எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். ‘என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!’ – இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. ‘சிங்’க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!!

சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. ‘நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..’ என்று அவன் ஒருநாள் சொன்னபோது, ‘ம்ம்.. ஆமாம்..’ என்று வெட்கப்பட்டாள். ‘ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..’ என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, ‘ஐயோ.. நான் மாட்டேன்பா..’ என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் ‘வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!’ என்று சொல்லிவிட்டான். இவளும் ‘ரியல்லி..?? தேங்க்ஸ்..!!’ என்று அப்படியே பூரித்துப் போனாள்.

அப்புறம் இவளாகவே அடிக்கடி அவனிடம் பாடிக்காட்டுவாள். அவன் வீட்டுக்கு வராத நாட்களிலும், ஃபோன் போட்டாவது தன் சொந்த காசில் அவன் காதுக்குள் கானமழை பொழிவாள். அவனும் வஞ்சகமில்லாமல் வாய் நிறைய இவளை பாராட்டுவான். ஒருநாள் அப்படித்தான்.. பார்க் பெஞ்சில் தனியாக அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் ஒரு பாடல் பாடினாள். பாடி முடித்ததும் அவன் ‘லவ்லி வாய்ஸ்..’ என்று சொல்வான் என்று, அவள் தலைகுனிந்து ஆசையுடன் காத்திருக்க, அவனோ ‘லவ் யூ..!!’ என்று சொல்லி குண்டை தூக்கி போட்டான்.

அவ்வளவுதான்..!! சங்கீதா மிரண்டு போனாள். வெறிநாய் ஒன்று பின்னாலேயே விரட்டுவது போல, திடுதிடுவென ஒரே ஓட்டமாய் வீட்டுக்கே ஓடிப்போனாள். பெட்டில் விழுந்து, இரண்டு தலையணைகளை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டும், மார்புக்குள் எழுந்த படபடப்பு அடங்கவே மறுத்தது. ‘டெம்ப்ரேச்சர்லாம் நார்மலாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் உடம்பு மட்டும் உனக்கு இப்படி நடுங்குது..??’ என்று கவலையாக கேட்ட அப்பாவை பார்த்து, தெர்மாமீட்டர் கவ்விய வாயுடன் திருட்டுமுழி முழித்தாள்.

அன்றிலிருந்து ஒரு நான்கைந்து நாட்களுக்கு. அவள் கிஷோரை பார்க்கவில்லை.. பேசவில்லை.. முக்கியமாக அவன் காதில் பாடவில்லை..!! ஆனால்.. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான்..!! அந்த நான்கைந்து நாட்களும் அவளுடைய மனதுடன் சண்டை போட்டு.. கேள்வி கேட்டு.. விவாதம் செய்து.. விரல் நகங்களை எல்லாம் கடித்து துப்பி.. அதன்பிறகுதான் அந்த உண்மையை அவள் கண்டுபிடித்தாள்..!! உடனே.. அவளுடைய அறையை விட்டு ஓடிவந்து.. கண்டு பிடித்த உண்மையை.. நடுஹாலில் நின்று சத்தம்போட்டு கத்தினாள்..!!

“YESSSS….!! I’M IN LOVE….!!!!!”

கண்டுகொண்ட காதலை காதலனிடம் அறிவிக்காமல், ஹாலில் நின்று அவள் அவ்வாறு கத்தியதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்று ஏற்கனவே உங்களுக்கு புரிந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். சங்கீதாவும், கிஷோரும் இப்போது இருவீட்டார் சம்மதத்தோடு சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறாள். ‘மூத்தவனுக்கு முடிச்சுட்டுத்தான் எளையவளுக்கு..!!’ என்று அம்மா கறாராய் சொல்லிவிட்டதால், அசோக்கின் திருமணத்திற்காக இப்போது சங்கீதாவும், கிஷோரும் வெயிட்டிங்..!!

இப்போதும் சங்கீதா தினமும் கிஷோரின் காதில் பாடுகிறாள். அவன் பாராட்ட மறந்து போனாலும், இவள் மறவாமல் கேட்டு வாங்குகிறாள். ‘சினிமால ப்ளேபேக் பாடனுண்டா.. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்..’ என்று அவனை நச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். சரி.. இப்போது..

“பாருங்க டாடி.. சும்மா சும்மா என்னை அடிக்க வர்றான்..!!” என்று கத்திக்கொண்டே அப்பாவின் பின் சென்று பம்மினாள் சங்கீதா.

“பாரு மம்மி.. சும்மா சும்மா அவ என்னை கேலி பண்ணிட்டே இருக்குறா..!!” என்று குழைந்துகொண்டே அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு முறையிட்டான் அசோக்.

“ஏண்டா சின்னப்புள்ளையை போட்டு அடிக்க வர்ற..??” அசோக்கிடம் எகிறினார் அவன் அப்பா.

“ஏண்டி எந்த நேரமும் பச்சைப்புள்ளையை போய் கேலி பண்ணிட்டே இருக்குற.. கொழுப்பா உனக்கு..??” சங்கீதாவிடம் சீறினாள் அவள் அம்மா.

“ஆமாம்.. பச்சைப்புள்ளையாம் பச்சைப்புள்ளை..!! உன் பச்சைப்புள்ளை என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்குன்னு தெரியுமா உனக்கு..??” சங்கீதா அந்த மாதிரி திருப்பி கேட்கவும்,

“எ..என்ன.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??” என்று ஒருகணம் குழம்பிய அம்மா, அப்புறம் அவனிடமே திரும்பி,

“என்னடா பண்ணிட்டு வந்த..??” என்று கேட்டாள்.

“நா..நான்.. நான் என்ன பண்ணுனேன்.. நான் ஒண்ணும் பண்ணலையே..??” அசோக் தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றான்.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *