எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

“ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ
ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!”

“ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!”
அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

“அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..??
அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து
போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன்
கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!”

அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு
அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!!

“இந்தா..”

“என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??”

“இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!”

“எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!”

“இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு…!! கொண்டு போய் கொடு போ..!!” பாரதி
சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்.

“அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??”

“ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!”

அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. ‘சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..’ என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!!

“எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??”

“ம்ம்…??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!”

அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!!

‘அப்படி என்ன வேலை..??’ என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது.

“வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????”

காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள்.

“அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது… இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ… இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???”

சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே ‘வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??’ என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். ‘என்னாடி உங்க லாஜிக்கு..??’ என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். ‘இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!’

அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. ‘கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??’ என்று தோன்றியது. அப்புறம், ‘அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!’ என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி,

‘என்ன..??’ என்று சைகையால் கேட்டாள்.

‘பூஸ்ட்..!!’

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *