண்டும் என்று போட்ட ப்ளான்.. நாராயணசாமி – கோமளவல்லி அண்ட் கோ போட்ட ப்ளான் மாதிரி பக்கா ப்ளான் எல்லாம் இல்லை..!! ஒரு அவசரமான அவசியத்தில் போட்ட அரைகுறை ப்ளான்..!! அதனால்தான்.. வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும்போது.. அடுக்களையிலோ, அரிசிப்பானையிலோ அம்மா ஒளித்து வைத்திருக்கிற பணத்தை அபேஸ் செய்துகொண்டு எஸ்கேப் ஆகவேண்டும் என்ற அறிவு.. பாரதிக்கு இல்லவே இல்லை..!! அவளுக்கு வழக்கமாக அஞ்சல் அட்டை நீட்டும் போஸ்ட்மேன்.. தபால் நிலையத்தில் தஞ்சமும் கொடுத்து, மெட்ராசுக்கு ட்ரங் கால் புக் செய்து கொடுத்ததும் இல்லாமல்.. அவளுடன் ரயில்நிலையம் வரை சென்று.. யாரோ மருதப்பனின் மகன் மயில்சாமிக்கு வந்த மணியார்டர் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து.. அவளை பத்திரமாக ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார்..!! ‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவ’னின் பெயர்.. அசோகன்..!!

1 Comment

  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Comments are closed.