எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 171

“நடிக்கிறான் பாரு.. திருட்டுப்பய.. திருட்டுப்பய..!! உண்மையை சொல்லுடா..!!” சங்கீதா கத்தினாள்.

“ஏய்.. எதுக்குடி இப்ப அவனைப்போட்டு திட்டுற.. சரி நீ சொல்லு.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??”

“ம்ம்ம்..?? நல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கான் மம்மி உன் புள்ளை..!!” சங்கீதா சொல்லவும் அசோக்கின் அம்மா அதிர்ந்தாள்.

“என்னடா சொல்றா இவ..??” என்று மகனை திரும்பி பரிதாபமாக பார்த்தாள்.

“ஐயோ.. இ..இல்ல மம்மி.. இவ சும்மா சொல்றா..!!”

“ஏய்.. யாருடா சும்மா சொல்றா..?? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு.. கிஷோர் எல்லாம் சொல்லிட்டான்..!!”

சங்கீதா ஒருமாதிரி பெருமையாக சொன்னாள். கிஷோர் உளறிவிட்டான் என்று தெரிந்ததுமே, அசோக் அப்படியே நொந்து போனான். அதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று புரியாமல், இமைகளை மூடி நெற்றியை பிசைந்தான். பிறகு தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்.

“பாரு.. உன் பச்சைப்புள்ள லட்சணத்தை..!!”

அம்மாவுக்கு சூட்டை கிளப்பிவிட முயன்றாள் சங்கீதா. ஆனால் அவளோ ‘என்னடா மகனே இதெல்லாம்..?’ என்பதுபோல அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அசோக்கின் அப்பா சற்றே கடுமையான குரலில் அவனிடம் சீறினார்.

“ஏண்டா.. பொறந்த நாளும் அதுமா போய்.. குடிச்சுட்டு வந்திருக்கியா..?? நீலாம் எப்படிடா உருப்படப் போற..??” என்று ஆரம்பிக்கவுமே, அசோக்கின் அம்மாவுக்கு பொறுக்கவில்லை.

“ப்ச்.. இப்போ எதுக்கு தேவை இல்லாம கத்துறீங்க..?? ஏ..ஏதோ.. பொறந்த நாளுன்னு ஒரு ஆசைல பண்ணிட்டான்.. விடுங்க..!! உங்கள மாதிரி வாரத்துக்கு ஒருதடவைன்னு கணக்கு வச்சா குடிச்சுட்டு இருக்கான்..??” என்று கணவரை பார்த்து கத்தி, அவரை கப்சிப் ஆக்கினாள். மகளையும் ‘ஐயையே.. அவ்ளோதானா..??’ என்று மண்டை காய விட்டாள். அப்புறம் மகனிடம் திரும்பி,

“சரி போ.. கை கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடு..!!” என்று எதுவுமே நடவாத மாதிரி கனிவாக சொன்னாள்.

“ஹாஹா.. அதெல்லாம் தொரை வெளிலயே நல்லா கொட்டிட்டு வந்துட்டாரு மம்மி..!! கிஷோர் அதையும் சொல்லிட்டான்..!!” சொல்லிவிட்டு சிரித்த தங்கையை, அசோக் இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

“என்னடா.. சாப்பிட்டு வந்துட்டியா..??” அம்மாவுடைய குரல் இப்போது நிஜமாகவே ரொம்ப பரிதாபமாக ஒலித்தது.

“ம்ம்..!!”

“ப்ச்.. என்னடா நீ.. பொறந்த நாளும் அதுவுமா.. நான் உனக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு உக்காந்திருக்கேன்..?? சரி.. மம்மி உனக்காக ஸ்பெஷலா ஹப்ஷி அல்வான்னு ஒன்னு பண்ணுனேன்.. அதையாவது கொஞ்சம் சாப்பிடுறியா.??” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கம் சங்கீதா களுக் என்று சிரித்தாள்.

“ஏய்.. என்னடி இளிப்பு..??” அம்மா திரும்பி பார்த்து சீறவும் சங்கீதா வாயை மூடிக்கொண்டாள். அசோக்கின் அப்பா இப்போது கிண்டலாக சொன்னார்.

“ப்ச்.. பொறந்த நாளும் அதுவுமா கப்ஸி பெப்ஸின்னு ஏண்டி அவனைப் போட்டு வதைக்கிற.. எங்களுக்குத்தான் வேற வழி இல்ல.. அவனையாவது விடு.. பாவம்..!!”

“ம்ம்.. ஏன் பேச மாட்டீங்க.. அப்பாவும், மகளும் நல்லா தின்றதையும் தின்னுப்புட்டு..?? குடுக்குறப்ப வேணான்னு சொல்றதுக்கு என்னவாம்.. வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தீங்க..??”

‘ம்க்கும்.. நீ கிண்டுன அல்வாவைத்தான் வச்சிருந்தேன்..!! வேணாம்னா விடுற ஆளா நீ..’ அப்பா வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.

“என்னது..?? என்ன சொன்னிங்க இப்போ..??”

“அவங்க கெடக்குறாங்க விடு மம்மி.. நீ போய் அல்வா எடுத்துட்டு வா.. நான் சாப்பிடுறேன்..!!”

அசோக் அந்த மாதிரி இடையில் புகுந்து சாந்தமாக சொன்னதும், அவன் அம்மாவின் டென்ஷன் சுத்தமாக வடிந்து போனது. அவளுடைய முகம் முழுதும் பூரிப்பும் மலர்சியுமாய் மாறிப்போனது.

“ம்ம்ம்.. ஒரு நிமிஷம்டா கண்ணா.. உக்காரு.. மம்மி எடுத்துட்டு வர்றேன்..!!” என்றவாறு கிச்சனுக்கு ஓடினாள்.

அசோக்கின் அப்பா அம்மாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உங்களுக்கு ஒரு கெஸ் குவிஸ்..!! அசோக்குக்கு அவனுடைய பெயரை யாருடைய நினைவாக அவன் பெற்றோர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?? கெஸ் செய்யுங்கள்..!!

நாராயணசாமி அசோக்கின் அப்பாவுக்கு வைத்த பேர் பிச்சுமணி..!! ஆனால்.. அசோக்கின் வீட்டுக்கு யாராவது வந்து ‘பிச்சுமணி இருக்காரா..??’ என்று கேட்டால்.. வீட்டில் இருப்பவர்களே சில வினாடிகள் குழம்பி, பிறகு யோசித்துதான் ‘ம்ம்.. இருக்காரு இருக்காரு.. உள்ள வாங்க..’ என்பார்கள். இதே ‘இங்க மணிபாரதி வீடு எதுங்க..?’ என்று அந்த ஏரியாவில் சென்று எவரைக் கேட்டாலும் இவர்கள் வீட்டை நோக்கி சரியாக கை நீட்டிவிடுவார்கள்..!!

பி.யு.ஸி படிக்கிற காலத்திலேயே பிச்சுமணிக்கு கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் வந்து தொலைத்தது. எந்த நேரமும் எதையாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். கல்லூரி படிக்கிற காலத்தில் தான் கிறுக்கியதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்புகிற பாவச்செயலையும் செய்யத் துணிந்தார். ஆனால் நல்லவேளையாக இவர் அனுப்பிய கதைகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக இவரிடமே திரும்பி வந்து சேர்ந்தன. கல்லூரி முடித்து கனரா வங்கியில் காசாளராக சேர்ந்தபின்னும், கதை எழுதும் ஆர்வம் அவரை விட்டு காணாமல் போனதா என்றால்.. போகவில்லை..!! தொடர்ந்து பத்திரிக்கைகளை நோக்கி கதை அம்பு எய்து கொண்டே இருந்தார்.

அப்படித்தான் ஒருமுறை.. அப்போது வெளிவந்திருந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் கதையை.. கொஞ்சம் உல்ட்டா செய்து ‘உள்ளம் இரண்டு’ என்ற தலைப்பில் இவர் ஒரு கதை எழுதி அனுப்பி வைக்க.. எடிட்டரின் கவனக்குறைவாலோ.. எப்படியாவது பக்கத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ.. அந்த வார வாரமலரில் அந்தக்கதை வெளியாகியது.. ஒரு எழுத்தாளர் பிறந்து தொலைத்தார்..!!

1 Comment

  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Comments are closed.