எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

“மம்மி..!!’

“ம்ம்..??”

“கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??” ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள்.

“இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!”

அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

“என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??”

“ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!”

“நல்லா தூக்கமா..??”

“செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!”

அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க,

“ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??” பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள்.

“தேங்க்ஸ் மம்மி..!!” அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான்.

“தேங்க்ஸா.. எதுக்கு..??”

“இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??”

“எப்படி சொல்றது.. ஹ்ம்ம்…. பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி..
லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!”

அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??”

“ம்ம்.. ஆயிடுச்சு..!!”

“அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ‘இவதான் மம்மி உன் மருமக..’ன்னு எவளையாவது
இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??” பாரதி குறும்பாக கேட்க,

“ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது
மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!” அசோக் சிரிப்புடன் சொன்னான்.

“என்ன..??”

“இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு
வச்சுக்கோ.. பட்டுன்னு ‘ஐ லவ் யூ..’ சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??” அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *