எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 31

“ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??”

“ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??”

“ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??”

“ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா ‘லவ் பண்ணு லவ் பண்ணு’ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??”

“நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??”

“எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??”

“பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! ‘அழகா இருக்காளே..’ன்னு தோணிருக்கலாம்.. ‘நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..’ன்னு நெனச்சிருக்கலாம்.. ‘இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்’னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??”

பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!!அவனையும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!!

“ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??”

“ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!”

“ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??”

“எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!”

“எப்படின்னா.. ம்ம்ம்ம்… பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க… எப்படி பேசினா ‘ச்சோ.. ச்வீட்..’னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??”

“ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!”

“அப்புறம்..??”

“நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!”

“நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??” அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

“போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!” பாரதி உறுதியாக சொன்னாள்.

“இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!”

“ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!” சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க,

“ம்ம்ம்…!!” அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.

“அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??” பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான்.

“ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!” என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *