எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,

“ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!” என்று சண்டை போட்டாள்.

“குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!”

“ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!” சங்கீதா நக்கலாக சொல்ல,

“ஆ…மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!” என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.

சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.

“எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!” என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

“ஏய்.. சேனலை மாத்துடி..!!” அசோக் அவமானத்தில் கத்த,

“முடியாது போ..!!” பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

“ஹாஹாஹாஹா..!! ‘என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..’..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!”

“ஏய்.. ரிமோட்டை குடுடி..!!”

“ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!”

“ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!”

“அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!” என்று சிரித்தவள்,

“என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!” என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

“அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!” என்று கத்தினான்.

“முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!”

“ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

“இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! ‘என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை’..!!” சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

“ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??”

என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் ‘டாடீஈஈ..!!’ என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான்.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *